மனிதர்கள் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ராம் இந்திரா இயக்கியுள்ள ‘மனிதர்கள்’ திரைப்படம், ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ஒரு திரில்லர் மூவி

படத்தின் கதை

‘மனிதர்கள்’ திரைப்படம், ஒரு இரவில் 5 நண்பர்கள் சந்திக்கும் பயம், பதட்டம் மற்றும் அவர்களது மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், இதில் பெண் கதாபாத்திரங்கள் இல்லை.

இந்த படம் யதார்த்த பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

மனித மனநிலைகள்:

படம் மனிதர்களின் மனநிலைகள் மற்றும் குணங்களின் விசித்திரங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

‘கார்லி, தீபன், மனோ, சந்திரன் சதீஷ், என்ற ஐந்து நண்பர்கள் ஆரம்பக் காட்சிகளில் பிரேம், என்ற தன்னுடன் வந்த நண்பன் பாட்டில் குத்தி இறந்து விட்டான் அவன் மனைவி மலருக்கு என்ன பதில் சொல்வது ,
என்று பதட்டப்படுகிறார்கள் அழுகிறார்கள் சந்திரன் என்னும் கதாபாத்திரம் ஓயாமல் அழுது கொண்டே வருகிறது கார் ஓட்டி வரும் மனோ : அழுது கொண்டே வருகிறார்

ஆனால் கார்லி, மட்டும் தைரியமாக வருகிறார் இதனால் தீபன் கார்லி,
மீது குற்றம் சாட்டுகிறார்

அதன் பின்னர் காரில் பெட்ரோல் இல்லாமல் போகிறது. கார் பஞ்சர் ஆகிறது போலீசை கண்டு பயப்படுகிறார்கள்.ஊர் திருவிழா நடக்கிறது அதில் வரும் மக்களை பார்த்து பயப்படுகிறார்கள்

அடுத்து வழிப்பறி கொள்ளையர்களிடம் கையில் இருக்கும் பணத்தை இழக்கிறார்கள்

டிக் கியில் இருக்கும் பிணத்தை தனக்கு தெரிந்த இடத்தில் புதைத்து விடலாம் என்று சந்திரன் சொல்ல ஐவரையும் சுமந்து கொண்டு கார் அங்கு பயணிக்கிறது

இவர்கள் பிரேமை அங்கு கொண்டு போய் புதைத்தார்களா?

அல்லது போலீஸிடம் மாட்டிக் கொண்டார்களா?

என்பதை ஒரு இரவில் நடக்கும் கதையாக சொல்லி இருக்கிறது
இந்த “மனிதர்கள்” திரைப்படம்

” இது நண்பர்களின் உதவியால், கிரவுட் பண்டிங் முயற்சியில் உருவான திரைப்படமாக உருவாக்க பட்டுள்ளது.

மனிதனின் மனம் வித்தியாசமானது. நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவாக்க பட்டுள்ளது.
.ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்குள் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக உருவாக்கியுள்ளனர் இது முழுக்க இரவில் நடக்கும் கதை, இதுவரை திரையில் பார்த்த இரவாக இது இருக்காது. நேரில் அனுபவிக்கும் இரவின் நிறத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளனர்

நடிகர்கள்

கார்லி ,என்ற வேடத்தில் கபில்தேவ் சிறப்பாக நடித்திருக்கிறார் நண்பர்கள் அனைவரும் பயப்படும்போது உறுதியோடு துணை நிற்கிறார்.

அடுத்து சதாசிவம் சந்திரன், என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
தன் நண்பன் பிரேம் இறந்து விட்டார் என்று வழிமுழுக அழுது கொண்டு வந்து பிறகு ஒரு கதையை சொல்கிறார் நண்பர்கள் திகைத்துப் போகிறார்கள்
சந்திரன், பூபதி, பாண்டியன், என்று அந்த கதை இந்த ஓட்டத்துக்கு மிக அவசியமாக இருக்கிறது .

தீபனும், மலரும், விரும்பினார்கள் என்று இடையில் ஒரு கதை வருகிறது.

குணவந்தன் மனோ, என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
அவர் படம் முழுக்க பயந்த சுபாவமாக பதட்டப்பட்டு ,அழும் காட்சிகள் தான் அவருக்கு அதிகம்.

மற்றும் சதீஷ் கதா பக்கத்தில் நடித்தவரும் நன்றாக நடித்திருக்கிறார்

அர்ஜின் தேவ் i: தீபன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரேம் யார் ?
என்று கடைசி வரை காட்டப்படவில்லை அதுதான் படத்தின் சஸ்பென்ஸ்!

தொழில் நுட்ப குழூ

மனிதர்கள்’ படத்தை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்

இயக்குனர்

ராம் இந்திரா திண்டுக்கல்லை சேர்ந்தவர் உதவி இயக்குனராக இல்லாமல் குறும்படம் எடுத்து அதன் அனுபவத்தில் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
10 மாதங்கள் பயிற்சி எடுத்து ஒரு இரவில் நடக்கும் கதையை தைரியமாக துணிந்து எடுத்திருக்கிறார் புதிய முயற்சி இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவாளர்

அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் இவர்,
ஸ்ரீராம் அசிஸ்டன்ட் படம் முழுக்க நைட்டில் கார் பயணம் செய்கிறது அதை அருமையாக படம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்

இசை

அனீலீஸ். எல் மாத்தேவ்,
இசையமைத்து இருக்கிறார் தேவைப்பட்ட இடத்தில் இசை பேசுகிறது
பின்னனி இசை சூப்பர்

படத்தொகுப்பு தின்ஷா

படத்தொகுப்பாளர்
பங்கு மிகச் சிறப்பாக பணியாற்றப்பட்டிருக்கிறது

ஆர்ட் டைரக்டர் மகேந்திரன் பாண்டியன்
பாடல்கள் கார்த்திக் நேதா
பாடியவர் கபில் கபிலன்

மற்றும் ஒப்பனையாளர், கலர் கரெக்ஷன், செய்தவர் இரவு நேரத்துக்கு ஏற்ற லைட்டிங் பணியை செய்தவர், என அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் சதீஷ் &சிவா

மொத்தத்தில் இந்த மனிதர்கள் திரைப்படம் வித்தியாசமான முயற்சி பாராட்டப்பட வேண்டிய முயற்சி தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளது இந்த பட குழு படத்தில் பங்கு பெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙏