வால் போஸ்டர் சினிமா & யூனானிமஸ் புரராடக்ஷன்ஸ்
தயாரிப்பில்
சினிமாக்காரன்
கம்பெனி ரிலீஸ் செய்ய
மாபெரும் வெற்றி படமாக வந்திருக்கிறது ஹிட் 3 திரைப்படம்
நானி–
🌷எஸ் .பி. அர்ஜுன் சர்க்கார் ஐ.பி.எஸ் .
வேடத்தில் ஆக்சன்& அதகளம்
செய்து நடித்திருக்கிறார் இதற்கு முன் புன்னகையோடு சாந்தமாக நடித்த நானி இந்த படத்தில் படம் முழுக்கவே ஒரு கோபக்கார அதிகாரியாக எதிரிகளை கொன்று குவிக்கும் தேச அபிமானியாக அற்புதமாக நடித்திருக்கிறார் அவர் நடிப்பு படம் முழுக்க விஸ்வரூபம் எடுத்து நம்மை சிலிர்க்க வைக்கிறது
தவறு செய்பவர்களை ஹேய் என்று மிரட்டும் தொணியாகட்டும்
அப்பா சமுத்திரக்கனி இடம் அசால்ட்டாக பேசும் காட்சிகள் ஆகட்டும்
நாயகி மிருதலாவிடம் மயங்கும் காட்சிகள் ஆகட்டும்
நானி நீ ஒன் மேன் ஷோவாக அசத்தியிருக்கிறார் கிளைமாக்ஸ் கட்சியில் சைக்கோ கில்லர்களிடம் மாட்டிக் கொண்டு எப்படி தப்பிக்க போகிறார் என்பதில் சீட்டின் நுணிக்கு கொண்டு வந்து ரத்தம் தெறிக்க வைத்து படத்தையும்
கடுமையாக உழைத்து
வெற்றி பெறச் செய்திருக்கிறார்
வாழ்த்துக்கள் சார்
ஸ் ரிநிதி ரெட்டி
🌷மிருதுளா என்ற கதாபாத்திரத்தில் நாணிக்கு அம்சமாக பொருந்தி போகிறார் முதல் பாதியில் காதலியாகவும் இரண்டாம் பாதியில் காவல்துறை அதிகாரியாக வந்து மிரட்டி இருக்கிறார் அவர் நடிப்பு அம்சமாக இருக்கிறது
இவர் நடித்தாலே அது வெற்றி படமாகிறது இவரின் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்
சூர்யாஸ்ரீநிவாஸ்– ஏ.எஸ் .பி. ரவி,
ஐபிஎஸ் ஆக வந்து மிரட்டி இருக்கிறார்
அவருக்கு வாழ்த்துக்கள்
மற்றும் நடிகர்கள்
சுபபர்அேமது
ரமேஷ் என்ற கதாபாத்திரத்தில்,
ராவ் ரமேஷ்
டிஜிபி ஆகவும்,
சமுத்திரகனி – அர்ஜுன் சர்க்கார் அப்பாவாக ,
கோமளி பிரசாத்– ஏ.எஸ் .பி. வர்ஷா, வாகவும்,
மகந்திஸ்ரீநாத்– எஸ் .பி. அபிலாஷ் , ஐ.பி.எஸ் .ஆக, கௌரவ வேடத்திலும்,
ரவீந்திர விஜய் –
சாமுவேல் ஜோசப்
என்ற கதாபாத்திரத்திலும்,
பிரதீக் பாபார்,
மற்றும்
அமித்சர்மா – ஆல்பாவின் சதோதரர் ஆகவும்,
சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
எல்லோரும் தங்கள் பங்குக்கு கடினமான உழைப்பை கொடுத்து கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷
கதை களம்
எஸ்.பி போலீஸ் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் முதலில் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிகிறார் அங்கு சில தீவிரவாதிகளை கண்டுபிடிக்கிறார் அவர்களின் முத்திரை சி .டி. கே என்று வருகிறது சி. டி. கே என்றால் என்ன என்று துப்புத் துலக்க அவருக்கு அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது. அதன் பிறகு காட்சிகள் விரிகிறது விசாகப்பட்டினத்தில் காட்சி நடக்கிறது அங்கு
விசாகப்பட்டினத்தில் ஒரு கொலை நடக்கிறது.
, அந்த கொலையை அவரேதான் செய்திருக்கிறார்.
அது ஏன்?
அதேபோல் இன்னொரு கொலையை அவர் செய்யும்போது சக பெண் போலீஸ் அவரை தடுக்க முயற்சிக்கிறார்.
அவருடன் சண்டையிட்டு கட்டிப்போடும் அர்ஜுன், கொலையை செய்துவிட்டு ஏன் கொலைகளை செய்தேன் என்று விளக்கம் தரும் காட்சிகள் செம விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.
அந்த பிளேஷ்பேக்கில், அர்ஜுன் சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் வேலை பார்த்தபோது அங்கே ஒரு சீரியல் கில்லரை கைது செய்கிறார்.
அவரிடம் விசாரணை நடத்தும்போதே பீகாரில் அதே பாணியில் கொலை நடக்க, அந்த கொலைகாரனையும் கண்டுபிடித்து ஒன்றாக விசாரிக்கிறார் அர்ஜுன்.
அப்போதுதான் ஒரு அதிர்ச்சிகர பின்னணி தெரிய வருகிறது. அதன் பின்னர் சீரியல் கொலைகளுக்கு யார் காரணம்? எதற்காக இதெல்லாம் பல மாநிலங்களில் நடக்கிறது? என்பதை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.
இதனிடையே மிருதுளா அவரை காதலித்ததுஎப்படி? சமுத்திரக்கனி யார்! போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த ஹிட் 3
அதே சமயம் : கார்த்தி கிளைமாக்ஸ் காட்சியில் ஏ.சி.பி. வீரப்பனாக வந்து படத்தின் அடுத்த பாகத்துக்கு லீடு கொடுக்கிறார்
Director – Sailesh Kolanu
ஒரு வெற்றி படத்துக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக கலந்து கொடுத்து படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார் காதல் காட்சிக்கு முக்கியத்துவம் இல்லாமல், நகைச்சுவையை சொல்லாமல், படம் விறுவிறுப்பாக செல்வதற்கு இவரின் கதை, திரைக்கதை, இயக்கம் ,முக்கிய பங்கு வகிக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🌷
Music Director – Mickey J. Meyer
படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கு வைக்கிறது படத்தின் பின்னணி இசை, அவ்வளவு துள்ளலாக, அவ்வளவு உயிரோட்டமாக, இருக்கிறது
ஆக்சன் காட்சிகளில் இசையில் மிரட்டி இருக்கிறார்.🌷
Editor – Karthika Srinivas
படத்தொகுப்பாளர் படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதியாக உறுதுணையாக இருந்திருக்கிறார். விறுவிறுப்பாக படத்தை கொண்டு சென்றிருக்கிறார் படம் இரண்டே முக்கால் மணி நேரம் போனதே தெரியாமல் கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார்
வாழ்த்துக்கள் சார் 🌷
Director of Photography (DOP) – Sanu John Varghese
படத்தின் பலம் ஒளிப்பதிவு காஷ்மீரில் நடக்கும் அந்த இன்வெஸ்டிகேஷன் காட்சிகளும், ஜெய்ப்பூரில் நடக்கும் காட்சிகளும், விசாகப்பட்டினத்தில் நடக்கும் காட்சிகளும்,
அருணாச்சலப் பிரதேசத்தில் நடக்கும்
கிளைமாக்ஸ் காட்சிகளும், படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்🌷
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள்
படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்🌷
மொத்தத்தில் இந்த ஹிட் 3 “திரைப்படம் நானி யின் கடின உழைப்பாலும், அவரது தயாரிப்பிலும், கதை திரைக்கதை ,வசனம் எல்லாம் சிறப்பாக அமைந்த ஒரு படமாக வந்திருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, ஒப்பனையாளர், ஆர்ட் டைரக்டர், தயாரிப்பு நிர்வாகி, காஸ்ட்யூம் டிசைனர், என அனைவரும் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்
கள் இப்படி ஒரு புதுமையான, வித்தியாசமான, கதையை தேர்வு செய்த நடித்த நாயகன் நானி அவர்களுக்கும் இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளரும் கும் இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள்
வெற்றி பட்டியலில் ஹிட் 3
🙏🌷
