கணவனை கொன்றதற்காக மதுரையை அன்று எரித்தார் கண்ணகி
தனக்கு துரோகம் செய்த கணவனையே
தண்டித்தார்
இன்று ஜென்டில் வுமன் பூரணி
மனதில் உறுதி வேண்டும் சுஹாசினி,
புதுமைப்பெண்
ரேவதி,
போன்ற கதாபாத்திரங்களின் வலிமையான கதாபாத்திரமாக லிஜோமோல், நடித்திருக்கும் படம் தான் “ஜென்டில் வுமன்’
நாகர்கோயிலில் இருந்து திருமணமான புதுமணத் தம்பதிகள் ஹரிதாஸ் (அர்விந்த்)
அவரது மனைவி லிஜோமோல்(பூரணி)
இருவரும் அன்போடு வாழ்க்கை நடத்துகிறார்கள்
ஹரிதாஸ் மன்மத லீலை படத்தில் வரும் கமலஹாசனை போல பெண்களை கண்டால் ஜொள்ளுவிடும் கதாபாத்திரம்
பூரணியின் தங்கை தீபிகா ,வேலை விஷயமாக அக்கா வீட்டுக்கு வருகிறார்
அவரை ஜொள்ளு விடும் அரவிந்த் சமையலறையில் இருக்கும் தீபிகா வை நெருங்க தீபிகா திரும்ப இடறி விழுந்து மயக்கம் போட்டு விழுகிறார் அரவிந்த்
அங்கு வந்த பூரணி மயக்கம் போட்டு விழுந்திருக்கும் கணவனை அதிர்ச்சியோடு பார்க்கிறார்
அதன் பின் அவர் செல்போன் ஒலிக்கிறது எடுத்து பார்க்கிறார் அதில் அனா என்ற பெண்ணின் குரல் பிறகு ஓபன் செய்து பார்த்தால் அரவிந்த் ஒரு மோசமான கதாபாத்திரமாக மனைவிக்கு துரோகம் செய்யும் கணவனாக தெரிய அருகில் இருந்த அரிவாள் எடுத்து கணவணைஒரே போடு போடுகிறார் பூரணி
அதற்குப் பிறகு அரவிந்த் வேலை விஷயமாக வெளியூர் போய்விட்டார் என்று சொல்கிறார்
தங்கையிடம் இது எல்லாம் கடந்து தான் செல்ல வேண்டும் கல் என்றால் கணவன் என்று வாழ்ந்த காலம் அல்ல இது என்று அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார்
அதன் பிறகு அரவிந்தின் காதலி லாஸ்லியா பூரணியை தேடி வருகிறார்
அவருக்கு பூரணி சொன்ன பதில் என்ன?
லாஸ்ட்லியா அரவிந்தனை காண வில்லை என்று போலீஸிடம் புகார் செய்கிறார்
அந்த ஊரில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பூவேந்தர் அரவிந்தனை தேடி வருகிறார் அவருக்கு பூரணி சொன்ன பதில் என்ன?
இந்த வழக்கை எடுத்து நடத்தும் அசிஸ்டன்ட் கமிஷனர் பூரணியின் நடவடிக்கையை கவனித்து என்ன நடந்தது என்று கண்டுபிடித்தாரா?
பக்கத்து வீட்டில் இருக்கும் நான்சி பூரணி மீது சந்தேகப்படுகிறார் அவர் இந்த கொலையை கண்டுபிடித்தாரா ?
என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை
படம் முதல் பாதி கணவன் மனைவி என்று நிதானமாக சென்றாலும் அரவிந்தனை பூரணி கொலை செய்த பிறகு அதை சமாளிக்கும் விதத்தில் படம் றெக்கை கட்டி பறக்கிறது படத்தின் மையப் புள்ளியே அதுதான்
: Gentlewoman Cast & Crew Details
லிஜோமோல் ஜோஸ்,
இவருக்கு மட்டும் எப்படி இப்படி லட்டு லட்டான கதைகள் கிடைக்கிறது என்று மற்ற நடிகைகள் நிச்சயம் பொறாமைப்படுவார்கள் ஜெய் பீம் படமாக இருக்கட்டும் காதல் பொதுவுடமை ,படமாக இருக்கட்டும் இந்த ஜென்டில் வுமன், படமாக இருக்கட்டும்
எல்லாமே பெண்ணியம் பேசும் படமாக நடிப்புக்கு தீனி போடும் படமாக லிஜோவுக்கு அமைந்துவிட்டது
பூரணி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் தவறு செய்யும் கணவன் இறந்துவிட்டான் என்று கொஞ்சம் கூட கண் கலங்காமல் தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக படத்தில் நடித்திருக்கிறார் எப்படியாவது இவர் தப்பித்து விட வேண்டும் சட்டத்தின் பிடியில் மாட்டக்கூடாது என்று படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஏங்குகிறார்கள் அந்த ஏக்கம் தான் படத்தின் மிகப்பெரிய வெற்றி
தவறு செய்பவர்களே தலை நிமிர்ந்து நிற்கும் போது தவறு செய்யாத நாம் ஏன் கலங்க வேண்டும் என்று கம்பீரமாக நடைபோட்டு இருக்கிறார் புதுமைப்பெண் என்றால் இவர் தான் புதுமைப்பெண் படம் முழுக்க அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் பூரணி (லிஜோ மோல்)
ஹரி கிருஷ்ணன் இப்படத்தில் நாயகன் என்றாலும் கொஞ்ச நேரம் தான் வருகிறார் ஜொள்ளு விடும் கதாபாத்திரத்தில் அரவிந்தாக சிறப்பாக நடித்திருக்கிறார்
அண்ணா என்ற கதாபாத்திரத்தில் லாஸ்ட் லியா சிறப்பாக நடித்திருக்கிறார் அவர் நடித்த படங்களிலேயே இந்த படம் அவருக்கு நிச்சயம் மகுடம் சூட்டும் படமாக அமைந்திருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில்
பெண்மையை பாதுகாக்க போராடும் அந்த போராட்டம் நிச்சயம் கைதட்டல் பெற்று தருகிறது
ராஜீவ் காந்தி: காவல்துறை அதிகாரி பூவேந்தனாக நடித்திருக்கிறார்
அவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் கைதட்டலும் விசில் சத்தமும் பறக்கிறது
எதார்த்தமான நடிப்பில் பூரணியை விசாரணை செய்யும் பொழுது அட நம்ம ஊரு பொண்ணு என்று அவர் உருகுவதும் ஏசியிடம் திட்டு வாங்குவதும் மனிதன் வெளுத்து வாங்கி விட்டார் நிச்சயம் ரசிகர் மத்தியில் பேசப்படுவார்
பூரணி தங்கையாக
தீபிகா வாக நடித்திருக்கும் தாரணி ஓரிரு காட்சிகள் வந்தாலும் அம்சமாக நடித்திருக்கிறார் தன் அக்காவிடம் எப்படி அக்கா இதெல்லாம் கடந்து போகிறாய் என்று வெகுளி தனமாய்கேட்க
அக்கா பதில் சொல்ல அந்த உரையாடல் ரசிக்க வைக்கிறது
மற்றும் வைர பாலன் சுதேஷ் இருவர் நடிப்பும் அமர்க்களம் ஆரவாரம் சிறப்பாக இருக்கிறது
இயக்குனர்
இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜோஸ்வா சேதுராமன்
கதையில் தெளிவு,
திரைக்கதை, சீராக இருக்கிறது
வசனம் அற்புதமாக இருக்கிறது இயக்கத்தில் புதுமை, வித்தியாசமான சிந்தனை தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர்
பெண்களுக்கான சுதந்திரம் இப்படியும் பேசலாம் என்று வித்தியாசமான கோணத்தில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துகள் 🙏
தொழில் நுட்ப கலைஞர்கள்
கோவிந்த் வசந்தாவின் இசை உயிரோட்டமாக இருக்கிறது வயலின் இசை கதைக்கு மிக்க பலமாக இருக்கிறது
காத்தவராயன் ஒளிப்பதிவு இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார் 80 சதவீதம் பூரணியின் வீடு, லாஸ்ட் லியா வீடு ,என கேமரா அந்த அப்பார்ட்மெண்ட்டை ரிச் ஆக காட்டி இருக்கிறது கேமரா மேனுக்கு வாழ்த்துக்கள்
இளையராஜா சேகர் பட தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார் இரண்டு மணி நேரம் படம் தான் எந்த இடத்திலும் படம் லேக்காகவில்லை இடைவேளைக்கு பிறகு ஜெட் வேகத்தில் படம் என்ன ஆகுமோ பூரணி சட்டத்தின் படிகள் சிக்கி விடுவாரோ என்ற பதபதப்பை ஏற்படுத்தி படத்தொகுப்பை சீராக செய்திருக்கிறார்
தயாரிப்பு நிர்வாகியாக அமரன் பணிபுரிந்து இருக்கிறார் அவர் பங்கு சிறப்பானது
படத்திற்கு தேவையான வசனம் எழுதி பாடல்களை எழுதி இருக்கிறார் கவிஞர் யுக பாரதி ,
இன்ஸ்பெக்டர் பூவேந்தன் பேசும் வசனங்கள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது யுக பாரதிக்கு வாழ்த்துக்கள் அதேபோல பூரணி தன் தங்கையிடம் பேசும் பொழுது அந்த காட்சிகளில் வசனம் ரசிக்க வைக்கிறது
அண்ணாவும் பூரணியும் பேசும் போது வசனங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது
வசனத்துக்கு என்றே
விருதுகள் வழங்கலாம் அவ்வளவு சிறப்பான வசனங்கள்
சண்டை பயிற்சியாளராக சுதேஷ் பணி புகுந்திருக்கிறார்
லாஸ்லியாவும்
அசிஸ்டெண்ட் கமிஷனர் இருவரும் மோதும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
நடன பயிற்சியிளாராக
அசார் பணி புரிந்து இருக்கிறார் சிறப்பு
ஆடை வடிவமைப்பாளராக சத்தியா பணி புரிந்திருக்கிறார்
பூரணியின் உடை வடிவமைப்பும் லாஸ்ட் லியா , உடை வடிவமைப்பும், அரவிந்தின் ஆடை வடிவமைப்பும் கண்களுக்கு விருந்து
அசோசியேட் இயக்குனர்களாக
அண்ணாமலைக்காரு ,புகழ் மகேந்திரன்,
அசிஸ்டன்ட் இயக்குனர்களாக
தினேஷ்குமார், ஆரோக்கிய ராஜ், பகத் பிஎஸ்,
மற்றும் ஈஸ்வரன் ,
ஆகியோர் படத்தில் வெற்றிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
பிரேமா ஒர்க்ஸ் டி .ஐ பணியை செய்திருக்கிறது சிறப்பாக இருக்கிறது
ஆதித்ய கிருஷ்ணா, கலரிஸ்ட்டராக
பணிபுரிந்து இருக்கிறார் கலர் கரெக்ஷன் நன்றாக இருக்கிறது.
வி .எப் .எக்ஸ்: ஆண்டனி ராஜ்
ராம் சிவனேஷ்
ஒளிப்பதிவாளருக்கு உதவியாளர்களாக
படேல் பித்தயா,
கிரண் ,
அபிஷேக் சிங்,
பணிபுரிந்து இருக்கிறார்கள்
உதவி படத் தொகுப்பாளராக சத்யா பணி புரிந்திருக்கிறார்
மற்றும் மோகன்
வசந்த் சேகர்
சசிகலா ஆகியோர் பணி புரிந்திருக்கிறார்கள்
அரங்கமைப்புக்கு உதவியாளர்களாக
தேவேந்திரன் ,பாலு
யுவனேஷ் ,
திவ்ய ராஜன்,
கடுமையாக உழைத்திருக்கிறார்கள்
பரணிதரன், பப்ளிசிட்டி டிசைனராக பணி புரிந்திருக்கிறார்
மக்கள் தொடர்பாளராக சதீஷ் &சிவா டீம் (AIM)
இப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இப்படத்தின் தயாரிப்பாளர்கள்
கோமளா ஹரி,
ஹரி பாஸ்கரன்,
பி என் நரேந்திர குமார்,
மற்றும் லியோ
லங்கேன் நேதாஜி
இணை தயாரிப்பாளர்,
தினேஷ்குமார்,
Production Banner: Komala Hari Pictures & One Drop Ocean Pictures
Theatrical Release by :
Uthraa Productions – S Hari Uthraa
என இப்படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது பெண்களுக்கும்
வித்தியாசமான படத்தை ரசிப்பவர்களுக்கும், இந்த படம் ஒரு விருந்தாக அமையும்
