அம்…ஆ திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில் உருவான அம்மா மகள் சென்டிமென்ட் திரைப்படம். இதில் திலீஷ் போத்தன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். மற்றும் தேவதர்ஷினி, மீரா வாசுதேவ், ஜாபர் இடுக்கி, முத்துமணி மற்றும் அலென்சியர் லே உள்ளிட்டோர் நடிப்பில் வாழ்வில் படமாக எதார்த்தமாக வந்துள்ளது அனைவரும் சிறப்பாக நடித்தி ருக்கிறார்கள்.

கவிபிரசாத் கோபிநாத் திரைக்கதை எழுதி காபி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் விசாரணை கோணத்தில் தாய்மையை மையப்படுத்தி உருவாகியுள்ளது ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது கிளைமாக்ஸ் முடித்த விதம் மிக அருமையாக இருக்கிறது

கதை களம்

ஸ்டீபன்(திலீஷ்போத்தன்) எனும் ரோட் காண்ட்ராக்டர், கவந்தா எனும் ஒரு மலை கிராமத்திற்கு வருகிறார், அங்குள்ள ஒரு தாயையும், மகளையும் அவர்களோடு மாறுபட்ட மனிதர்களையும் சந்திக்கிறார். அவர்களின் அன்பு சூழ்ந்த வாழ்க்கை, அவரை நெகிழ வைக்கிறது.
ஏலப் பாறை என்ற இடத்தில் இருந்து ஒரு தாயும் மகளும் இங்கு வந்திருக்கிறார்கள் என்று அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் உண்மையில் அவர் யார் ரோடு காண்ட்ராக்டரா? அல்லது போலீஸ் அதிகாரியா? என்பது இடைவேளை வரை ஜம்மென்று போகிறது: அதன்பிறகு தேவதர்ஷணியும் அவரது குழந்தை குயில் இவரை இருவரும் கதை விரிகிறது இவர்கள் இருவரும் யார்? எங்கிருந்து வந்தார்கள் ?இவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை சொல்லும் போது அடடா! அவ்வளவு அற்புதமாக இருக்கிறது தாய்மையின் அன்பை இந்த படத்தை விட வேற எந்த படத்திலும் சிறப்பாக சொல்லி விட முடியாது .

வாடகை தாயாக இருக்கும் பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் அந்த குழந்தை சிறிது ஊனமாக இருந்தால் வாடகை தாயிடம் விட்டு விட்டு போய் விடுகிறார்கள் என்கிற வித்தியாசமான சிந்தனையும், இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள் அதேபோல குயிலுக்கு கொஞ்சம் பேச முடியாது இதனால் விட்டு விட்டு போய்விடுகிறார்கள் என்ற கருத்தையும் நன்றாக சொல்லி இருக்கிறார்கள்

முதலில் படம் ஆரம்பிக்கும் பொழுது அஞ்சு என்று ஒரு கதாபாத்திரத்தை காட்டுகிறார்கள் குழந்தைக்காக ஏங்கும் அந்த தாயின் கதறலோடு படம் ஆரம்பித்தாலும் இந்த அஞ்சு என்ற கதாபாத்திரத்தை கிளைமாக்ஸ் காட்சியில் இணைத்த விதம் அருமை அருமை அருமை💐

🌷 தேவதர்ஷினி

ஒரு தாயின் பாசத்தை இப்படத்தில், தேவதர்ஷினி தாயாக, மிக அழுத்தமான பாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். இதுவரையிலும் காமெடியில் கலக்கிய இவர், இப்படத்தில் மிகவும் மாறுபட்ட நடிப்பை வழங்கி அசத்தியுள்ளார்
இப்படம் மூலம் நிச்சயம் குணச்சித்திர நடிகை யாக படங்களில் இவரை எதிர்பார்க்கலாம் அவ்வளவு அருமையான நடிப்பு.

🌷திலீஷ் போத்தன்

படத்தின் ஆரம்பத்தில் ரோடு கான்ட்ராக்டர் ஆக அறிமுகமாகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இன்வெஸ்டிகேஷன் நடத்துகிறார் அந்த குழந்தையும் தாயும் எப்படி அந்த மலை மீது ஏறினார்கள் அவர்கள் யார்? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை தொடங்கபட்டவுடன் இவர் கதாபாத்திரம் நிமிர்ந்து நிற்கிறது ஆசான் என்ற கதாபாத்திரம் இவர் மீது சந்தேகப்பட இடைவேளையின் போது இருவரும் மோதிக் கொள்ளும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டு இருக்கிறது திளீஷ்
நடிப்பு நன்றாக இருக்கிறது

மற்ற நடிகர் & நடிகைகள்

திலீஷ் போத்தன், தேவதர்ஷினி இவர்களோடு இப்படத்தில், ஜாபர் இடுக்கி, மீரா வாசுதேவ், டி.ஜி.ரவி, ஸ்ருதி ஜெயன், அலென்சியர், மாலா பார்வதி, ஜெயராஜன் கோழிக்கோடு, முத்துமணி, நவாஸ் வள்ளிக்குன்னு, பேபி நிஹாரா, நஞ்சியம்மா, சரத் தாஸ், நீரஜா ராஜேந்திரன், ரகுநாத் பிரபாகரன், அஜீத் பிரபாகரன், அஜியுர்ஷா பலேரி, விஜுபால், ஜோஸ் பி ரஃபேல், சதீஷ் கே குன்னத், அம்பிலி ஓசெப், கபானி ஹரிதாஸ், சினேகா அஜித், லேதா தாஸ், ரேமாதேவி, கே.கே.இந்திரா, விஷ்ணு வி.எஸ்., லதா சதீஷ், நமிதா ஷைஜு, பிந்து எல்சா, ஜிஜினா ஜோதி, லின்சி கொடுங்கூர், லிபின் டோமுய்யா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஆசான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்வையற்றவர் நடிப்பு அருமை
மற்றும் பஞ்சாயத்து ஆபீஸ் வேலை செய்யும் திளீஷ் போத்தனுக்கு உதவும் அந்த கதாபாத்திரம்
தேவதர்ஷினிக்கு உதவும் அந்த ஏழை தாய்மார்கள்
டீக்கடை நடத்தும் முத்து
குழந்தைக்காக ஏங்கும் அஞ்சு
தேவதர்சியின் தோழி நர்ஸ்
வாடகைத்தாயாக நடித்திருக்கும் பெண்
குயிலியாக நடித்திருக்கும் குழந்தை
எல்லோரும் நடிப்பு சிறப்பாக இருக்கிறது

தொழில்நுட்ப கலைஞர்கள்

🌷: : தாமஸ் செபாஸ்டியன் இயக்கம்
அருமையாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்கம் சிறப்பாக இருக்கிறது

🌷எழுத்தாளர்: கவிபிரசாத் கோபிநாத்
தமிழ் மொழி மாற்ற எழுத்தாளர் :- எஸ்.ஆர்.வாசன்
இவர்கள் பங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது தமிழ் டப்பிங் நன்றாக இருக்கிறது கதை சூப்பராக இருக்கிறது

:🌷அனிஷ்லால் ஆர்.எஸ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மலையும் மலை சார்ந்த அழகும் இந்த கிராம குளிர்ச்சியும் கண்களுக்கு கேமரா மூலம் திகட்டாத ஒரு குளுமையையும் கொடுத்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர்
வாழ்த்துக்கள் சார்

🌷இசையமைப்பாளர்: கோபி சுந்தர்
பாடல் பின்னணியில் வரும் இசை நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கிறது

🌷 பிஜித் பாலா
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

🌷 பிரசாந்த் மாதவ்
கலை இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார் அவர் பங்கு சிறப்பாக இருக்கிறது

ரஞ்சித் அம்பாடி
அவர்களின் ஒப்பனை தேவதர்ஷினிக்கும் திளீஷ் போத்தனக்கும் ஆசானுக்கும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது
: குமார் எடப்பல்
காஸ்டியூம் பணியை செய்து இருக்கிறார் எல்லாமே சிறப்பாக இருக்கிறது

கலரிஸ்ட்: சிபி ரமேஷ், கலர்பிளானெட் ஸ்டுடியோஸ் கொச்சி
பாடலாசிரியர்கள்: பாபுராஜ் களம்பூர், சத்தியவேழன்
ஸ்டில்ஸ் : சினாட் சேவியர்
ஸ்டண்ட் : மாஃபியா சசி
ஒலி கலவை: கருண் பிரசாத், சவுண்ட் ப்ரூவரி கொச்சி
முதன்மை இணை இயக்குனர்: கிரீஷ் மாரார் தயாரிப்பு மேற்பார்வை : கிரீஷ் அதோலி
🌷மக்கள் தொடர்பு : கேப்டன் ஆனந்த்

என அனைவரின் பங்கும் இப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறது
ஒரு வெற்றிப் படத்தை வித்தியாசமான முறையில் சிந்தித்து தாய்மை உணர்வை மையக் கதையாக வைத்து படமாக்கி இருக்கிறார்கள் நிச்சயம் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் படக் குழுவுக்கு வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா🌷