குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரை விமர்சனம்

Casting : Yogi Babu, Senthil, Saravanan, Mayil Samy, Lissy Antony, Subbu Panchu, Imaya Varman, Advaith Jai Masthan, Vaigha Rose, Ashmitha Singh, Chitra Lakshmanan, Harika

Produced By : Meenakshi Amman Movies – Arunkumar Sammantham and N.Sangkar Dayal

கதை களம்

யோகி பாபு
அரசியலில் பிரபலமாக இருக்கிறார்
திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்கிறார். இதனால் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள். இவர்கள் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, இல்லையா? என்பதை தமிழக அரசியலையும், குடும்ப அரசியலையும் மையமாக வைத்துக் கொண்டு நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’
படம் முழுக்க அரசியல் நையாண்டியும் காமெடியும் கலந்து கட்டி சொல்லி இருக்கிறார்கள் படம் விறுவிறுப்பாகவும் சிரிக்கவும் செய்கிறது இயக்குனருக்கு வெற்றி

யோகி பாபு

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில்
நாயகன் ஆக நடித்தார்
அதன்பின் மண்டேலா படத்தில் நடித்த இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்

இந்த படத்தில் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது படம் முழுக்க சிறப்பாக நடித்திருக்கிறார் யோகி பாபுவிற்கு வாழ்த்துக்கள்
ஒரே குறை
யோகி பாபு கதையின் நாயகனாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், படத்தின் சில இடங்களில் திடீர் திடீரென்று தலைக்காட்டி மறைகிறார். அது மட்டும் தான்
யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து பலஇடங்களில் வெற்றி பெறுகிறார், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது
குழந்தைகள்

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள். அதில் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிக தெளிவாக நடித்திருக்கிறார்கள்.
நிறைய காட்சிகளில் ரசிக்கவும் வைக்கிறார்கள் யோகிபாபு உடன் கலந்து கட்டி ரசிக்க வைக்கிறார்கள்

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறுமி ஹரிகா பெடடாவின் நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

செந்தில்

கவுண்டமணி யோடு இணைந்து பல படங்களில் நகைச்சுவையை அள்ளிக் கொடுத்தவர் செந்தில் இந்த படத்தில் , அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவரது காட்சிகளில் அரசியல் வசனத்தை சாதாரணமாக பேசி கைதட்டல் பெற்றுவிடுகிறார்
மற்ற கலைஞர்கள்
மற்றும் படத்துக்கு சிறப்பு சேர்க்கும்
சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்
பல காட்சிகள் சிரிக்க வைத்திருக்கிறார்கள்

இசை

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவிலும் குறையில்லை.
காட்சிகள் கல்லுக்குள் ஜம்மென்று அமர்ந்து கொள்கிறது

படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ,
சிறப்பாக எடிட்செய்து இருக்கிறார்

இயக்குனர்

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அரசியலும் மக்களை ரசிக்க வைக்க நையாண்டியும் காமெடியும் கொடுத்து கலகலப்பாக இயக்கி இருக்கிறார்
இயக்குநரின் அரசியல் நையாண்டிகள் ரசிக்க வைக்கிறது குறிப்பாக யோகி பாபுவை எப்படி சிறப்பாக பயன்படுத்த முடியுமோ அப்படி அவருடைய கால்செட்டுக்கு தகுந்தபடி படமாக்கி இருக்கிறார்

சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.
தயாரிப்பாளருக்கு ஏற்ற சிக்கனமான பட்ஜெட்டில் பணம் எடுப்பது எப்படி என்று இயக்குனரை தெரிந்து படம் எடுக்கலாம் நிச்சயம் படம் அவருக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுக்கும்

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்
*Written & Directed by – Shankar Dayal.N
Producer : Arunkumar Sammantham, Shankar Dayal. N
Banner : Meenakshi Amman Movies
Cinematographer : J.Laxman MFI
Music Director – Saadhaga Paravaigal Shankar
Background score – John Robins
Editor : Richard Kevin
Art Director – C.K.Mujabir Rahmaan
Lyrics – Shankar Dayal.N
Singers – G.V.Prakash Kumar,Manasi, Junior Nithya, Priyanka
Stunt Director – Sudheesh
Choreography – Radhika,Abu & Chals
Costume : K.K.Dhanraj
Makeup -S.Karthik Kumar
Stills -K.Rajendran
Executive Producer – Pandya Nanmaran
Production Controller – P.Suriya Prakash,Nalladi Senai R.Rajaraman,M.V.Ramesh
Bengaluru Shooting coordinator – Murali Gunda
PRO : Sathish-sihva Team AIM*

என இந்த படத்தில் பங்கு பெற்ற நடிகர்கள் ,நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ,மற்றும் பி ஆர் ஓ அனைவரும் இப்படத்தின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள் படம் மக்களிடம் வரவேற்பு பெற்று நிச்சயம் வெற்றி அடையும்