‘நான்குவித மனிதர்கள்
நட்டி நட்ராஜ்,
இயக்குனர் பாரதிராஜா,
ரியோ ராஜ்,
சாண்டி
இவர்கள் வாழ்க்கையில் அம்மா என்பவர் எவ்வளவு ஸ்பெஷல் என்பதையும்
என்ன நடந்தது என்பதை யோகி பாபு
வீட்டை விட்டு வெளியே வந்த லவ்லின் இடம் சொல்லும் “அம்மா கதைகள்”தான்
நிறம் மாறும் உலகில்
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. நடிப்பிலிருந்து இயக்குநராக மாறி
எடுத்துள்ள படம் நிறம் மாறும் உலகில்
முதல் அத்தியாயம்
மும்பை கதைகளம்
அப்துல் மாலிக்காக நட்டி நட்ராஜ், அவருக்கு எதிர் வில்லனாக சுரேஷ் மேனன்( லால் )என்ற இவர்கள் இருவரில் மும்பையில் ராஜாங்கம் நடத்துவது என்ற கேஙஸ்ட்டர்
போட்டியில்
கிராமத்தில் நரேன், (தாஸ்) மகள் வாய் பேச முடியாத (மலர்) கண்ணன் என்பவரை சாதிவிட்டு காதலித்ததால் நரேனை
விட்டு அவர் மகளை கொள்ளச் சொல்கிறது ஆதிக்க சமுதாயம் ஆனால் நரேன் தான் வளர்த்த மகளை எப்படி கொள்வது என்று தப்பிக்க விட்டு விடுகிறார் இதனால் நரேனை சாதி வெறி பிடித்த மனிதர் கொன்று விடுகிறார்
இப்போது மும்பையில் இந்த காதல் ஜோடி தஞ்சம் அடைய அவர்களை பிடித்து வைத்து சுரேஷ் மேனன் நட்டியை கொல்ல பயன்படுத்துகிறார்
அங்கு என்ன நடந்தது
விபச்சாரியான தன் அம்மாவை இந்த சமுதாயம் பழி வாங்கியதால் நட்டி கத்தியை கையில் எடுக்கிற இவரின் அம்மா பாசம் என்ன ஆனது
என்பது முதல் கதைக்களம்
நட்டி அற்புதமாக நடித்திருக்கிறார்
நரேன்நடிப்பு சூப்பர்
இரண்டாம் கதை களம்
திருவரங்குறிச்சி இந்த கிராமத்தில்
பாரதி ராஜா (ராயப்பன் வடிவுக்கரசி (கோகிலா)
இவர்கள் இரண்டு
பேரும் சின்ன வயதில் இருந்து காதலித்து ஒருவரை ஒருவர் பிரிய கூடாது என்ற அன்போடு வாழ்ந்து வருகிறார்கள் பாரதிராஜா தன் உயிருக்கு உயிரான மனைவியை கோகிலா என்று பெயர் சொல்லிக் கூட அழைக்காமல் குழந்தை குழந்தை என்று அழைத்து அன்பு செலுத்துகிறார்
தங்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கிறார்கள்
மகன்கள் மூத்தவன் அழகர் ,இரண்டாம் மகன் துரை ,
இந்த இருவரும் பாரதிராஜா வையும்
வடிவுக்கரசி யையும்
முதுமையில் தனிமையில் இருக்க வைத்து பசி பட்டினியால் கொடுமைப்படுத்துகிறார்கள் பாரதிராஜாவின் இளமை காலத்தில் கோழி பண்ணை செல்லத்துரையில் நாயகனாக நடித்த வர்நடித்திருக்கிறார் சிறப்பாக இருக்கிறது
மகன் கள் அப்பா, அம்மாவை, எப்படி இன்றைய மகன் கள் வாட்டி வதைக்கிறார்கள் என்பதை சொல்கிறது இரண்டாவது கதை
இயக்குனர் இமயம் பாரதிராஜா, வடிவுக்கரசி, இருவரும் தொட்டால் பூ மலரும் என்ற பாடலுக்கு நடனம் ஆடுவது வடிவுக்கரசி பட்டினியால் வாடுவதை கண்டு இயக்குனர் இமயம் மூட்டை தூக்க போவது அதை பார்த்த பெரிய மகன் அழகர் தன்னை அவமானப்படுத்துகிறார் என்று கொதிப்பது அழகரின் மனைவி பாரதிராஜாயும்
வடிவுக்கரசியும் கரித்துக் கொட்டுவது
படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் அருமையான நடிப்பு
மூன்றாம் கதை களம்
காமேஸ்வரம் என்னும் பகுதியில் நடக்கும் அம்மாவுக்கும், மகனுக்குமான பாச போராட்டம் தான்
கதை, திரைக்கதை
நாயகன் ரியோ, ஆதியனாக அவர் அம்மா ஆதிரா பரிமளமாக ,
ரியோவின் நண்பன் விக்னேஷ் கார்த்திக், இவர்கள் வாழ்க்கையில் விளையாடும் மைம் கோபி(மஹிமை)
இவரது வில்லதனம்
எப்படி ரியோவை ஆட்டி வைக்கிறதுஎன்பதையும்
ரியோ அம்மாவுக்கு
கேன்சர் 10 லட்சம் இருந்தால் சரி செய்யலாம் என்று டாக்டர் சொல்ல அந்த பத்து லட்சத்திற்காக செய்யக்கூடாத தவறை செய்து மாட்டிக்கொண்ட
ரியோ அம்மாவை காப்பாற்றினாரா? என்றகதைக்களம்
ரியோவின் நடிப்பு
சூப்பராக இருக்கிறது
அவர் அம்மா ஆதிரா நடிப்பு நன்றாக இருக்கிறது ரியோ நண்பனாக வரும் விக்னேஷ் நடிப்பு மற்றும் மைம் கோபி என எல்லோரும் இந்த எபிசோட்டில் அசத்தியிருக்கிறார் கள்
நான்காம் கதை களம்
சென்னையில் நடக்கும் கதை களம்
அன்னக்கிளி என்ற அம்மாவுக்கும் (குயிலி)
அன்பு என்ற மகனுக்கு ம்(சாண்டி)
இருவருக்கும் நடக்கும் வித்தியாசமான அம்மா மகன் பாசத்தை விளக்குகிறது
பெற்ற மகன் ராம் ,
மற்றும் அவரது மனைவி இருவரும் வெளிநாடு செல்லயிருப்பதால்
அம்மாவை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க அழைத்துச் செல்கிறார்கள்
அன்னக்கிளி
சாண்டி யின்
ஆட்டோவில் ஏறுகிறார் அதன் பின் ஒரு நாள் முழுவதும் இருவரும் அம்மா, மகன், பாசத்தோடு இருக்க அந்த உறவு பந்தம் அப்படியே நீடிக்கிறது
சாண்டியை காதலிக்கும் மகி, அம்மா இருந்தால் இந்த திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்ல எனக்கு திருமணமே வேண்டாம் அம்மா போதும் என்று அம்மாவோடு வாழும் கதை
குயிலி நடிப்பு சூப்பராக இருக்கிறது
சாண்டி கலகலப்பாக அறிமுகமாக அம்மா பாசத்தில் உருகுவது சிறப்பான நடிப்பு
காவியா மகி என்ற கதாபாத்திரத்தில் இன்றைய பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார் நமோ நாராயணன், லிஸி, என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
இப்படி நான்கு வித்தியாசமான அம்மா கதைகள் எதற்காக இந்த நாண்கு கதைகள் என்றுசொல்பவர் யோகி பாபு
விஜய சந்திரசேகர், மகளான லவ்லின், (அபி)
அம்மாவிடம் கோபித்துக் கொண்டு ரயிலில் ஆந்திராவில் இருக்கும் தன் தோழி ஹரிதாவை
பார்க்கும் பொழுது ரயிலில் டிக்கெட் பரிசோதராக இருக்கும் யோகி பாபு சொல்லும் இந்த நான்கு கதைகள்
இந்த நான்கு கதைகளிலும் அவ்வளவு ஜீவன் இருக்கிறது கண்கலங்க வைத்து விடுகிறது மனிதர்கள் உணர்வோடு கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்
உணர்வுபூர்வமான கதையைக் கொடுத்து உள்ளத்தை தொடுகிறார் இயக்குனர்
தயாரிப்பாளர்
இந்த படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ‘தயாரித்து இருக்கிறது.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கி இருக்கிறார்
சிறப்பான இயக்கம் மனித உணர்வுகளை அம்மா என்ற பாசத்தை இப்படி எல்லாம் காட்ட முடியுமா அப்படி காட்டி கணகலங்க வைத்து விடுகிறார்
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா,
ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் இரண்டு மகன்களை பெற்று ம்முதுமை களத்தில் தள்ளாடும் கதாபாத்திரத்தை அற்புதமாக செய்திருக்கிறார் வடிவுக்கரசி ,பாரதி ராஜா ,இருவரும் பேசும் அந்த வசனம் கண்கலங்க வைத்து விடுகிறது
நட்டி நட்ராஜ்,
மும்பை தான் அப்துல் மாலிக்காக அம்மா பாசத்துக்காக
ஏங்குகிறார்
ரியோ ராஜ்,
வேலையில்லா பட்டதாரி ஆக அம்மாவின் நோயை தீர்க்க அவதிப்படும் இளைஞனாக அருமையாக நடித்திருக்கிறார்
சாண்டி மாஸ்டர்,
யாரும் இல்லாத ஆதரவற்றவராக பொக்கிஷமாக கிடைத்த அம்மாவுக்காக காதலியை துறக்கும் கதாபாத்திரம் சிறப்பு
விஜி சந்திரசேகர்,
மகள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக கண்டிக்கும் ஒரு நல்ல தாயாக நடித்திருக்கிறார்
லவ்லின் சந்திரசேகர்,
அம்மா அடித்து விட்டார் என்பதற்காக வீட்டை விட்டு சென்று யோகி பாபு விடம் பாடம் கற்கும் இன்றைய பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார்
நிவாஸ் ஆதித்தன், சல்மா,
இவர்கள் நடிக்கும் சிறப்பாக இருக்கிறது
சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் என நிறைய கலைஞர் கள் நடித்திருக்கிறார்கள்.
அனைவர் நடிப்பு நன்றாக இருக்கிறது
மொத்தம் 36நடிகர் நடிகைகளை
வைத்து அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்
மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் – தினேஷ் – சுபேந்தர் – ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார்.
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் படத்தை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த நிறம் மாறும் உலகில் திரைப்படம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை, ஊட்டும் வகையில் அமைந்துள்ளது அப்பா அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகன்களுக்கும் ,
அப்பா அம்மா கண்டித்தால் வீட்டை விட்டு வெளியே போககும் மகன், மகளுக்கும்,
எந்த சூழ்நிலையிலும் அம்மாவை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற கதாபாத்திரத்தின் மூலம்
அன்புக்கு இங்கு தடையே இல்லை யாரும் அம்மாவாகலாம், யாரும் மகனாக ஒன்று சேர்ந்து வாழலாம் .
என்று சொல்லும் நல்ல கருத்துக்களை சொல்லும் இந்த நிறம் மாறும் உலகில் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்
வெற்றி பெற வேண்டிய படம் நான்கு எபிசோடுகள் கண் கலங்க வைத்து விடுகிறது நடித்த நடிகைகள் & நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்🙏
