கேங்கர்ஸ் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

இயக்குனர் சுந்தர் சி. யின் வின்னர், லண்டன், கிரி, தலைநகரம், நகரம் படங்களுக்கு பிறகு சுந்தர் சி -வடிவேலு காம்போவில் உருவாகியிருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். அரண்மனை சீரிஸ் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீீண்டும் சிரிப்பு சரவெடியை கொடுத்திருக்கிறார் மேலும், வடிவேலு – சுந்தர் சி காம்போவில் உருவாகியுள்ள இப்படம் மாபெரும் வெற்றியடையும் வசூல் மழை பொழியும் என்பது உண்மை
இந்த படத்துக்கு விரைவில் சக்சஸ் மீட் இருக்கு என்பது உண்மை

நடிகர்கள்

சுந்தர் .சி – as சரவணன்

கதாபாத்திரத்தில் சண்டைக் கட்சியில் அசத்தியிருக்கிறார்
வடிவேலுவுடன் காமெடி காட்சியில் கலக்கி இருக்கிறார் வாணி போஜன் உடன் வரும் காட்சியில் செம ரொமான்ஸ், இயக்குனர் ஆக வெற்றி பெற்றிருக்கிறார் கமர்சியல் பார்முலா எப்படி ரசிகர்களுக்கு கொடுத்தால் ரசிப்பார்கள் என்பதை துல்லியமாக எம்ஜிஆர் ஃபார்முலாவாக படத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் வெற்றி பெற்றிருக்கிறார்🌷

வடிவேலு as சிங்காரம்

பள்ளியில் பி .டி மாஸ்டராக, நாயகியை ஒருதலையாக விரும்பி சுந்தர் சி
வில்லன்களை புரட்டி எடுக்க அந்த இடத்தில் தானா வடிவேலு மாட்டிக் கொண்டு செய்யும் லூட்டி செம ரகளை மாறுவேடம் போட்டு இவர் செய்யும் கலாட்டா படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்திருக்கிறார் மீண்டும் வடிவேலு

காத்ரின் தெரசா as சுஜிதா

அந்த சாமக் கோழி குத்து பாட்டு போதும் செம
படம் முழுக்க பள்ளி ஆசிரியாக வந்து
சுந்தர் சி யின் கேங்கர்ஸ் கூட்டத்தில்
டெக்னிக்கல் டீமராக பணிபுரிந்து கலகலப்பு ஏற்படுத்துகிறார் சரியான தேர்வு

வானிபோஜன் as மாதவி

ஒரு பாடலுக்கு கதையின் திருப்பு முனைக்கு வந்தாலும் மனதை தொடும் நடிப்பு வாணி போஜனுக்கு வாழ்த்துக்கள்💐

முனீஷ்காந்த் as பட்டைசாமி

என்கிற கதாபாத்திரத்தில்
சம்பந்தமே இல்லாமல் சுந்தர் சி கூட்டத்தில் கலந்து கொண்டாலும் காமெடியில் பட்டையை கிளப்புகிறார்

பக்ஸ் as கணக்கு வாத்தியார்

என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
போலீஸ் என்றால் கெத்தாக இருக்க வேண்டும் என்ற சமுதாயத்தை உடைத்து இப்படி பயந்தாங்கொல்லியாகவும் இருக்கலாம் என்று நடிப்பின் மூலம் கலக்கியிருக்கிறார் பாக்ஸ்

காளை as அமலதாசன்

இவர் வரும் காட்சிகள் கலகலப்பு
குடித்துவிட்டால் உண்மையைக் கடந்து விடலாம் என்று கேங்கர்ஸ்
டீமுக்கு ள்சேர்ந்து
கலகலப்பு ஏற்படுத்துகிறார்

ஹரிஷ் பேரடி as முடியரசன்

மெயின் வில்லன் இவர் தான்
மூன்று வருடம் வெளிநாட்டில் இருந்து விட்டு மகனுக்காக சென்னை திரும்பும் இவர் வந்த பிறகு படம் செம விறுவிறுப்பாக ராக்கெட் வேகத்தில் போகிறது இவர் கதாபாத்திரம் சிறப்பு சிறப்பாக நடித்திருக்கிறார்

மைம் கோபி as மலையரசன்

கிராமத்தில் அடாவடி செய்யும் வில்லனாக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்

அருள்தாஸ் as கோட்டையரசன்

சுந்தர் சி யிடம் செம அடி வாங்கி படம் முழுக்க கழுத்தில் ஒரு பட்டையை மாட்டிக் கொண்டு திருதிருவென விழித்துக் கொண்டு சூப்பராக நடித்திருக்கிறார் அருள்தாஸ்

சந்தானபாரதி as ஆகாஷ்

நாயகியின் தாத்தாவாக குடிகார வேடத்தில் குதூகாலம் ஊட்டுகிறார்

விச்சு as ஹெட்மாஸ்டர்

இவருக்கு போர்சன் குறைவு என்றாலும் நிறைவான கதாபாத்திரம்

மாஸ்டர் பிரபாகர் as சூரி

கிளைமாக்ஸ் காட்சியில் வந்தாலும் படத்தின் மைய கதையோடு ஒட்டி கலகலப்பை ஏற்படுத்துகிறார்

மதுசூதன் ராவ் as மினிஸ்டர்

இவர் முதலில் உண்மையை புரிந்து கொள்ளாமல் எடுக்கும் முடிவு பிறகு உண்மை தெரிந்து கொண்டு எடுக்க முடிவு எல்லாமே கதையின் ஓட்டத்திற்கு ஒத்துப் போகிறது

ரிஷி as முத்தரசன்

பள்ளியில் மாணவர்களுக்கு போதப்பழக்கத்தை கற்றுத் தரும் ரிஷி நடிப்பு சிறப்பு

இவர்களுடன் கௌரவ தோற்றத்தில் – விமல்

பரிதாப பட்ட ஒரு கதாபாத்திரத்தில் கச்சிதமாக வந்து கிளைமாக்ஸ் காட்சியை இவர் மீது வைத்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் ஒரு வெற்றி படத்துக்கு தேவையான கதாபாத்திரங்களும் அதன் தேர்வு படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது

கதை களம்: பள்ளி மாணவி (ரம்யா ) திடீரென்று மாயமாகிவிடுகிறார். இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் டீச்சரம்மா கேத்ரீன் தெரசா. இவர் மேல் அதிகாரிக்கு ,
மனு அனுப்ப
ஒரு போலீஸ் அதிகாரி அன்டர்கவரில் அந்த பள்ளிக்கு வருகிறார்.
அவர் யார் என்பது சஸ்பென்சாக கொண்டு போயிருக்கிறார்கள் புத்திசாலித்தனமாக இருக்கிறது

முதல் பாதி முழுவதும் கலகலப்பு காமெடி ஆக்சன் என அனல் பறக்கிறது.
இரண்டாம் பாதியில் சுந்தர் .சி சொல்லும் கதையை நம்பி கேங்கர்ஸ் கூட்டம் அந்த நூறு கோடியை அடைவதற்கு போடும் மாஸ்டர் பிளான் எல்லாம் பக்கா

அந்த 100 கோடி
பணத்தை திருடும் பகுதி வரும் இரண்டாம் பாதியில் தான் படம் செம சூடுபிடிக்கிறது. வடிவேலுவும், சுந்தர் சி.யும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

பணத்தை திருட வடிவேலு போடும் கெட்டப்புகள் கை கொடுக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சி மங்காத்தா படத்தை ஞாபகப்படுத்துகிறது
இருந்தாலும் வெல்டன் சூப்பர்

: இயக்குனர்

சுந்தர். சி வெர்ஷன் தான் இந்த கேங்கர்ஸ். முதல் பாதி சிறப்பு இரண்டாம் பாதி நிறைய காமெடி காட்சிகளுடன் அருமையாக இயக்கி உள்ளார் கிளைமேக்ஸ் காட்சி முரட்டு காமெடியாக உள்ளது. சுந்தர் சி – வடிவேலு காம்போ வேறலெவல். சில எதிர்பாராத ட்விஸ்டுகளும், கேமியோக்களும் அருமையாக உள்ளது. பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு பலம் மொத்தத்தில் ஒரு டீசண்ட் ஆன காமெடி யை தரமான படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் அவருக்கு ஒரு பூங்கொத்து💐

தொழில்நுட்ப கலைஞர்கள்-

தயாரிப்பு – குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd),
ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)

இசை அமைப்பாளர்
C . சத்யா வின் இசையும் பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது சாமக்கோழி பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும்

வேங்கட்ராகவன்
எழுதியுள்ள திரைக்கதை ,வசனம் ரசிக்க வைக்கிறது வடிவேலு பேசும் காமெடியும் சுந்தர் சி பேசும் வசனமான முடியாது என்று நீ சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொருவர் அதை செய்து முடித்து இருப்பார் என்ற முத்தாய்ப்பான வசனங்கள் படத்திற்கு பலமாக சேர்ந்திருக்கிறது

– ஈ.கிருஷ்ணமூர்த்திஅவர்களின்
– ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது
– சுந்தர் சி போடும் சண்டைக் காட்சி அந்த பார், அங்கு படமாக்கப்பட்ட விதமும்
– செங்கல் சூலையில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது தியேட்டரில் கடைசியில் படமாக்கப்பட்டது எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவு அருமை அருமை

– பிரவீன் ஆன்டனி
அவரின் படத்தொகுப்பு
செம கச்சிதமாக இருக்கிறது ஒரு பத்து நிமிடம் குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது
இருந்தாலும் ஒரு வெற்றி படத்துக்காக படத்தொகுப்பாளர் உழைத்திருக்கிறார் படத்தின் வெற்றி அவரது எடிட்டர் டேபிளில் உருவாகி இருக்கிறது

குருராஜ் :அரங்க அமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார்
மைம் கோபி நடத்தும் பார், மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் இருக்கும் அரங்க அமைப்புகள்,
கேத்தரின் தெரசா போடும் குத்தாட்டம் அதற்கு போட்ட செட், எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது

ராஜசேகர்;சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறார்
அனல் பறக்கிறது சண்டை காட்சிகள் செங்கல் சூளை சண்டை செம, செங்கல்லால் தாக்கும் பொழுது எங்கே நம்ம மண்டையில் வந்து விழுமோஎன்று
பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வெற்றிக்கு உதவி இருக்கிறது

நடனம் – பிருந்தா , தீனா இவர்கள் இருவரும் அருமையான நடனம் அமைத்திருக்கிறார்கள் நடன காட்சி ரசிக்க வைக்கிறது

பாடல்கள் – பா.விஜய், அருண்பாரதி , லாவரதன்,சூப்பர் சப்பு, மெட்ராஸ் மிரன், வெட்டிப்பய வெங்கட்

ஒரு வெற்றி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் (AIM) &சிவா
டீம்
இவர்களுக்கு வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த கோடை காலத்துக்கு ஏற்ற கலகலப்பான நகைச்சுவையுடன், குழந்தைகளுக்கும்
அனைவருக்கும் ஏற்ற
பொழுது போக்குக்கு திரைப்படமாக அனைவரும் கண்டு களிக்கும் வகையில் நல்ல கதை, களத்துடன் பொழுதுபோக்கு அம்சத்துடன் வந்திருக்கிறது இந்த கேங்கரஸ்”
தமிழ் சினிமாவில் வெற்றிக்கு இன்னொரு பெயர் சுந்தர் சி
வாழ்த்துக்கள் சார்🙏🌷💐