ஆண்ட கட்சி. ஆண்டுகிட்டு இருக்குற கட்சி என யாரையும் விட்டு வைக்கவில்லை நம்ம முத்தையா
அரசியல் வாதிகள் தில்லு முல்லு எப்படி எப்படி பண்றாங்கன்னு தெளிவா புட்டு புட்டு வைக்கிறார் தமிழ்நாட்டுல நடக்குற அரசியலை உண்மைச் சம்பவத்தைத் தெளிவா சொல்லியிருக்கிறார்
ஒத்த ஓட்டு முத்தையா
நீண்ட நாளைக்கு பிறகு கவுண்டமணியோட நடிப்பு, அரசியல்வாதி களை டார், டாரா கிழிச்சு தொங்க போடறாரு ,காமெடி சிறப்பா இருக்கு. யோகிபாபு காமெடியும் நல்லாயிருக்கு இன்று நாட்டுல நடக்குற அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்
எப்படி எல்லாம் மக்களைஏமாத்தி ஓட்டுப் வாங்கறாங்க எப்படி அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்குறாங்க?
மக்களை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கங்கறதைத் தெளிவா சொல்லி இருக்குது இந்த படம் சமகால அரசியலைச் சொல்லியிருக்கும் இப்படத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், கல்வி வேணும் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார் இயக்குனர்
இந்தப் படத்தை பேமிலியோட பார்க்கலாம். நீண்ட நாளுக்கு அப்புறம் வந்துருக்குற அரசியல் காமெடி என்டர்டெயின்மென்ட் படம். படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் செம காமெடி கலாட்டா
இப்படத்தை இயக்கியுள்ள சாய் ராஜகோபால், 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கவுண்டமணி – செந்திலுக்கான நகைச்சுவைப் பகுதிகளை எழுதிய அனுபவம் உடையவர்.
அதனால் தைரியமாக அரசியல் நையாண்டி, பேமிலி என்ற ட்ரெயின் படமாக இளைஞர்களுக்கான
ரசிக்க வைக்கிறது
கவுண்டமணியிடம் மக்கள் என்ன ரசிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவருக்கு உண்டான கதையை தேர்வு செய்து அதில் 30-க்கும் மேற்பட்ட காமெடி நடிகர் களை நடிக்க வைத்து படத்தை வெகு ஜன மக்களுக்கு பிடித்த படமாக எடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களே
கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா,
மதுரை குமார்,
பயில்வான் ரங்கநாதன்,
சென்றாயன்,
சிங்கமுத்துவின் மகன் வாசன், கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள கதைக்களத்தில், கவுண்டமணியின் அதிரடியான அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கவுண்டமணியின் காமெடிகளுக்கு ஏற்றாற்போல் யோகிபாபு கவுன்டர்களுடன் சப்போர்ட் செய்கிறார். அக்கால கவுண்டமணி ஸ்டைலில் சில காமெடி வசனங்களும் இடம்பெற்றுள்ளன.: முத்தையா ஒரு தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். அதையும் பொருட்படுத்தாமல் முத்தையா மீண்டும் போட்டியில் பங்கேற்று எல்லா சவால்களை எதிர்த்து, எம் எல் ஏ ஆக வெற்றி பெறுகிறார்
அதோடு தனது மூன்று தங்கைகளுக்கு ஒரே வீட்டில் அண்ணன் தம்பியாக வளரும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் முடிவில் அது முக்கியமல்ல வருகின்ற மாப்பிள்ளை நல்லவராக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார் இது தான் கதை
கரன்ட் கம்பியை முயல் கடிச்சிடுச்சி…’என்ற வசனம், யோகி பாபு தவழ்ந்தபடி சென்று மொட்டை ராஜேந்திரன் காலில் விழுவது போன்ற அரசியல் பகடிகளும் கவனம் ஈர்க்கின்றன.
கூவத்தூர் அரசின் காலில் விழுந்து தவழ்வது
சித்தப்பா பெரியப்பா என இரண்டு தலைவர்களை குறிப்பிடுவது
தர்மயுத்தம் நடத்தும் யோகி பாபு
வேலை கேட்டு வந்த பெண்ணை கர்ப்பிணி ஆக்கும் ரவி மரியா
ஓட்டுக்காக பாவாடை துவைக்கும் கொடுக்கும் யோகி பாபு
காலில் விழுந்து ஓட்டு கேட்க கலாச்சாரம்
கிளைமாக்ஸ் காட்சியில் காமராஜரை உதாரணம் காட்டும் நேர்மையான ஆட்சி
படம் முழுக்க கவுண்டமணியின் பஞ்ச் டயலாக்ஸ்
30க்கும் மேற்பட்ட நடிகர்களை நடிக்க வைத்து காமெடி செய்தது
சிங்கம் புலி குடும்பத்தில் செய்யும் அட்ரஸாசிட்டி
நடிகை காயத்ரியும் அவரது மகனும் அவர்கள் கணவரும் செய்யும் ஜொள்ளு மேட்டர்
ஜே கே நகர் இடைத்தேர்தல் அதில் ஏலம் போட்டு யார் எம்எல்ஏ என்று தேர்ந்தெடுக்கும் முறை
இப்படி எந்த அரசியல்வாதியாக விடவில்லை எல்லாரையும் கலாய்த்து இருக்கிறது இந்த ஒத்த ஓட்டு முத்தையா
சித்தார்த் விபின், இசை ,பாடல்கள் குத்தாட்டம் போட்டு ரசிக்க வைக்கிறது
வேல்முருகன், சைந்தவி, மூக்குத்தி முருகன் ,பாடல்கள் பாடி ரசிகர்களை துள்ளலாட்டம் போட வைத்திருக்கிறார்கள்
மற்றும் ஜெகதீஷ், ரோஷினி, பாடியிருக்கிறார்கள்
பாடல்களை கவிஞர் சினேகன், மோகன் ராஜன் ,சம காலத்தில் உள்ள அரசியல் கலந்து பாடல் எழுதிஉள்ளனர்
ராஜா சேதுபதி, படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
ஒளிப்பதிவு கார்த்தி கேயன் ,புவனேஷ் ,
சின்ன சாமி
*Producer : Raviraja ME
Co Producer : Kovai Lakshmi Rajan*
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஒத்த ஓட்டு முத்தையா வுக்குவெற்றி நிச்சயம்
