ஹார்ரர் த்ரில்லர் திரைப்படம். தி டோர்” இப்படத்தை ஜெயித் தேவ் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அதனால்தான் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்
இப்படத்தை பாவனாவின் கணவர் நவீன் ரஜன், ஜூனட்ரீம் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் பாவனா 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்.
அதே பழைய பாவனா பேசும் கண்கள், அழகான முகம், இளமை குறையாமல் பொலிவோடு நம்மை கவர்ந்திருக்கிறார் நடிப்பிலும் நன்றாக நடித்திருக்கிறார்
நடிகை & நடிகர்கள்
பாவனா, ஜெயபிரகாஷ்,
கணேஷ் வெங்கட்ராம்,
ரோஷினி,
பைரி வினோ, வினோலயா, கபில்,
ரமேஷ் ஆறுமுகம்,
பிரியா வெங்கட்,
சிந்தூரி ,சங்கீதா, பாண்டி ரவி ,கிரீஸ் ,
நந்தகுமார், சிவரஞ்சனி
ஆகியோர் நடித்துள்ளனர்
கதை களம்
என் கே வி ஆர்கிடெக்கில் பணிபுரியும் மித்ரா (பாவனா) இவரின் ஹெட்டாக ஜெயபிரகாஷ் (வேல் முருகன்) அதே அலுவலகத்தில் பணிபுரியும் விநாயக் மற்றும் பாவனாவின் தோழி ஷாலினி இவர் மீடியாவில் பணிபுரிகிறார்
பாவனாவுக்கு திருமண ஏற்பாடு செய்வதால் தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருக்கிறார் தந்தை ஒரு வழக்கறிஞர் மகள் பேசாத சோகத்தால் வீட்டுக்கு திரும்பும் பொழுது ஒரு துர் மரணம் ஏற்பட்டு இறந்து போகிறார்
அப்பாவை தேடி அந்த ஊருக்கு வருகிறார் பாவனா
அங்கு 24 மாடி குடியிருப்புகள் 10 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும் அந்த பணி இவருக்கு ஒப்படைக்கப்படுகிறது இவர் கட்டிட மேற்பார்வைக்காக செல்லும் பொழுது மேலிருந்து ஒருவர் கீழே விழுந்து இறந்து விடுகிறார் ஆறு மாதத்தில் மட்டும் நான்கு கொலைகள் இது ஏன் என்று திடுக்கிடுகிறார் !
தோழி ஷாலினியின் உதவியோடு மருத்துவர் (பைரி வினோ)
உதவி செய்ய என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் அதற்கு ரியாஸ் என்னும் கதாபாத்திரத்தில் வரும் கணேஷ் வெங்கட்ராம் அவரும் உதவி செய்கிறார்
ஒரு ஆவி அடிக்கடி பாவனா முன்வந்து அழுகிறது அது ஏன் என்ன நடந்தது?: இது தவிர பாவனா தங்கி இருக்கும் வீட்டில் மரியம் என்ற அவருடைய தோழியையும் ஆவி ஆட்டிப் படைக்கிறது அது ஏன்?
ஜெயபிரகாஷிடம்
அந்தக் கட்டிடம் கட்டுவதற்கு முன்னால் யார் அந்த இடத்தை வைத்திருந்தார்கள் என்பதை விரிவாக பாவனா கேட்க அவர் நடந்த விஷயங்களை சொல்கிறார் அதன் பிறகு கனேஷ் வெங்கட்ராம் மற்றும் மருத்துவர் ,ஷாலினி, பாவனா அனைவரும் கொடைக்கானல் போகிறார்கள் அங்கு பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வருகிறது
அது என்ன ?
பாவனாவின் அப்பா
ரத்னம் மரணத்திற்கும் அந்த ஆவிக்கும் என்ன சம்பந்தம் ?
முன்னாள் காவல்துறை அதிகாரி குமார் பாவனா டீம் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு போனபிறகு இறந்து போகிறார் அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?
அதில் சம்பந்தப்பட்ட டாக்டர் செல்வா அவரும் இவர்கள் விசாரணைக்கு பிறகு இறந்து போகிறார் ஏன் ?
மற்றும் பல முடிச்சுகளுக்கு காரணமாக இருக்கும் கோடை ரவி யார்?
ராம் என்ற கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
ராம் யார்?
இரண்டு பெண் ஆவிகள் அம்மா, மகள் ,என பாவனாவிடம் சொல்ல வருவது என்ன ?
1992 இல் அண்ணன் தம்பிகள் மூன்று பேர் ஒரே நேரத்தில் இறந்து போகிறார்கள் அவர்களுக்கும் இந்த ஆவிகளுக்கும் என்ன சம்பந்தம் ?
என்பதை விறுவிறுப்பாக பரபரப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஒரு துப்பறியும் படம் பார்த்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது
பேய் படம் என்றாலே ரத்தம் வரும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுவார்கள் வெறி பிடித்தபடி ஆடுவார்கள் என்பதை எல்லாம் மாற்றி ஒரு டீசன்டான ஒரு வித்தியாசமான கதை களத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெய் தேவ் பாராட்டுக்கள்
தயாரிப்பாளர்:
நவீன் ராஜன்
இயக்கம் :ஜெய் தேவ்
அருமையான மேக்கிங் அருமையான இயக்கம்
ஒளிப்பதிவு : கௌதம் .ஜி
படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிக பலமாக வந்திருக்கிறது
இசை :வருண் உன்னி
பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது
படத்தொகுப்பு :அதுல் விஜய்
படத்தொகுப்பு கச்சிதமாக 2 மணி நேரம் 12 நிமிடங்கள் விறுவிறுப்பாக இருக்கிறது படத்தை செதுக்கி இருக்கிறார் பட தொகுப்பாளர்
ஆர்ட் டைரக்டர்: கார்த்திக்
அரங்க அமைப்புகள் பளிச்சென்று இருக்கிறது
காஸ்ட்யூம் டிசைனர் வெண்மதி கார்த்திக்
மக்கள் தொடர்பாளர் பரணி
என எல்லோர் உழைப்பிலும் ஒரு வெற்றி படைப்பாக வந்திருக்கிறது “தி டோர் “ஹாரார்
படம் மட்டுமல்ல துப்பறியும் இன்வெஸ்டிகேஷன் படமாகவும் விறுவிறுப்பாக வந்துள்ளது நிச்சயம் அனைவரையும் கவரும்
