கஜானா திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள
திரைப்படம் தான் கஜானா.

இந்த படத்தை அவர் தயாரித்துள்ளதோடு, கதையையும் அவரே எழுதியுள்ளார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் பிரபாகரன் நடித்துள்ளனர், அவருடன் வேதிகா, ஜோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளார்கள்.

கதை களம்

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நந்தி வர்மன் டீம் களம் இறங்கி புதையல் வேட்டை ஆட வரும் போது அங்கு நடக்கும் விபரீதம் நடக்கிறது

புலிகள் துரத்துகிறது, யானைகள் துரத்துகிறது, பாம்புகள் கொத்த வருகிறது, ஆற்றின் ஓரம் இருக்கும் அந்த ஒற்றை மரம் அதன் அருகில் இருக்கும் புதையல் இதை ஆரம்பக் காட்சியிலேயே இந்த புதையிலை எடுக்க சென்றாயன் முயற்சி செய்ய இறந்து போகிறார் .

அதன் பிறகு இனிக்கோ சார்பில் நான்கு பேர் வருகிறார்கள் அவர்களும் மூன்று பேர் இறந்து போக வேதிகா, இதில் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் இறுதியில் கிடைத்ததா? இல்லையா? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன் என்று இயக்குனர் கதையை முடித்திருக்கிறார் படம் முழுக்க பிரமாண்டம்

வி. எஃப் .எக்ஸ் காட்சிகள் என மிரட்டலாக வந்திருக்கிறது காட்டில் களம் இறங்கும் இளைஞர்களின் சாகச பயணத்தையும், அந்த கஜானாவை காப்பாற்றும் பயணத்தில் பேய், பாம்பு, புலிகள் என அங்கு நடக்கும் அட்டகாசங்களையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திகில் நிறைந்த மற்றும் காமெடி காட்சிகளுடன் சொல்லியுள்ளது கஜானா திரைப்படம்.

நடிகர் & நடிகைகள்

வேதிகா ,இந்த புதையலை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆராய்ச்சி செய்கிறார்

சாந்தினி தமிழரசன் நாகர் வம்சத்துக்காக பல சாப விமோசனம் பெற்று மீண்டும் பூமியில் உயிர்ப்பிக்கிறார்

யோகி பாபு ,மொட்டை ராஜேந்திரன், காமெடிக்காக பயன்படுத்தப்பட்டு கலகலப்பு ஊட்டுகிறார்கள்.

இனிகோ நாயகன் நந்திவர்மனாக வந்து அந்த புதையலை எடுப்பதற்காக முயற்சி செய்கிறார் அவரும் நாகர் வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் உயிர் பிழைத்துக் கொள்ளுகிறார்

வேலு பிரபாகரன் காட்டிலேயே குடியிருந்து மெய்காப்பாளன் வீரபத்திரன் வம்சத்தை சேர்ந்தவராக வந்து இனிகோவிடம் கதையை சொல்லிவிட்டு அவர் கையாலே இறந்து போகிறார்.

பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

: தொழில்நுட்ப கலைஞர்கள்

அச்சு ராஜாமணி இசையில் போல போல ரைட் ,பாடல் ரசிக்க வைக்கிறது
பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.

இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக வந்திருக்கிறது காடும் காடு சார்ந்த மலைகளும் காண்பதற்கு குளிர்ச்சியாக இருக்கிறது பேண்டஸி காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள்

கே.எம்.ரியாஷ் படத்தொகுப்பு

பணியை சிறப்பாக செய்து இருக்கிறார் படம் விறுவிறுப்பாக செல்வதற்கு இவரின் படத்தொகுப்பு பலமாக இருக்கிறது

,சீனிவாசன் சங்கர், கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
படத்தில் முக்கிய பங்கு இவர்தான் ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கட்டு அரங்கங்கள் அமைத்திருக்கிறார் அசத்தியிருக்கிறார் வாழ்த்துக்கள்.

நைஃப் நரேன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் அனல் தெரிக்கிறது.

கபிலன் அம்ற்றும் கானா சல்லு பாடல்கள் எழுத, நிசார் கான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

வி எஃப் எக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக வந்திருக்கிறது ஜெயப்பிரகாஷ் இந்த பணியை செய்து இருக்கிறார் இரண்டு வருட உழைப்பு சிங்கம் ,புலி ,யானை, பாம்புகள் ,நாகர்கள், கருடர்கள், என பேண்டஸி கலந்து அற்புதமான வி.எப்.எஸ் காட்சிகளை கொடுத்து இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்.

மற்றும் படத்திற்காக பணிபுரிந்த ஒப்பனையாளர், காஸ்ட்யூமர், தயாரிப்பு நிர்வாகி
என அனைவரின் பங்கு சிறப்பாக இருக்கிறது

இயக்குனர் இப்படத்திற்காக நான்கு வருடம் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சியும் செதுக்கி இருக்கிறார் பிரமாண்டமாக இருக்கிறது தமிழர்கள் கொண்டாட வேண்டிய கலை படைப்பு இது

யாழி, என்கிற மறந்து போன தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமான அந்த மிருகத்தை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லப்படாத ஒரு புதுமையான விஷயத்தை சொல்லி இருக்கிறார் அதற்காகவே அவரை பாராட்டலாம் இதுவே ஹாலிவுட் படம் என்றால் கொண்டாடி இருப்பார்கள் தமிழர் ஒருவர் தமிழ் சார்ந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் அவரை நாம் அனைவரும் பாராட்டுவோம்
இந்த படம் வெற்றி பெற உறுதுணையாக இருப்போம்

மக்கள் தொடர்பாளர்

தர்மா அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த கஜானா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட வேண்டிய படம் தமிழில் பெருமையை சொல்லி இருக்கும் இந்த படம் நிச்சயம் பாராட்ட வேண்டும் வெற்றி பெறும் என்பது உறுதி🌷🙏