ஆரம்பக் காட்சியில் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் தயாரிப்பாளர் ரெடி, ஹீரோ கால்ஷீட் ரெடி, லொகேஷன் ரெடி, ஆனால் கதை மட்டும் கிடைக்கல என்று பால சரவணன் இடம் வந்து கேட்கிறார் அதற்கு கார்த்தி, மோனிகா இருவரின் நட்பை பற்றி பால சரவணன் சொல்கிறார்
இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ், கார்த்திக், மோனிகா இருவருடன் சேர்ந்து கதையில் பயணிக்கிறார்
சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக
நாயகன் (கார்த்திக்) நாயகி (மோனிகா) பழகி வருகின்றார்கள்.
ஒருவரை கேட்காமல் ஒருவர் எதுவும் செய்ய மாட்டார்கள் அவ்வளவு அன்பு
பள்ளி பருவம் முதல் கல்லூரி, தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை அனைவரும் காதலர்கள் என்று நம்பி விடுகின்றார்கள்.
ஊரும் உறவும்
அப்போது இருவருக்கும் இடையில் பவித்ரா என்ற கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது ஹீரோ இன்னொரு பெண்ணை (பவித்ரா) காதலிக்க ஆரம்பகின்றார்.
இவர்கள் காதல் மோனிகா ஏற்றுக் கொண்டாலும் அவ்வப்போது அவர்கள் மீது பொறாமையும் கொள்கிறாள்
கல்லூரியில் பவித்ராவை ஒரு மாணவன் அவமானப்படுத்த கார்த்திக்கு அங்கு விரைகிறான் ஆனால் மோனிகா நீ இப்போது கல்லூரியில் படிக்கவில்லை அங்கு செல்வது சட்டப்படி தவறு என்று தடுத்து விடுகிறார்
இதனால் மோனிகாவின் நட்பை துண்டிக்குமாறு சொல்லுகிறார் பவித்ரா ஆனால் மோனிகாவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கார்த்திக் சொல்லி இருவரும் பிரேக்கப் செய்கின்றார்
இவர்கள் இருவரையும் மோனிகா சேர்த்து வைக்கிறார்
சேர்ந்த இருவரும்
குன்னூர் டிரிப் போகும்போது
விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார் பவித்ரா.
தனது காதலியின் மரணத்தை தாங்க முடியாமல் கார்த்திக் துயரத்தில் இருக்க அவரை மோனிகா மீட்டெடுக்கின்றார். அதன்பின்பு அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கின்றது. அதில் அவர்கள் திருமணம் செய்தார்களா? அல்லது இறுதி வரை நண்பர்களாக இருந்தார்களா?
அவர்கள் திருமணத்தை நிறுத்துவதற்கு சிங்கம் புலி டீம் செய்யும் முயற்சி வெற்றி பெற்றதா?
மோனிகா தோழி
அபி சொல்லும் பேச்சை கேட்டு மோனிகா, கார்த்தியை கரம் பிடித்தாரா ?
கார்த்திக் ,மோனிகா இருவரையும் இணைத்து கட்டுக் கதைகளை கட்டி திருமணத்தை நிறுத்த முயற்சிக்கும் வில்லன் டீம் வெற்றி பெற்றதா?
இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த இளமையான காதல் கதை மீண்டும் ஒரு இளமை ஊஞ்சலாடுகிறது என்றே சொல்லலாம்
படத்திற்கு தலைப்பு
இளமை ஊஞ்சலாடுகிறது என்று வைத்திருக்கலாம்
ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார்(.கார்த்தி)
இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும் பல படங்களில் நடித்த அனுபவத்தை போல கார்த்திக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் பவித்ரா இறந்த பிறகு காட்டும் சோகம் மோனிகா, எதை செய்தாலும் அதை நியாயம் என்று நம்பும் நட்பு கிளைமாக்ஸ் காட்சியில் கூட தடுமாறாமல் நடித்திருக்கும் அந்த நடிப்பு ரசிக்க வைக்கிறது
மீனாட்சி கோவிந்தராஜன்(மோனிகா )நாயகியாக நடித்துள்ளார்
இந்த கால பெண்மணிகள் எவ்வளவு தெளிவான முடிவுகளை எடுக்கிறார்கள் நட்பை எப்படி பேணி கேட்கிறார்கள் என்பதை இந்த கதாபாத்திரத்தின் மூலம் மீனாட்சி கோவிந்தராஜன் சிறப்பாக செய்திருக்கிறார்
. பால சரவணன்,(பீட்டர் ) என்ற கதாபாத்திரத்தில் நாயகன் நாயகி யுடன் திருமண ஃபோட்டோ எடுக்கும் அந்த டீமில் கலகலக்க வைக்கிறார் மோனிகாவுக்கும், கார்த்திக்கும், வேறு வேறு மாப்பிள்ளை பெண் கிடைத்தவுடன் சிங்கம்புலி, செய்யும் அட்ராசிட்டியை பால சரவணன் தடுத்து நிறுத்துவது ரசிக்க வைக்கிறது
ஆண்டனி பாக்யராஜ்,( உதவி இயக்குனர்)
கதை தேடி வரும் இவருக்கு புதிய புதிய அனுபவங்கள் கிடைக்கிறது நன்றாக அவரும் நடித்திருக்கிறார்
ஜெயப்பிரகாஷ்,
நடிப்பு நன்றாக இருக்கிறது
வினோதினி கிரிமினல் வழக்கறிஞராக மோனிகா அம்மாவாக நடித்திருக்கிறார்
பால்பாண்டியாக சிங்கம்புலி, நையாண்டி கடந்த வில்ல த் தனத்தில் கலகலப்பை ஏற்படுத்துகிறார்
இமான் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசை, படத்திற்கு மிகப்பெரிய பலம்
பாடல்கள் துள்ளல் ரகம்
ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு காட்சிகளை ரசித்து படமாக்கி இருக்கிறார் கோவையை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது
தியாகு படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார் கச்சிதமான படத்தொகுப்பு
சோபி ,மற்றும் பவுல்ராஜ் ,நடனம் அமைத்திருக்கிறார்கள் நடனம் துள்ளலாக இருக்கிறது ஆரம்பப் பாடலான அந்த பாடலுக்கு நடனம் செம
காஸ்ட்யூம் டிசைனர் மீரா
காஸ்டியூமர்
ரஞ்சித் ,
நாயகன் நாயகி மற்றும் அனைவருக்கும் காஸ்டியூம் கச்சிதமாக பொருந்திருக்கிறது
ஒப்பனை தசரதன்
மக்கள் தொடர்பாளர் சதீஷ் அண்ட் சிவா
வெகுஜன மக்களிடம் படம் போய் சேர்ந்திருக்கிறது
துள்ளல் நடிப்பை தந்த அறிமுக நடிகர் ஜெகவீர், கதாபாத்திரத்திற்கு நியாயம்
சேர்த்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன்.
படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கும் பால சரவணன், கார்த்திக்கின் காதலியாக வருபவர், ஜெயபிரகாஷ், நிரஞ்சன் ஜெயபிரகாஷ், ஹரிதா, ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். சிங்கம்புலி – ஜி.பி.முத்து கூட்டணி நகைச்சுவை என
படம் முழுக்க இளமை ஊஞ்சலாடுகிறது ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவரும் வண்ண இயக்குனர் சுசீந்திரன் திரைக்கதை எழுதி படமாக்கி இருக்கிறார்
நட்புக்கும் கற்பு உண்டு என்று இன்றைய இளைஞர் இளைஞர்களை கௌரவ படுத்திருக்கிறது இந்த படம்
படம் முடிந்தவுடன் இன்றைய 2k கிட்ஸ் அனைவரும் இது நம்ம படம் என்று கொண்டாடுகிறார்கள் கிளைமாக்ஸ் காட்சி படத்தை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதி செய்து இருக்கிறது
படத்தை வாங்கி வெளியிட்டு இருக்கும் தனஞ்செயன் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
