மீண்டும் ஒரு இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை போல படம் முழுக்க துள்ளலான இளமை துள்ளலான இளைய தலைமுறை கவர்ந்திழுக்கும் கதாநாயகன் & நாயகிகள் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு
துள்ளல் போட வைக்கும் பாடல் மற்றும் இசை
சீரான திரைக்கதை வெற்றி மாபெரும் வெற்றி படமாக வந்திருக்கிறது NEEK
கதை களம்
காதல் & பிரேக்-அப் என துவண்டு போயிருக்கிறார் அறிமுக நாயகன் (பவிஷ்) அவரது பள்ளி தோழியான ப்ரீத்தியுடன் (ப்ரியா பிரகாஷ் வாரியர்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணமே வேண்டாம் என்று சொன்னவர் பிரியாவை பார்த்தவுடன் ஓகே சொல்கிறார் இருவரும் மனம் விட்டு பேசுகிறார்கள் இருவருக்கும் பிடித்து போகிறது தனது வருங்கால மனைவியிடம் தனது உடைந்த காதலை பிரபு சொல்கிறார் காட்சிகள் விரிகிறது ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் விரிகிறது.
இளமை
தன் வசந்த சிறகுகளால் வட்டமடித்து பறக்கும் அந்த வசந்த கால நினைவுகளை கண்முன்கொண்டு வருகிறார் இயக்குனர்
அடடா! அற்புதம் இளமை எனும் பூங்காற்று இதயத்தை தாலாட்டுகிறது அவர்களுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் தான்
சமையல் கலைஞரான பிரபுவும், சாப்பாட்டு விரும்பியான நிலாவும் (அனிகா சுரேந்திரன்) ஒரு பார்ட்டியில் சந்தித்து காதலில் விழுகின்றனர். பிரபுவை தனது பணக்கார தந்தையிடம் (சரத்குமார்) அறிமுகம் செய்து வைக்கிறார் நிலா. நிலாவின் தந்தைக்கு பிரபுவை சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் பழகுவதற்கு கால அவகாசம் கேட்கிறார். இந்தச் சூழலில் நிலாவின் தந்தையை பற்றிய ஒரு உண்மை தெரியவருவதால் அது பற்றி வெளியே
சொல்லாமல் மறைத்து தன் காதலி அவன் அப்பவோடு ஆறு மாதம் நன்றாக சிரித்து பழகி ஜாலியாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் பிரபு தன் காதலை தியாகம் செய்கிறான் அதை காதலியிடம் சொல்லாமல் மறைக்கிறான் இதனால் காதலி பிரேக்கப் சொல்லிவிட்டு போய்விடுகிறாள்
அதன் பிறகு பிரபுவுக்கு பழைய காதலியிடம் இருந்து கல்யாண அழைப்பிதழ் வருகிறது அதை ஏற்று நண்பனுடன் கோவா செல்கிறார் பிரபு அங்கு என்ன நடந்தது இருவரும் சேர்ந்தார்களா? கல்யாணம் நடந்ததா பிரபுவுக்கும் பிரியாவுக்கும் திருமணம் நடந்ததா என்பதை இளமை ஊஞ்சலாடும் இனிய பயணத்தின் மூலம் அழகாய் சொல்கிறார் இயக்குனர் தனுஷ் படம் பிளாக்பஸ்டர் படமாக வந்திருக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
இயக்குனர்
2 கே கிட்ஸின் காதலை அழகாக திரையில் காட்டியிருக்கிறார் தனுஷ். இன்றைய காதலர்கள் மனநிலையை ஜாலியாக சொல்லியிருக்கிறார் கோடீஸ்வரன் மகள் கருவாட்டுக் குழம்பு கேட்பது சமையல் ஸ்பெஷலிஸ்ட் நாயகன் அதை சமைத்துக் கொடுப்பதும் நாயகன் செய்த சாப்பாடு தான் அது என்று கோவாவில் சாம்பார் சாதம் வாயில் வைத்ததும் கண்டுபிடிப்பதும் கோவாவில் நாயகன் அஞ்சனாவுடன் கடலை போடும்போது நண்பன் அவருக்குள் புகை வருவதும் அனிகா மாப்பிள்ளை அவ்வளவு நல்லவராக இருப்பது கதையின் வெற்றிக்கு மிகவும் உதவுகிறது
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்
மிகப் பிரமாதமாக இருக்கிறது காட்சியும் கண்ணுக்குள்ளே நிற்பது போல கோவாவின் படப்பிடிப்பு சென்னையில் படப்பிடிப்பு என அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
படம் முழுக்க அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
இளைய தலைமுறை கலைஞர்கள்
நாயகன் நாயகி காதலில் விழும்போதும், பிரேக்கப் ஆகும் போது அதை நம்மால் உணர முடிகிறது
மிக நெருக்கமாக இருக்கிறது
இந்த படம் பார்த்தவர்கள் 90 கிட்ஸ் 80கிட்ஸ் எல்லோரும் உணர்வார்கள்
தங்கள் காதல் பிளாஷ்பேக் காட்சிகளை
பவிஷை பார்த்தால் தனுஷ் போலவே தெரிகிறார். அக்கா மகன் என்பதால் மட்டும் அல்ல பார்க்கவும் தனுஷ் மாதிரி இருக்கிறார். மேலும் பவிஷ் நடிப்பில் தனுஷின் நடிப்பு தெரிகிறது. இயக்குநர் சொன்னபடியே நடித்திருக்கிறார் பவிஷ்.
முதல் படத்திலேயே 100 சதவீதம் ஸ்கோர் செய்திருக்கிறார் காதலின் பிரிவு சரத்குமார் க்குஏற்பட்ட சோகம் மீண்டும் பழைய காதலியை அடையத் துடிக்கும் பிரபு வின் மனசு
திருமணம் நடந்து விட்டதாக எண்ணி ரோட்டில் ஓடி வருவது
அம்மா மடியில் தலை படுத்துக் கொள்வது என தனுஷ் செய்த அத்தனை காரியங்களையும் பவிஷ்செய்து இருக்கிறார்
நிச்சயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் அந்த அளவுக்கு தகுதி இருக்கிறது
அனிகா
அனிதாவின் கண்கள் பேசுகிறது காதல் சொல்கிறது பிரபு தன்னுடன் போனில் பேசவில்லை என்று பிரபுவின் வீடு தேடி வந்து அந்த மழையில் வெடித்துச் சிதறும் இந்த காதல் ஏக்கம் புரிகிறது
கோவாவில் பிரபுவை கண்டு கொள்ளாமல் இருக்கும் அந்த ஊடல் தெரிகிறது. பவிஷ், அனிகாவை காதலர்களாக பார்க்க பார்க்க பிடிக்கும் ப்ரியா பிரகாஷ் நடிப்பு பரவாயில்லை. ஆனால் அவரின் கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. மேத்யூ தாமஸ்
அஞ்சனா வாக வந்து அழகாக அம்சமாக பொருந்தி போகிறார் அவரைக் கூட கதாநாயகன் காதலித்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு
கதாபாத்திரங்களின் வலி, சந்தோஷம், அழுகையை நம்மால் உணர முடிகிறது
மற்றும் வெங்கடேஷ் மேனன் ,ராபியா,
ரம்யா ரகுநாதன், சித்தார்த் சங்கர்,
ஆகியோ நடிப்பு ரசிக்க வைக்கிறது
வொண்டர் பார் பேனரில் கஸ்தூரி ராஜா அவர்களும், விஜயலட்சுமி கஸ்தூரி அவர்கள், தயாரித்திருக்கிறார்கள் தங்கள் பேரனை நாயகன் ஆக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
துள்ளலான பின்னணி இசையும் கோல்டன் மாரோ போன்ற மெகா ஹிட் பாடல்கள் கொடுத்து இளமையான பாடல்கள் மூலம் இளைய தலைமுறை குதுகல படுத்திருக்கிறார் ஜி . வி .பிரகாஷ் குமார்
கோல்டன் ஸ்பேரோ பாடல் எவர்கிரீன் ஹிட்
ஜிகே பிரசன்னாவின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக் ஆகவில்லை
லியோன் பிரிட்டோ வின் ஒளிப்பதிவு அருமை கோவா காட்சிகள் கண்ணுக்குள் நிற்கிறது
ஜாக்கி டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் கோவாவில் அந்த திருமண காட்சிகள் ஒரு மாதம் பிரம்மாண்டம்
ராஜு ஒப்பனையாளராக பணிபுரிந்து இருக்கிறார் திருமண பெண்ணை அழகாக காட்டி அந்த கல்யாண வீட்டில் அத்தனை பேருக்கும் மேக்கப் போட்டதில் எல்லோரும் கவனமும் அந்த கல்யாண காட்சிகளை முன் மனமஙகுவிந்து கிடந்தது
பவிஷ் -அனிகா-அஞ்சனா-ஸ்ரியா-என எல்லோர் ஒப்பனை அழகு
காவியா ஸ்ரீ ராம் விசுவல் டைரக்டர் ஆகவும் காஸ்ட்யூம் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் சிறப்பு
மக்கள் தொடர்பாளராக ரியாஸ் அஹமது அவர்களும் பாராஸ் ரியாஸ் அகமது அவர்களும் பணி புரிந்திருக்கிறார்கள் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து படத்தை வெற்றி படமாக கொடுத்து உழைத்திருக்கிறது பி ஆர் ஓ டீம்
மற்றும் படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக
மொத்தத்தில் இந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இன்று இளைஞர்களின் மனதில் இருக்கும் பிரேக் அப் என்ற ஒற்றைச் சொல்லில் சுழன்று கொண்டிருக்கும் இளைய தலைமுறை
அதன் வலியையும் அதன் ஏக்கத்தையும் பிரிந்து இருக்கும் பொழுது எந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அருமையாக சொல்லி வெற்றி கோப்டபையை தட்டி சென்றிருக்கிறது இந்த படம்
