சுமோ திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கதை களம் கடற்கரையில் மயக்கமடைந்த ஒரு வரை சிவா காப்பாற்றுகிறார்,

அவருக்கு கணேஷ் என்ற பெயர் வைத்து தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார்

அவர் மனநிலை சரியில்லாத ஒரு குழந்தை போல இருக்கிறார் தாயன்பு காட்டி சிவா அவரை காப்பாற்றி வருகிறார் அவரை பார்த்துவிட்டு சென்றால் யோகம் என்று எலோரும் பரிசுப் பொருட்களை கொண்டு வந்து தருகிறார்கள் சிவாவும் ,ப்ரியா ஆனந்த் ,இருவரும் காதலித்து திருமணம் செய்கிறார்கள் பிரியா ஆனந்த் வின் அப்பா நிழல் ரவி ,இது உருப்படாத கேஸ் என்கிறார் ஆனால் சிவா தன் நண்பன் வி டிவி கணேஷ், உடன் கடலில் இருந்து வந்த கணேசனை காப்பாற்றி அவர் யார் ?என்று தெரிந்து கொண்டு அவருடைய இலட்சியத்தை அடைய உதவி செய்கிறார்

​சிவாவின் வாழ்க்கை இவரால் மாறப்போகிறது என்பது அவருக்குத் தெரியாது. கருணைச் செயலாகத் தொடங்கி அவரை ஜப்பானின் சுமோ மல்யுத்த உலகின் பயணத்தில் சிவா அவரை மாற்றம் செய்து சாம்பியன் ஆக்குகுகிறார்

விசுவாசம் மற்றும் உண்மையின் ஆழமான நட்பால் பிணைக்கப்பட்ட சிவா, தனது புதிய நண்பருக்கு இழந்த அடையாளத்தையும் மரியாதையையும் மீட்டெடுக்க உதவுகிறார்.

உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானது அன்பு தான் அன்பு இருந்தால் எங்கும் வெல்லலாம் என்ற வாழ்க்கையின் ஒப்பற்ற தத்துவத்தை சொல்கிறது இந்த கதைக்களம்

வி.டி.வி கணேஷ் கடைசிவரை அந்த பெட்டியின் ரகசியத்தை சொல்லாமல் கடைசி காட்சியில் அந்த பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று காட்டும் பொழுது அதிர்ச்சி! சதீஷ்க்கு மட்டுமல்ல நமக்கும் தான் சுகமான முடிவு சிவ. அகில உலக சூப்பர் ஸ்டார் என்பதை ஜப்பான் வரை சென்று மீண்டும் நிரூபிக்கிறார்

தனது டைமிங் காமெடி மூலம் சிரிக்க வைக்கிறார் ஜப்பான் மல்யுத்த வீரருக்கு மனிதநேயத்தில் உதவும் காட்சியில் மனதை தொடுகிறார் சிவாவுக்கு இது மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது

ப்ரியா ஆனந்த்

படத்தின் நாயகன் சிவாவுக்கு உதவும் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார்
யோகி பாபு தன்னை காதலிக்கிறார் என்று தலையில் அடித்துக் கொள்ளும் இடம் கிளைமாக்ஸ் காட்சியில் கணேஷ் ஜெயிக்கும் போது ஊரை அழைத்து ரசித்து பார்க்கும் காட்சி என சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்

வி .டி. வி கணேஷ்

: படத்தின் ஆரம்ப முதல் கடைசி வரை இவர் தான் மைய பாத்திரமாக ஜாக்கி என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் படத்தின் துணை தயாரிப்பாளரும் இவர் தான் ஜப்பான் சென்று சிவாவுக்கு துணையாக இருந்து கதையை கொண்டு சென்றிருக்கிறார்

யோகிபாபு

படத்தின் காமெடிக்கு இவர் பங்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது
பிரியா ஆனந்துக்காக ரீல்ஸ்
அரசியல் வாதியிடம் மாட்டிக் கொள்வது
கலகலப்பு

சதீஷ் இன்ஸ்பெக்டராக வந்து கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் சுரேஷ் போலீசாக வருகிறார்
நிழல்கள் ரவி என
எல்லோர் நடிப்பு நன்றாக இருக்கிறது

தொழில்நுட்ப கலைஞர்கள்
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன இசையமைத்துள்ளார்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது

ஜப்பான் நாட்டில் உள்ள சுமோ வீரர் யோஷிநோரி தாஷிரோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
படம் முழுக்க கனேஷ் என்ற கதாபாத்திரத்தில் குழந்தையை போல ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார் இடைவேளைக்கு பிறகு தான் யார் என்று நிரூபிக்கிறார்

. இத்திரைப்படத்தின் துணை தயாரிப்பாளராக வி டி வி கணேஷ் தயாரித்து இருக்கிறார்

இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு பணி செய்துள்ளார்.
இந்தியா ,மற்றும் ஜப்பான் நாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது ஜப்பானுக்கு சென்ற பிறகு இந்த படத்தின் கலர் ஃபுல் காட்சிகள் கண்களுக்கு இதமாக இருக்கிறது

இப்படத்தின் இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
இவரது இயக்கம் பாராட்டும்படி உள்ளது மனித நேயம் தான் உலகம் எங்கும் வெல்லும் என்பதை காமெடியாக கலகலப்பாக சொல்லி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார் வீ டி வி கணேஷ் பெட்டியில் என்ன இருக்கிறது என்ற சஸ்பென்ஸ்
கடைசி வரை கொண்டு போனது,
கணேஷ் யார் என்பதை இடைவெளி வரை கொண்டு போனது

சிவா எப்படி கணேசை ஜப்பான் வரை கூட்டிப் போவார் என்பதை அருமையாக சொல்லி இருப்பது என இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்

படத்தொகுப்பாளராக பிரவின் கே .எல்
பணி புரிந்திருக்கிறார் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

: மற்றும் இப்படத்தில் பணிபுரிந்த ஆர்ட் டைரக்டர், ஒப்பனையாளர், காஸ்டியூம் டிசைனர் ,
என அனைவரும் ஒரு வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் திரு. ரியாஸ் அகமது அவர்கள் ,பாராஸ் அஹமது அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த சுமோ அனைவரும் காண வேண்டிய படம் மனித குலத்துக்கு அன்பு ஒன்றுதான் அவசியம் என்பதை வலியுறுத்தும் படம் துன்பப்படுபவர்களுக்கு இறைவன் ஏதாவது ஒரு வகையில் நன்மைகள் தருவான் என்பதை உணர்த்தும் படம் இந்த கோடை காலத்துக்கு குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம் அனைவரும் காணலாம் வெற்றி பட்டியலில் “சுமோ”