ரெட்ரோ திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

கதை களம்

சென்னையில் ஒரு வளர்ப்பு தந்தையின் அரவணைப்பில் அம்மாவின், பாசத்தால் வளர்ந்த பாரி, அப்பாவின் தொழிலில் இணைகிறார்
தங்க மீன் என்ற விஷயத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்சனை ஏற்பட அப்பா எதிரியாகிறார்.

அதன் பிறகு எப்படி அந்தமான் தீவில் தன்னுடைய உண்மையான தாயையும் தந்தையையும் கண்டு பிடித்து. ஒன்று சேர்ந்தார் தன் காதலியை எப்படி கரம் பிடித்தார் என்பதை மிக நேர்த்தியாக தெளிவாக சொல்லி இருக்கிறது படம் ரெட்ரோ “

படத்தில் பாராட்டத்தக்க முதல் விஷயம், தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்‌ஷனுக்கான களம் என்றாலும் கூட, கதையை காதல் கோணத்தில் எழுதியிருந்த விதம். அதற்கேற்ப அமைக்கப்பட்ட காதல் காட்சிகளும் ஈர்க்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஆக்‌ஷன் காட்சிகளை விட எந்தவித செயற்கைத்
தனம் இல்லை என்பது உண்மை

படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் பண்புகளை பார்வையாளர்களுக்கு கடத்த எடுத்துக் கொள்ளும் ஆரம்ப காட்சிகள் சிறப்பு. குறிப்பாக ‘கனிமா’ பாடலுடன் சேர்த்து வரும் ஒரு 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் ஒட்டுமொத்த படக்குழுவும் உழைப்பை கொட்டியிருக்கிறது.
சிரிப்பையே மறந்த அந்தமான் தீவில் வாழும் அந்த மக்கள் கிளைமாக்ஸ் காட்சியில் சிரித்து வில்லன்களை பணிய வைக்கும் அந்த காட்சி இதுவரை தமிழ் சினிமா கண்டிராத காட்சி
ஜடாமுனி காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் வாழும் அந்த மக்களை தெய்வமாக வந்து காப்பாற்றும் இரட்சகனாக சூர்யா அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்

சூர்யா

படம் முழுக்க சூர்யாவின் ராஜ்ஜியம்தான். காதல் காட்சிகளில் தன்னை நிரூபிக்க பூஜாவிடம் உருகுவது, ஆக்‌ஷன் காட்சிகளில் வில்லன்களிடம் ஆக்ரோஷம் காட்டுவது என வெரைட்டி காட்டி ஈர்க்கிறார். கடந்த சில படங்களில் இருந்த மேனரிசங்களை எல்லாம் ஒதுக்கி மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.
அப்பாவை கொல்ல வரும் எதிரிகளை காப்பாற்றுவது காதலியை கையை பிடித்த மைக்கேல்
துவம்சம் செய்வது சிறையில் இருந்து தப்பிப்பது அந்தமான் தீவில் பைக் ரேடிங் போவது என சூர்யா பாரியாக ரெட்ரோவாக வாழ்ந்திருக்கிறார்

பூஜா ஹெக்டே

எல்லா படங்களிலும் கிளாமர் குயினாக வந்திருக்கும் இந்த ருக்குமணி இந்த படத்தில் சாந்தமாக வெட்னரி டாக்டராக மனிதமுள்ள ஒரு காதலியாக தன் காதலன் கோபப்படுவதை சகித்துக் கொள்ள முடியாத ஒரு கேரக்டராக
நடித்திருக்கிறார்
பூஜா ஹெக்டேவுக்கு முக்கியமான கதாபாத்திரம். ‘டஸ்கி’ மேக்கப்பில் பக்குவமான நடிப்பை தந்து அப்ளாஸ் பெறுகிறார்.

ஜோஜு ஜார்ஜ்

மிரட்டல் வில்லன் (திலகம் )என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பெரிய வேலை இல்லை என்றாலும் வில்லன் கேரக்டரில் நிறைவை தந்திருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், கருணாகரன், கஜராஜ், ஜெயராம், நாசர் எல்ோரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

சந்தோஷ் நாராயணன்

படத்தின் மற்றொரு ஹீரோ சந்தேகமே இல்லாமல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். படம் முழுக்க பின்னணி இசையில் அதகளப்படுத்தி இருக்கிறார். கனிமா பாடல் வரும் இடத்தில் சீட்டில் யாரும் அமரவில்லை. அது தவிர மற்ற பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன

ஒளிப்பதிவாளர்

. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
இரண்டாம் பாதியில் அந்தமானில் இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு ஹீரோ செல்லும்போது கதை யோடு கேமரா புதிய பரிமாணத்துக்கு செல்கிறது. ஆனால் அதுவே படத்தின் பெரிய பலம். பிரிட்டிஷ் காலத்து அடிமை முறை, மிராசுதாரர் குடும்பம், ரப்பர் தொழிலாளர்கள், கல்ட், என கேமரா புகுந்து விளையாடுகிறது

.ஸ்டண்ட் மாஸ்டர்

கிளாடியேட்டர் பாணியில் அமைக்கப்பட்ட சண்டை காட்சிகள் ஓகே ரகம் . ஒட்டுமொத்தமாகவே ஆக்‌ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதை உணரமுடிகிறது. ஹீரோ எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் அசாகய சூரர் என்பதை நியாயப்படுத்தும்படி சண்டைக் காட்சிகளி்ல்
அனல் பறக்கிறது.

அதிலும் கடைசி 20 நிமிடங்கள் திரையில் வரும் திடீர் திருப்பங்களில் எல்லாம் ஃபயர்

முதல் பாதி காதல் காட்சிகளில் இருந்த எமோஷனல் அம்சங்களில் இரண்டாம் பாதியில் செம ஆக்சன்

இயக்குனர்

கார்த்திக் சுப்புராஜ் சென்னையில் ஆரம்பித்து சிறைக்குள் கதையை கொண்டு சென்று
நடக்க விருந்த திருமணத்தை நிறுத்தி, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தில்
கருந்தீவுக்குள் சென்ற பிறகு கலர் ஃபுல் வண்ணங்களைப் பறக்க விட்டிருப்பது மேஜிக். இந்த காட்சிகளைக் கோத்த விதத்தில்
இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார் அடிமை முறையை ஒழிப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல ஆயிரத்தில் ஒருவனாக சூர்யா களம் இறங்கி மீட்டு வெற்றி அடைவது திரைக்கதையில் கிடைத்த வெற்றி

படத்தொகுப்பாளர்* ஷஃபிக் முக்மது

கச்சிதமாக படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் படத்தின் வெற்றிக்கு அவரும் ஒரு காரணம்

கலை இயக்குநர்கள் ஜாக்கி, மாயபாண்டி ஆகியோர் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
அந்தமான் பகுதியில் நடக்கும் அந்த காட்சிகளில் ஆர்ட் டைரக்டர்களின் பணி அற்புதமாக இருக்கிறது

: பாடல்களை விவேக் எழுதி இருக்கிறார் பாடல்கள் ரசிக்க வைக்கிறது

காஸ்ட்யூம் டிசைனர் ,
ஒப்பனை யாளர்,
மற்றும் தயாரிப்பு நிர்வாகி ,உதவி இயக்குனர்கள், என அனைவரும் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள்

மக்கள் தொடர்பாளர் யுவராஜ் இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த ரெட் ரோ “கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கும் சூர்யா அவர்களுக்கும் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது இது வெற்றி பட்டியலில் இணையும்
படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙏🌷