” அம்மா ராஜசேகர், இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெட்டு “
இப்படத்தில் நாயகனாக ராகின் ராஜ், சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா நடித்துள்ளனர்
ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில், சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் “வெட்டு”!
மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
அந்த அனுபவம் நன்றாக தெரிகிறது ஒரு கமர்சியல் படத்தை எப்படி கொடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டு இந்த படத்தை வெற்றி படமாக கொடுத்திருக்கிறார்
கதை களம்
ராமசாமி என்கிற ராகின் ராஜ் ,இவரது அம்மா ஸ்ரீதேவியாக சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகிராதா, இளமையான அம்மா.
இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு ராகின் ராஜ் சின்ன வயதாக இருக்கும் பொழுது போய்விடுகிறார் அதன் பிறகு ராதா மகனை வளர்த்து ஆளாக்குகிறார்
ராதா நோய்வாய்ப்பட தன் கணவனை எப்படியாவது தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று மகனிடம் கோரிக்கை வைக்கிறார்
ராகின் ராஜ் தன் அப்பாவை தேடி உத்திரபிரதேசம் செல்கிறார் அங்கு கோழிக்கடை வைத்திருக்கிறார் இவரின் அப்பா அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பூஜா ,என்ற மகளும் இருக்கிறார்கள் அந்த கோழி கடையிலேயே வேலை செய்து தன் அப்பாவை எப்படியாவது அம்மாவிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று நாயகன் முயற்சி செய்கிறார்
இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் மதம் வைத்து அரசியல் செய்யும் குருதேவ், ராம்தேவ் இருவரும் பல கொலைகளை செய்கிறார்கள் ஒரு கட்டத்தில் கோழிக்கடையில் புகுந்து அட்டூழியம் செய்யும் ராம்தேவ் தன் அண்ணனுடன் வந்து நாயகனின் சித்தி லட்சுமியை, கொலை செய்ய கத்தியை கழுத்தில் வைக்கிறார் அப்போது நாயகன் வெகுண்டு எழுந்து அந்த கும்பலையே சாய்த்து குரு தேவை கோழி வெட்டுவது போல வெட்டி துவம்சம் செய்கிறார்
அதன் பிறகு என்ன ஆச்சு குருதேவ் ஆட்கள் ராமசாமியின் குடும்பத்தை என்ன செய்தார்கள் ?
தன் அம்மாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி அப்பாவை மீண்டும் கூட்டிக் கொண்டு வந்தாரா ராகின் ராஜ் ?
குருதேவின் அம்மா விஜிசந்திரசேகர் ராகின் ராஜையும் அவரது அப்பாவையும் அவரது சித்தியையும் பழிவாங்காமல் விட்டாரா?
காதலிக்கும் ராகின் ராஜ், பூஜா, அண்ணன் தங்கை எனத் தெரிந்த பிறகு அவர்கள் காதல் என்ன ஆனது ? என்பதை பரபரப்போடு விறுவிறுப்போடு சொல்லி இருக்கிறது இந்த வெட்டு திரைப்படம்
நாயகன் 17வயது பையனாக ராகின் ராஜ் செய்யும் மாபெரும் சம்பவம் தான் இப்படம். இதில் அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என அருமையாக நடித்தி ருக்கிறார்
இடைவேளை காட்சிக்கு முன் அவர் வெகுண்டெழுந்து குரு தேவை வெட்டி சாய்ப்பது பரபரப்பாக இருக்கிறது
நடிகை அங்கீதாவை காதலிப்பது என் தங்கை என்று தெரிந்த பிறகு புலம்புவது விஜி சந்திரசேகரிடம் பதுங்குவது இந்திரஜாவிடம் பாதுகாப்பு கேட்பது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்
காட்டுக்குள் பழங்குடி மக்கள் இடம் எதும் தப்பிக்கும் காட்சி பரபரப்பு சின்ன வயது மகேஷ்பாபு வை பார்ப்பது போல இருந்தது ராகின் ராஜுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது
ராகின் ராஜ் க்கு ஜோடியாக அங்கிதா நடிக்கிறார். இளமைக்கும் கவர்ச்சிக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள்
இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக கருப்பு மை பூசிக்கொண்டு சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்
பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் அம்மா ராஜசேகர். நன்றாக இருக்கிறது இசை எஸ்.எஸ்.தமன், பாடல் டி.ராஜேந்தர், ஒளிப்பதிவு ஷியாம் கே நாயுடு, நடனம் அம்மா ராஜசேகர், ஸ்டண்ட் சில்வா, கெவின், பிஆர்ஓ கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு பிரேம்நாத், தயாரிப்பு சேலம் வேங்கை அய்யனார். என என அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது ராகுல்என நடித்திருக்கும் அவரின் நடிப்பு காமெடி ரசிக்க வைக்கிறது
மொத்தத்தில் இந்த வெட்டு” ஆக்சன் பிரியர்களுக்கு லட்டு
