அஸ்திரம் (தி சீக்ரெட்) திரை விமர்சனம்

ரேட்டிங் 4 /5

கொடைக்கானலில் காவல்துறையில் வேலை செய்கிறார் அகிலன் (ஷாம்)
இவர் குற்றவாளிகளை பிடிக்கும் பொழுது கையில் அடிபட்டு ஓய்வில் இருக்கிறார்
அதே சமயம் கொடைக்கானலில் கூகுள் பார்க்கில் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்கிறார்
இதைப் பற்றி துப்பு துலக்கும் பொழுது
மதுரையில் செல்வா என்பவர் அதேபோல தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்கிறார்
சென்னையில் வினோத் என்பவர் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்கிறார்
இந்த மூன்று கொலைகளுக்கும் ஒற்றுமை இருப்பதை நாயகன் ஷாம் கண்டுபிடிக்கிறார் இதை கொடைக்கானல்
எஸ். பி. அருள். டி. சங்கர் இடம் அகிலன் கொண்டு போகிறார்
இதைக் கேள்விப்பட்ட எஸ். பி சரி நீயே இந்த வழக்கை கண்டுபிடித்து விரைவில் குற்றவாளியை கைது செய் என்கிறார்
அகிலனுக்கு துணையாக சுமன் என்கிற இளம் காவல்துறை அதிகாரி யை(ரஞ்சித்)
நியமிக்கிறார்
அகிலனும் சுமனும் சேர்ந்து குற்றவாளி யார் என்று கண்டுபிடித்தார்களா இல்லையா?

கொடைக்கானலில் சென்னையில் மதுரையில் ஒரே மாதிரியாக ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள்?

மனநல மருத்துவரான நிழல்கள் ரவி (ருத்ரன்)
அவருக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்?

ஜீவா ரவி யார்? அவரது மகன்கள் என்ன ஆனார்கள்?

என்பதை விறுவிறுப்போடு பரபரவென்று சொல்லி இருக்கிறது “அஸ்திரம் தி சீக்ரெட்”

அரவிந்த் ராஜகோபால் இப்பத்தை இயக்கியுள்ளார்
நாயகன் ஷாம் நண்பனாக வந்து இந்த கொலைகளை கண்டுபிடிக்க விஜய் என்ற கதாபாத்திரத்தில் உதவியும் செய்கிறார் நன்றாக இருக்கிறது

இப்படத்தில் ஷாம் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் பிட்டான உடல் கட்டு குழந்தை இல்லை என்று ஏக்கம்
குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சோகம்
மேலதிகாரியான, எஸ்.பி.யிடம் திட்டு வாங்கிக் கொண்டு சோர்ந்து போய் உட்காருவது
என எல்லா விதத்திலும் நவரசங்களை கலந்து நன்றாக நடித்திருக்கிறார்
நடிகர் ஷாம் தனது தோளில் தாங்கி பிடித்து இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக தான் எல்லோரும் பயணித்து இருக்கிறார்கள். அதில் குறிப்பாக இதில் அறிமுகமாக இருக்கும் ரஞ்சித் அவருடன் முழுவதும் பயணிக்க கூடிய கதாபாத்திரம் என்றாலும் ஒரு புதுமுகம் என்பதே தெரியாதபடி அவ்வளவு இயல்பாக நடிப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்
குறிப்பாக திறந்த மனதுடன் எதையும் கற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்பது உண்மை
படத்தின் கிளைமாக்ஸ் அவர் மீது முடிவது படத்தின் இரண்டாம் பாகத்திற்கு லீடு கொடுக்கிறார்கள் என்பது தெரிகிறது
ஷாம்,நீரா ஜோடி நன்றாக இருக்கிறது

நிரஞ்சனி,
(பிரியா )என்ற கதாபாத்திரத்தில் ஷாம் மனைவியாக ஆக ஒரு டிவி சேனலில் வேலை செய்யும் பிரியா குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் உருகுவதும் வெண்பாவின் குழந்தையை கொஞ்சுவதும், கணவனுக்கு ஆறுதல் சொல்வதும் என நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
இவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் நீ போதும் என்ற ஆல்பத்தில் மக்களிடம் பிரபலமாக பேசப்பட்டவர்

நிழல்கள் ரவி,
மனநல மருத்துவராக
(ருத்ரன் )கதையின் முக்கிய மையப் புள்ளியாக வருகிறார் இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

அருள் டி .ஷங்கர்,
காவல்துறை மேலதிகாரி வேடத்தில் நாயகன் அகிலனை வறுத்து எடுக்கும் கதாபாத்திரம்
இதை கச்சிதமாக செய்து இருக்கிறார்

ஜீவா ரவி(ஜேம்ஸ்)
இவர் கதையின் மையம் தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று
மகனே செஸ் போட்டியில் தோற்கடிச் சொல்வது மகனுக்காக நல்லதே நினைப்பது ஆனால் அது ஆபத்தில் முடிவது என இவர் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது
பிரிட்டோ .மார்ட்டின். என்ற இரு குழந்தைகளுக்கு அப்பாவாக வந்து சிறப்பாக நடித்திருக்கிறார்

வெண்பா அனிதாவாக குறைவான காட்சிகளை வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்

சுமனாக வரும் ரஞ்சித் படம் முழுக்க நாயகன் அகிலனுடன் கொலை வழக்கை கண்டுபிடிக்க பரபரப்பாக சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார்
இவர்தான் படத்தின் தயாரிப்பாளர் என்றாலும் தனக்காக காட்சிகளை அதிகமாய் கொள்ளாமல் கதைக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக செய்திருக்கிறார் கலையான முகம் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் இவருக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது
இவர் (வழக்கறிஞர் என்பது கூடுதல் தகவல்)

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.

கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்
ஜெகன் வசனம் ஷார்ப்பாக இருக்கிறது
திரை கதையை, சீராக கொண்டு சென்று இருக்கிறார்

கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவாளர்
படத்திற்கு மிகவும் பலம் சேர்த்திருக்கிறது ஒளிப்பதிவு
கொடைக்கானல் அழகு முழுமையாக படம் பிடித்திருக்கிறது ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்குள் நிற்கிறது

பூபதி வெங்காடாத்ரியின்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
இரண்டு மணி நேர படம் தான் கச்சிதமான படத் தொகுப்பு

சுந்தர மூர்த்தி
சவுண்ட் ஒரிஜினல்
ஸ்கோர் செய்திருக்கிறார்

ஆர்ட் டைரக்டர் ராஜவேல்
அரங்க அமைப்புகள் அற்புதமாக இருக்கிறது
நாயகன் வீடு, போலீஸ் ஸ்டேஷன், ஜீவா ரவிவீடு,
நிழல்கள் ரவியின் மருத்துவமனை, என எல்லா இடங்களிலும் அரங்கமைப்பு சூப்பராக இருக்கிறது

மான்ஸ்டர் முகேஷ்
சன்டை பயிற்சியாளர் ஆக பணி புரிந்திருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனும், வில்லனும் மோதும் சன்டை காட்சி
அனல் பறக்கிறது

உதவி இயக்குனர்கள்
விக்னேஷ், எம் ஸ்ரீநிவாஸ்,
பிரசன்னா ,
விஜய்,
அரவிந்த் பாலாஜி ,
என அனைவரும் ஒரு வெற்றி படத்துக்காக
கடுமையாக உழைத்து இருக்கிறார்கள்
அந்த அளவுக்கு படம் ரிச்சாக வந்துள்ளது
,
பாடல்களை முத்தமிழ் எழுதி இருக்கிறார் இரண்டு பாடலும் ரசிக்க வைக்கிறது

கலரிஸ்ட்டாக
ஜி.எஸ் முத்துவும்

சவுண்ட் மிக்ஸ் கொடுத்து இருக்கிறார்
ஆனந்த ராமச்சந்திரன்
பணிபுரிந்து இருக்கிறார்கள் சிறப்பு

மக்கள் தொடர்பாளர்
ஜான் அவர் கள்
படத்தை நன்றாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

மொத்தத்தில் அஸ்திரம் தி சீக்ரெட் ஒரு அற்புதமான விறுவிறுப்பான, கிரைம் ,திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படமாக வந்துள்ளது நிச்சயம் அனைவரையும் கவரும்

ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது