2024 டிசம்பர் மாசம் திருவண்ணாமலையில் உள்ள போளூர் கிராமத்தில் ஜவ்வாது மலை அங்கே காட்டூர் என்ற கிராமத்திற்கு சென்று மாயமானயூடியூபர் நான்கு பேர்
அவர்கள் என்ன ஆனார்கள் எங்கு போனார்கள் என்பதை ஆவணப்படமாக எந்த ஒரு ஜோடனையும் இல்லாமல் எந்த ஒரு இசையும் இல்லாமல் உள்ளது உள்ளபடி கண்முன் கொண்டு வந்து காட்டி இருக்கிறது மர்மர்
அந்த ஜவ்வாது மலையில் பேய் நடமாட்டம் இருப்பதை யூடியூப் பர் கண்டன்ட்எடுக்க செல்லும் இவர்கள் பௌர்ணமி அன்று 7 கன்னி மார்கள் குளத்தில் வந்து குளிப்பார்கள் அதையும் படமாக வேண்டும் என்று இவர்கள் செல்கிறார்கள்
மெல்வின், ரிஷி,அன்கிதா, ஜெனிஃபர்
இவர்களுடன் வழிகாட்ட காந்தா என்ற சிறுமியும் உடன் செல்கிறார் காந்தாவின் அப்பா குப்பன் தான் இந்த நால்வருக்கும் வழி காட்ட வேண்டும் அவர் பாம்பு கடித்து ஆஸ்பத்திரியில் இருப்பதால் காந்தா அவருடன் புறப்படுகிறார்
போகும் வழியில் சுங்கு பாட்டு என்பவரிடம் அந்த பேய்களை பற்றியும் ஏழு கண்ணிகள் பற்றியும் கேட்கிறார்கள்
அவர் ரத்த வாடை பட்டால் மங்கை என்ற பேய் வரும் அதே போல மங்கை என்று அழைத்தால் பேய் வரும் ஜாக்கிரதை என்று சொல்லி அனுப்புகிறார்
அந்த ஊர்ல இருக்கும் கோவிந்தன் பார்வதி, பாளையம், போன்றவர்களிடம் அந்த காட்டையும் பேயை பற்றியும் விசாரிக்கிறார்கள்
அனைவரும் எங்கள் ஊரிலே அசைவம் சாப்பிட மாட்டோம் அசைவம் சாப்பிட்டால் அந்த பேய் வந்து விடும் இங்கிருந்து நாங்கள் கீழே இறங்கி வேறு ஒரு ஊரில் தான் அசைவம் சாப்பிட்டு விட்டு வருவோம் என்கிறார்கள் அந்த அளவுக்கு மங்கையை கண்டு பயந்து நடுங்குகிறார்கள்
ஆனால் இந்த youtubers நாலு பேருக்கும் பேயைப் பற்றி பயமோ கவலையோ இல்லாமல் பயணிக்கிறார்கள்
இவர்கள் நால்வரும் முதலாம் கல், இரண்டாம் கல், மூன்றாம் கல், அடுத்து கன்னிகள் குளிக்கும் குளம் இந்த இடத்தை போய் சேர்ந்தார்களா? போகும் வழியிலேயே ஆபத்தை சந்தித்தார்களா?
ஓஜா போர்டு மூலம் மங்கையை வரவழைத்து பேசினார்களா? அல்லது மிரட்டப்பட்டார்களா?
இவர்களை நம்பி இவருடன் காட்டுக்குச் சென்ற காந்தா நிலைமை என்ன ஆனது?
மெல்வின், ரிஷி, அங்கிதா ,ஜெனிபர் நால்வரும் மங்கை என்ற பேயிடமிருந்து தப்பித்து வந்தார்களா?
என்பதை திகில் , பயம் கலந்து சொல்லி இருக்கிறது மர்மர்
மர்மர் என்றால் பேய் முனுமுனுத்தல் என்று அர்த்தம்
: தமிழின் முதல்
ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஜானரில் எடுக்கப்பட்டுள்ள முதல் படம் மர்மர்
:சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற “பாராநார்மல் ஆக்டிவிட்டி” மற்றும் “தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்” போன்ற திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் தீனி போடும் விதத்தில், வெளியாகி உள்ள திரைப்படம் தான் ‘மர்மர் ‘.
ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார்.
இயக்குனர் மிகுந்த சிரமப்பட்டு காட்டுக்குள் படப்பிடிப்பை நடத்தி பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தி இருக்கிற தெளிவான திரைக்கதை கிராமத்தில் சொல்லப்படும் பேய் கதைகள் உடன் கற்பனை சேர்த்து பல இடங்களில் திடுக்கிட வைத்து விடுகிறார்
காந்தா வை பேய் மிரட்டும் பொழுது அன்கிதாவை மங்கை என்ற பேய் மிரட்டும் பொழுதும்
ரிஷி யை பேய் மிரட்டும் பொழுதும்
நாயகன் மெல்வினை
ஏழு கன்னிகள் மிரட்டும் போது படம் பார்ப்பவர்களுக்கு அள்ளு விடுகிறது
தனியாக படம் பார்ப்பவர்கள் நிச்சயம் பயந்தே போவார்கள் ஹாலிவுட் பாணியில் மிரட்டி இருக்கிறது இந்த திரைப்படம்
எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும் கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு, இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி இருக்கிறது
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்
படத்தின் வெற்றிக்கு உழைத்திருக்கிறது கேமரா
நடு இரவில் பேய்கள் வந்து மிரட்டுவதும் பேய்கள் ஊளையிடுவதும் இருட்டில் காட்டுக்குள் பயங்கரமான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பு ரோகித்
கச்சிதமான படத்தொகுப்பு
பயமுறுத்தும் காட்சிகள் என தொகுத்திருக்கிறார்
ஆடை வடிவமைப்பு: பிரகாஷ் ராமசந்திரன்
கெவின் பிரேடிரிக்
சவுண்ட் டிசைனராக பணிபுரிந்து இருக்கிறார்
மிரட்டி இருக்குது சவுண்ட் டிசைன்
தயாரிப்பு வடிவமைப்பு:
ஹாசினிபவித்ரா
ஆடை வடிவமைப்பு:
பிரகாஷ் ராமச்சந்திரன்
ஸ்பெஷல் மேக்கப் மேன்:
ஷெல்டன் ஜார்ஜ்
கடைசி வரை மங்கையை காட்டாவிட்டாலும் பயமுறுத்து இருக்கிறது ஏழு கண்ணிகளை காட்டிய விதம் அதன் ஒப்பனை சூப்பர்
சண்டை பயிற்சியாளர் :
ஷார்ப் சங்கர்
ஸ்டில்ஸ் தேனிஅன்பு
மக்கள் தொடர்பாளர் ஸ்ரீ வெங்கடேஷ்
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
விளம்பர வடிவமைப்பு:
தினேஷ் அசோக்
மார்க்கெட்டிங் :
மேக் மீடியா எண்டர்டெயின்மெண்ட்
வி.எப்.எக்ஸ்:
ரோகித்
கலரிஸ்ட்டாக:
ரகுராமன்
நிர்வாக தயாரிப்பாளர்:
பிரவீன் குமார்
மேலாளர்: நாகராஜன்
உதவி இயக்குனர்:
லக்ஷ்மி ஆரூன்
ஹாரீஷ்
டி.ஐ. ஸ்ரீ கலாசா ஸ்டுடியோ
டப்பிங் இன்ஜீனீயர்
யோக்பவுல்தன்ராஜ்
என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தின் வெற்றி சந்தோசத்தை கொடுக்கும் என்று நம்பலாம்
மர்மர் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் எந்த இசையின் சத்துமுமில்லாமல் அமைதியான முறையில் உங்களை பயமுறுத்தும் வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள் பட குழுவுக்கு
