தொடரும் திரை விமர்சனம்

ரேட்டிங் - 4-/5

கதை களம் சென்னையில்

சினிமா ஃபைட்டராக இருந்த சண்முகம் (எ) பென்ஸ் (மோகன் லால்), ஒரு விபத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, கேரளத்தில் கேப் டிரைவராக வாழ்கிறார்.
அவரின் மனைவி ஷோபனா ஒரு மகன் ஒரு மகள் குடும்பம் பாசத்தோடு பயணிக்கிறது
சண்முகத்திற்குத் தன்னுடைய அம்பாசிடர் கார் மீது அளவற்ற பிரியம்.

மனைவி லலிதா (ஷோபனா) மற்றும் இரு பிள்ளைகளே அவரது உலகம்.

சென்னையில் அவரது குரு பாரதிராஜா இறந்து போக இங்கு வந்து போகிறார் அப்போது
திடீரென ஒரு நாள், அவரது கார் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்கிறது.
பதறிப் போகிறார் சண்முகம் கார் மீது உயிரே வைத்திருக்கும் அவருக்கு பேர் அதிர்ச்சியாக இருக்கிறது

காவல்துறையினர் காரைத் திருப்பித் தருவதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.
காரணம் மோகன்லால் காரை சரி செய்யும் மெக்கானிக் ஷாப்பில் இருக்கும் மணி கஞ்சா கேசில் சிக்கிக் கொள்ள பென்னி என்ற காவல் துறை அதிகாரி அவனை பிடிக்க அவன் அடித்து விட்டு ஓடுகிறான் இதனால் மோகன்லால் கார் சிறைப்படுகிறது

ஆனால், காவல் அதிகாரி ஜார்ஜ் (ப்ரகாஷ் வர்மா) கருணை காட்டி, சண்முகத்தின் காரை அவரிடமே திருப்பி ஒப்படைக்கிறார்.

அதோடு, ஒரு அன்புக் கட்டளையையும் விதிக்கிறார்.

அந்த கட்டளை என்ன?

இந்த காவல் அதிகாரியால் சண்முகம் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறார்?

இவருக்கும் சண்முகத்தின் மகனுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுதான் ‘துடரும் (Thuduram)’ படத்தின் கதை

மோகன் லால்

ஆரம்பத்தில் குடும்பத் தலைவராகச் சிறு சிறு குறும்புகளைச் செய்து ரசிக்க வைக்கிறார். மனைவியுடன் காதல், மகன் மீது கோபம் , மகளுடன் பாசம், நண்பர்கள் உடன்
சேட்டைகள் புரியும் காட்சிகளிலும் மோகன் லால் பார்த்து ரசிக்க முடிந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மோகன் லால் இத்தகைய க்யூட் தருணங்களால் ரசிக்க வைத்தது ரசிகர்களுக்கு விருந்து.

அதேபோல், பின் பாதியில் மகனுக்காகப் பழிவாங்கத் ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் ‘Complete Actor’- ஆக இறங்கி அசத்தியிருக்கிறார்.

வெல்டன் லால் ஷோபனா

ஷோபனா, கணவருடன் செல்லமாகக் கோபம் கொள்ளும் இடத்திலும், இன்னல்களை எதிர்கொள்ளும் தருணங்களிலும் தன் அனுபவ நடிப்பால் கவனம்
பெறுகிறார்

இதில் மோகன்லால் மற்றும் ஷோபனா , உடன் பிரகாஷ் வர்மா , ஃபர்ஹான் பாசில் , மணியன்பிள்ளை ராஜு , பினு பப்பு , இர்ஷாத் அலி , ஆர்ஷா சாந்தினி பைஜு , தாமஸ் மேத்யூ, கிருஷ்ண பிரபா ஆகியோர் துணை வேடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

திரில்லர் திரைப்படமான இந்த படத்திற்காக கே.ஆர்.சுனிலுடன் திரைக்கதையை எழுதிய தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை ரெஜபுத்ரா விஷுவல் மீடியா மூலம் எம்.ரஞ்சித் தயாரித்துள்ளார்

ஊகிக்க முடியாத திரில்லர் படமாக படத்தொகுப்பாளர் கொடுத்து இருக்கிறார்

வசனமும், ஷாட்டும் படத்தில் பிரமாதமாக இருக்கிறது

ஷாஷி குமாரின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் இணைந்து திரையில் ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதைபோல் வந்துள்ளது

மோகன் லால் 360 வது படமாக வந்திருக்கிறது நிச்சயம் வெற்றி பட்டியலில் தமிழிலும் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷🙏