டிராகன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

ஒரு தப்பை செஞ்சிட்டு அத கடந்து போலாம் என்று நினைக்கிறோம் ஆனால் அந்த தப்பால் குற்ற உணர்ச்சி உறுத்திட்டே இருக்கும்என்ற நல்ல கருத்தோடு…..

ஒரு நல்ல பையன் கெட்ட பையனாக மாறினால் என்னாகும்.என்பதையும் சொல்லும் டிராகன்

படத்தில்
கடைசி 20 நிமிட கிளைமாக்ஸ் காட்சி மாஸ். சமுதாயத்திற்கு நல்ல செய்தியை இயக்குநர் சொல்லி இருக்கிறார்.

படத்தில்
இடைவேளை காட்சி எதிர்பாராத ட்விஸ்ட் சிறப்பாக இருக்கிறது

கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் . ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இருவரும் இணைந்த
இந்தப் படத்துடன் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
மூவர் கூட்டணி வெற்றி கூட்டணியாய் மாறி இருக்கிறது

இந்த படத்தில்
நடித்த நடிகர் நடிகைகள்

கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், ஜார்ஜ் மேரியன், இந்துமதி மணிகண்டன், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான், சபரி பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நடிப்பு இயல்பாகவும் ரசிக்கும் வண்ணமும் ஒரு படத்துக்கு வெற்றியை தேடி தரும் அளவுக்கு அமைந்திருப்பது இந்த படத்தின் சிறப்பு

கதை என்ன

பள்ளியில் 95 /மார்க் எடுத்த ராகவன் நல்ல பிள்ளையாக இருக்கிறான் அங்கு படிக்கும் அஞ்சனாவிடம் தன் காதலை சொல்ல எனக்கு திமிராக இருந்தால் தான் பிடிக்கும் என்று அஞ்சனா சொல்ல அவன் வாழ்க்கை பாதை மாறுகிறது கல்லூரிக்கு செல்லும் பொழுது கெத்தாக டிராகனாக உள்ளே நுழைகிறான்

கல்லூரியில் கெத்தாக சுற்றி வரும் மாணவன் ராகவன்(பிரதீப் ரங்கநாதன்).
(கீர்த்தி)
அனுபமா பரமேஸ்வரன்
இருவரும் கல்லூரியில் காதலிக்கிறார்கள் லவ் என்றால் அவ்வளவு லவ்
ஜாலியாக போகிறது ராகவன் வாழ்க்கை
ராகவனுக்கு பெற்றோர், நண்பர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். கல்லூரி முதல்வர் படிக்காத ராகவனுக்கு
அட்வைஸ் செய்கிறார் அது அவன் மண்டையில் ஏறவில்லை கல்லூரியில் கெத்தாக இருக்கும் நீ வெளியே சென்றால் உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று அதை அவன் ஏற்கவில்லை
ஆனால் கல்லூரியில் டிகிரி முடிக்காத ராகவனுக்கு வேலை கிடைக்கவில்லை
வேலையில்லாத ராகவனனை கீர்த்தி பிரேக் அப் செய்துவிட்டு போய்விடுகிறார்

தன்னை உதாசீனம் செய்த கீர்த்தியை ஜெயிக்க வேண்டும் என்று
குறுக்கு வழியில் டிகிரி முடித்ததாக ரவீந்திரன் சந்திரசேகரிடம் சர்டிபிகேட் வாங்கி
கௌதம வாசுதேவன்
ஐடி கம்பெனியில்
வேலையிலும் சேர்ந்த பிறகு
பல்லவி, ராகவன், வாழ்க்கையில் வருகிறார்
அதன்பின் ராகவன் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத திருப்பங்கள் என்ன என்பதுதான் கதை

கயாடு லோகர்
(பல்லவி) வேடத்தில் அழகாக அம்சமாக வந்து போகிறார்
யூடியூப்பர்கள் விஜே சித்து, ஹர்ஷத் கான்,
ராகவனின் நண்பனாக வருகிறார்கள்

இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் என இருவரும் மிகப்பெரிய பலம் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார்.
பின்னணி ,இசை, மற்றும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது

பிரதீப் ரங்கநாதன்
டிராகனாக வரும்
பிரதீப்பின்
பர்பார்மன்ஸ்.
அழுகை ,சோகம், ஏக்கம் ,காதல் ,பிரிவு, வசதி வந்தவுடன் கம்பீரம் கெத்து என்று பல பரிமாணங்களில் கதை நாயகனாக உயர்ந்து நிற்கிறார் ரசிகர்களிடம் சின்ன தல என்று பாராட்டும் வாங்குகிறார்
அவரின்இண்டர்வியூ காட்சி,
பிறந்தநாள் காட்சி, என கலக்கி இருக்கிறார்
சிகரெட்டை சுண்டும் ஸ்டைல், கல்லூரியில் டிராகனாக தப்பு செய்யும் மாணவர்களை துவம்சம் செய்யும் காட்சி
அப்பாவிடம் பொய் சொல்லி பத்து லட்சம் கேட்பவராக ,
திருமணத்தை நிறுத்திவிட்டு உண்மையின் பக்கம் நிற்பவராக ,
தன்னுடைய அந்தஸ்தான வாழ்க்கையே போனாலும் ஒரு ஏழை மாணவனின் லட்சியம் போகக்கூடாது என்று சிறைக்கு செல்பவராக ,
கீர்த்தி மறுபடியும் திரும்பி வந்து தன் வாழ்க்கையில் குறிப்பிடும் பொழுது அதை ஏற்றுக் கொள்பவராக ,
இப்படி பல பரிமாணங்களில் ராகவ் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது உள்ளம் தொடுகிறது

இயக்குனர்

ரொம்ப பொறுப்பான, ஜனரஞ்சகமான, சிறப்பான படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்
இந்த ஸ்கிரிப்டை வைத்து யார் வேண்டுமானாலும் நல்ல படம் எடுக்கலாம். ஆனால் அதை கலகலப்பாக கொண்டு சென்றதில் தனித்து நிற்கிறார் இயக்குனர் அஸ்வத். மொத்தத்தில் டிராகன், அஸ்வத் மாரிமுத்து சம்பவம்.
திரைக்கதைக்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக கவனமாக கையாண்டு பொறுப்பான இயக்குனர் என்ற பெயர் வாங்கி இருக்கிறார்
வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களே

படத்தின் மிகப்பெரிய பலம் மிஷ்கின் ஆரம்பக் காட்சியில் கல்லூரியில் இப்படி ஒரு பொறுக்கி நான் பார்த்ததே இல்லை என்று சொல்வதில் இருந்து டிராகன் மீது அவர் வெறுப்புக் கொள்ள என்ன காரணம் என்று காட்சிகள் விரிய விரிய
சுண்டி விட்ட சிகரெட் தன் மீது வந்து விழ அதை எடுத்துக் கொண்டு வந்து ராகவிடம் காட்டி சேலஞ்சு விட்டு அதை தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு சவால் விடும் அந்த உதார் மிஷ்கினுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது

ஒரு கல்லூரி முதல்வர் தன் மாணவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பாரே தவிர அவன் வாழ்க்கையை கெடுக்க மாட்டார் என்பதற்கு மிஷ்கின் கதாபாத்திரம் ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் மிஷ்கின் சார்

ராகவன் அப்பா, அம்மா வாக
:மரியம் சார்ஜ், இந்துமதி இருவரும் நடித்திருக்கிறார்கள் கிளைமாக்ஸ் காட்சியில் மரியம் சார்ஜ் ,கண்களை குளமாக்கி விடுகிறார் அற்புதமான நடிப்பு
தவறு செய்யும் தன் மகனை தட்டிக் கேட்காமல் ஏழு வருடங்களுக்கு பிறகு கிடைத்த தன் மகன் ஒரு வரம் என்று சொல்வதும் சிறையில் இருந்து வந்த பிறகும் அவனை பாசத்தோடு அரவணைப்பது, கிளைமாக்ஸ் காட்சியில் அந்தஸ்து வசதி, எல்லாம் தூக்கி எறிந்து விட்டு சிறை சென்று வந்த பிறகும் மீண்டும் தன் மகனை கொஞ்சுவதும் என மரியம் சார்ஜ் வாழ்ந்திருக்கிறார்

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பெரிய கோடிஸ்வரராக கம்பீரமாக வந்து போகிறார்

மற்றும் மணிகண்டன், தேனப்பன் நடிப்பு நன்றாக இருக்கிறது

ஒரு வெற்றிப் படத்தை கொடுத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நிகித் பொம்மி யின்
அருமையான ஒளி பதிவு ஐடி கம்பெனியாகட்டும்,
மற்றும் கல்லூரி காட்சிகள் ,பாடல் காட்சிகள், பல்லவியின் வீடு ,என எல்லா இடங்களிலும் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது பளிச்சென்று இருக்கிறது

பிரதீப் Eராகவ் படத்தொகுப்பு பிரமாதம்

விக்கி& திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் காட்சிகள் மிரட்டி இருக்கிறார்கள்
படத்தின் ஆரம்பக் கட்சியும், கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் வரும் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது

ஜே. டி .யின் நடன பயிற்சி துள்ளல் போட வைக்கிறது
ரசிக்க வைக்கிறது

கதையை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும்
பிரதீப் ரங்க நாதனும் எழுதி இருக்கிறார்கள்
திரை கதை வசனம் அஸ்வத் மாரிமுத்து எழுதி இருக்கிறார் வசனம் ரசிக்க வைக்கிறது
சீரான திரைக்கதை, சரியான வசனம், உருக வைக்கிறது திரைக்கதை சூப்பர்

காஸ்டியூம் டிசைனர்
தினேஷ் மனோகரன்,
& பிரவின் ராஜா
இருவரும்
சிறப்பாக பணி புரிந்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

பப்ளிசிட்டி டிசைனராக கபிலன் பணி புரிந்திருக்கிறார்

சவுண்ட் மிக்ஸிங்
எம். ஆர் என
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக

இப்படத்தில் மக்கள் தொடர்பாளாராக நிகில் முருகன் அவர்கள்
பணி புரிந்திருக்கிறார்
படத்தை மிகச் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் டிராகன் கல்லூரி மாணவர்களுக்கும், படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கும், மகன் என்ன செய்கிறான் என்று கண்டு கொள்ளாமல் இருக்கும் அப்பா அம்மாவுக்கு, கண்மூடித்தனமான காதலிக்கும் காதலிகளுக்கும் பேக்ரவுண்ட் என்ன என்று தெரியாமல் வேலைக்கு சேர்க்கும் ஐடி கம்பெனிக்கும் ,
அரியர் வைத்துவிட்டு பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் மாணவர்களுக்கும்,
கல்லூரியில் ஒரு பிரின்ஸ்பல் எப்படி மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற உதாரணத்திற்கும்
நண்பன் துவண்டு கிடக்கும் பொழுது
தோள் கொடுக்கும் நண்பர்களுக்கும் என எல்லா தரப்பினரும் காண வேண்டிய அற்புதமான படம் டிராகன்