கண்நீரா திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

மலேசிய தமிழர்கள் உருவாக்கியுள்ள படம், ‘கண்நீரா’. மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார்.

மித்திரன் என்ற கதாபாத்திரத்தில் காதலுக்காக உருகி உருகி காதலிக்கும் அருமையான கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறார் தன்னுடைய முதல் காதலி சிறிசாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் கேட்க அவர் காலம் கடத்த இருவருக்குள் மோதல் ஏற்பட்டு பிரேக்கப் ஏற்படுகிறது இரண்டாவது காதலாக மலர்கிறது மித்திரனுக்கு நீரா மீது அந்த காதல் ஆவது வெற்றி பெற்றதா மித்ரன் முதல் காதலியாக சாந்தினி கவுர்,

அழகு பதுமையாக வருகிறார் தன்னுடைய இலட்சியத்தில் முன்னேற வேண்டும் என்று காதலை தியாகம் செய்கிறார் பிறகு விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழும் நல்ல கதாபாத்திரம் அவருக்கு

மாயா கிளம்மி,

படத்தின் மெயின் கதாநாயகி நீரா இவர்தான் படம் முழுக்க வருகிறார் இவர் அருணை காதலித்து பின்னர் மித்திரன்
தன்னை ஒரு தலையாக காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்
மித்திரனுக்கும் மீராவுக்கும் மோதலில் தொடங்கி வாழ்க்கை தேடலில் முடிகிறது

நந்தகுமார் என்கிற கதாபாத்திரத்தில்
பைலட்டாக அருண் மாயாவை(நீரா) காதலித்து பின்னர் காதல் கை கூட முடியாமல் அழும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது

இந்தப் படத்துக்கு ஹரிமாறன் இசை அமைத்துள்ளார்.
பின்னணி இசையும் அவ்வப்போது வரும் ஏ ஆர் ரகுமான் பாடலும் ரசிக்க வைக்கிறது

படத்தின் கதை எழுதி இணை இயக்குநராக கவுசல்யா நவரத்தினம் பணியாற்றியுள்ளார்
ரசிக்க வைக்கும் ஒரு காதல் கதையை திகட்ட திகட்ட இளமை ததும்ப கொடுத்து இருக்கிறார் எந்த இடத்திலும் வன்முறை இல்லாமல் காமெடிக்காக திரு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி சிறப்பாக எழுதி இருக்கிறார் வாழ்த்துக்கள் மேம்

.
கதை களம்

கண்ணீரா யதார்த்தமான காதல் கதை. நூற்றுக்கு 90 சதவிகிதம் பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள். காதலர்களுக்கு என்ன மாதிரியான அணுகுமுறை தேவைப் படுகிறது என்பதை கமர்ஷியல் கலந்து ஜனரஞ்சக படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் முழுபடப்பிடிப்பும் மலேசியாவில் படமாக்கி இருக்கிறார்கள் காட்சிகள் ரிச் ஆக இருக்கிறது
மித்ரன், சிரிஷா, காதலர்கள் மித்ரன் திருமணம் செய்து கொள்ள நாயகியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான் ஆனால் நாகியோ நான் இன்னும் அடைய வேண்டிய இலக்கு வெகு தூரம் இருக்கிறது அதை அடைந்து விட்டு தான் திருமணம் பற்றி பேசுவேன் என்கிறாள்

இன்னொரு காதல் ஜோடியான அருண், நீரா , இருவரும் காதலிக்கிறார்கள் அருண் பைலட்டாக இருக்கிறார் நீரா மித்ரன் வைத்திருக்கும் கம்பெனியில் ஸ்டாப்பாக வேலைக்கு சேர்கிறார்

அருணுக்குதீடிரென வேலை போகிறது மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் இப்பொழுது
நீரா, அருணுக்கு உதவி செய்யத் துடிக்கிறாள் ஆனால் அருண் ஏற்க மறுக்கிறான்

மித்திரனும் சிரிசா இருவருக்கும்பிரேக்கப் ஆகிறது

மித்ரன் நீரா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ?

அருண் காதல் என்ன ஆனது ?

இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது கண்ணீரா

மலேசியாவில் முழு படப்பிடிப்படையும் நடத்தி இருக்கிறார்கள் காட்சிகள் அற்புதமாக இருக்கிறது ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்

ஆர்ட் டைரக்டர் அற்புதமாக பணி புரிந்திருக்கிறார் மித்ரன் ஆபீஸ் மற்றும் ,அவரது வீடு நீராவின் வீடு ,என எல்லா இடங்களும் ரசிக்க வைக்கிறது

காஸ்ட்யூமர், மற்றும் ஒப்பனையாளர், சரியான முறையில் வடிவமைத்திருக்கிறார்கள் நீிராவுக்கு மட்டும் கொஞ்சம் மேக்கப் அதிகமாக தெரிகிறது

படத்தொகுப்பாளர் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்திரி வைத்திருக்கலாம் கதைக்கு தேவை என்பதால் கொஞ்சம் நீளமாக விட்டு விட்டாரோ ?

படத்தின் இயக்குனர்
ஒரு காதல் கதையை திகட்ட திகட்ட இளமை புதுமை கலந்து கொடுத்து இருக்கிறார்

காதலர் தினம் அன்று வெளியாகும் இப்படம் நிச்சயம் காதலர்கள் கொண்டாடுவார்கள்

உத்ரா சார்பில் ஹரி உத்ரா இந்த படத்தையும் தயாரிப்பாளராக வினியோக உரிமை பெற்றுவெளியிடுகிறார் அவர் படங்கள் எல்லாம் வெற்றி பெற்று இருக்கிறது அதேபோல இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும்

மக்கள் தொடர்பாளர்
மனவை புவன்
படத்தை நன்றாக கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
:கண்ணீரா படத்தில் நடித்த நடிகர் நடிகைகள்

நடிகர்கள், நடிகைகள் :

கதிரவென் ( மித்ரன் )
சாந்தினி கவுர் ( ஶ்ரீஷா )
மாயா கிளம்மி ( நீரா )
நந்தகுமார் NKR ( அருண்)

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை மற்றும் இணை இயக்கம் கௌசல்யா நவரத்தினம்.
ஒளிப்பதிவு – ஏகணேஷ் நாயர்
இசை – ஹரிமாறன்
பாடல்கள் – கௌசல்யா.N
கலை – குதூஸ் சங்கிலிஷா
நடனம் – மாஸ்டர் சேவியர், மாஸ்டர் முகிலன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – உத்ரா புரொடக்சன்ஸ் S.ஹரி உத்ரா – More 4 Production

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார் – கதிரவென்.

மலேசிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த படம் வெற்றி அடைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது ஹரி உத்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்