மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார். இயல்பான நடிப்பு சொந்தக்காரர். இவர் இப் போது தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் மிகவும் மிகவும் வித்தியாசமான புரட்சிகரமான படத்தில் நடித்திருக்கிறார் பலரும் ஏற்று நடிக்க தயங்கும் வேடத்தில் துணிச்சலாக நடித்ததற்காக பாராட்டுக்கள்
இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
அவரின் இயக்கம் சீராக இருக்கிறது இன்று காலம் மாறி வருகிறது என்பதை தன்னுடைய இயக்கத்தின் மூலம் அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
இந்த படத்தில் லிஜோமோல்
ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். யாரும் ஏற்று நடிக்காத இந்த கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் படம் முழுக்க ஸ்கோர் செய்துள்ளார
இவருடன் அனுஷா,
காதலராக் நடித்திருக்கிறார் அனுஷா பார்வையில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது உறுதி யான நடிப்பு
இருவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது நிஜமான தன் பாலின காதலர்களை பார்த்தது போல இருந்தது இயக்குனர் தேர்வு கச்சிதமாக பொருந்தி போகிறது
ரோகினி, முற்போக்கு சிந்தனை உள்ள லட்சுமி என்ற கதா பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் தன் மகள் காதலிக்கிறேன் என்று சொல்லும் அந்த ஆரம்பக் காட்சியில் இருந்து எப்போது அந்த ஞாயிற்றுக்கிழமை வரும் என்று அவர் பரவசப்பட்டு, வெட்கப்பட்டு தீபா சங்கரிடம் சமைக்க சொல்வதிலிருந்து தன் மகள் காதலன் பெயரை கேட்டு தனக்கு வரப்போற மாப்பிள்ளைக்காக பரிசு எல்லாம் வாங்கி வைத்து அந்த ஒரு மணி நேரமும் ஒரு உண்மையான தாய் தன் மகளின் வருங்கால துணையை எப்படி எதிர்பார்ப்பார் அதை அப்படி கண் முன்னால் நிறுத்திவிட்டார் அந்த ஞாயித்துக்கிழமை வந்தவுடன் தன் மகள் அனுஷாவை பற்றி சொல்லும் வரை ரோகிணி முகத்தில் ஆயிரம் பரவசங்கள் அதற்கு பின் தன் மகள் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்த பிறகு அவர் வெடித்து கோபத்தின் உச்சிக்கே சென்று பொங்கி எழுவதும் நிஜமான ஒரு தாயின் வருத்தத்தை காண முடிந்தது தன் கணவன் டான்ஸ் டீச்சரோடு போய்விட்ட பிறகும் தன் மகளை பாசத்தோடு வளர்த்த இந்த தாயின் துடிப்பை இதைவிட வேறு யாராலும் சிறப்பாக நடித்து விட முடியாது நிச்சயம் பாராட்டுக்குரியவர் கிளைமாக்ஸ் காட்சி தீபா சங்கர் 500 ரூபாய் கேட்டதுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று சொல்லும் பொழுது இந்த சமுதாயத்துக்கு எப்படி எல்லாம் நாம் பயந்து நடுங்க வேண்டி இருக்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ரோகிணி தேர்வு மிக மிகக் கச்சிதம்தான்
*
வினீத்
சந்திரமுகி படத்தில் ஒரு டான்சராக பார்த்த நமக்கு இப்படி ஒரு அற்புதமான நடிப்பிற்கு தரக்கூடிய நடிப்பு பார்த்ததும் ஆச்சரியம் வெகு இயல்பாக தன் மகளை கூல்செய்து கண்டிஷன் போடும் பொழுது தான் ஏன் இரண்டாவது மனைவியை தேடி போனேன் என்று சொல்லும் பொழுதும் ஒரு வருடத்திற்கு நீங்கள் இருவரும் பிரிந்திருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடும்போது சூப்பர் சூப்பர் மனுஷன் எவ்வளவு இயல்பா எவ்வளவு எதார்த்தமாக நடித்திருக்கிறார்
தீபா சங்கர்
ஆரம்பக் காட்சியிலிருந்து படம் முடியும் வரை அசத்தலாக நடித்திருக்கிறார் தன் மகளின் வேதனையை சுமந்து கொண்டு வேலை செய்யும் ஒரு பரிதாபத்தாயாக ஓரின சேர்க்கையாளராக இருக்கும் அனுஷா, லிமோ கண்டு ஆனந்த கூத்தாடி அவர்களிடம் வெட்கப்பட்டு பேசும்போது ரோகினி இடம் பதுங்கிப் பதுங்கி தன் கருத்தை சொல்லும் பொழுது தீபா சங்கர் நடிப்பு ராட்சசி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்
கலேஷ் ராமனாத்
இந்தப் படத்தில் மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு நல்ல கதாபாத்திரம் தான் காதலித்த பெண் நன்றாக வாழ வேண்டும் அவருங சுதந்திரம் வேண்டும் அவள் நினைத்தபடி வாழ வேண்டும் என்று ரோகினியிடம் வாதாடும் போதும் வினீத் இடம் எடுத்துச் சொல்லும் பொழுதும் இவர் தான் மாப்பிள்ளை என்று ரோகினி இவரிடம் வெட்கப்பட்டு பேசும் போதெல்லாம் இவரும் அதற்கேற்றார் போல் நடிக்கும் பொழுது ஒரு கவிதை புத்தகத்தை வாசிப்பது போல அவ்வளவு கவித்துவமாக இருந்தது இவர் நடிப்பு சூப்பர்
நடன ஆசிரியராக வரும் வினீத்தின் இரண்டாவது மனைவியிடம் ரோகினி குழந்தை இல்லை என்று குத்தி காட்டும் பொழுது முக வருத்தத்தோடு போன் கட்செயும் அந்த ஒரே காட்சி போதும் அவர் நடிப்புக்கு
அனுஷாவின் ஃப்ளாஷ்பேக் கட்சியில் வரும் கணவரும் அப்பா எல்லோருமே இயல்பான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்கள்
அனைவரும் இயல்பாக நடித்தி ருக்கிறார்கள்
கதை களம்
தான் காதலிக்கும் அனுஷாவை, லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள். இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்த காதல் சரியானது அல்ல என சமாதானம் செய்ய
தாயும் தந்தையும் முயற்சி செய்வார்கள் அந்த முயற்சி வெற்றி பெற்றதா?
அனுஷா, ஷியாம் இருவரும் தம்பதிகளாக மாறினார்களா?
பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் குழந்தை எப்படி பிறக்கும் சந்ததி எப்படி வளரும் என்பதற்கு இருவரும் பதில் சொன்னார்களா?
இந்த சமுதாயம் உங்கள் இருவரையும் மணமக்களாக பார்க்க ஒப்புக் கொள்ளாது என்று சொன்னதற்கு அவர்களின் பதில் என்ன?
பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் முதல் இரவில் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதில் என்ன?
உங்களில் யார் அப்பா அம்மா என்ற கேள்விக்கு அவர்கள் பதில் என்ன?
இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறது இந்த காதல் என்பது பொதுவுடமை
இப்படம் 54 வது இந்தியன் பானரோமா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ஜெயபிரகாஷ் நாராயணன்
சமுதாயத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஒரு புரட்சிகரமான விஷயத்தை பெண்ணுக்கும், பெண்ணுக்கும், காதல் என்பதை வெளிச்சம் போட்டு ஊருக்குள் பேச வைக்க வேண்டும் என்று அற்புதமான கதையை கொடுத்திருக்கிறார் இயக்கம் மிக நன்றாக இருக்கிறது காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதையாய் வருகிறது
லிமோ ஜோஸ் அனுஷா இருவரும் ஷாம் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் தங்கள் காதல் நடிப்பை தத்துவமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இருவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது
Presented by: Jeo Baby and G. Dhananjeyan
Marketed and Distributed by: Creative Entertainers and Distributors (CEAD)*
தயாரிப்பாளர் தனஜெயன் அவர்கள் ஒரு படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்றால் நிச்சயமாக அந்த படத்தில் கதை இருக்கும் வித்தியாசம் இருக்கும் படம் பேசப்படக்கூடிய படமாக இருக்கும் அப்படிப்பட்ட படம் தான் இது
கண்ணன் நாராயணன் இசை பாடல்கள் அருமை
உமாதேவி பாடல்கள் எழுதி இருக்கிறார் ரசிக்க வைத்திருக்கிறார் தீயும் தீயும் என்ற பாடலும் நெஞ்சே என்ற பாடலும் ரசிக்க வைக்கிறது
ஸ்ரீ ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு கண்ணுக்குள்ளே நிற்கிறது கவிதையாய் இருக்கிறது
டேனி சார்லஸ் படத்தொகுப்பாளர் கச்சிதமாக பணத்தை எடிட் செய்திருக்கிறார்
ஆறுச்சாமி ஆர்ட் டைரக்டர் அற்புதமான வடிவமைப்பு
சுபஸ்ரீ ,கார்த்திக் விஜய் ,காஸ்ட்யூமராக பணிபுரிந்து இருக்கிறார்கள் மிகவும் நன்றாக இருக்கின்றது
இந்தப் படத்திற்காக உழைத்திருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகைகள் அனைவரும் சிறப்பாக தங்கள் பங்குக்கு ஒரு வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள் இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் குணா அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் காதல் என்பது பொதுவுடமை ஒரு புரட்சிகரமான படம் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் நிச்சயம் அனைவரும் கண்டு களிக்கலாம் குடும்பத்தோடு பார்க்கலாம்
