ராஜ புத்திரன் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு உத்தமபுத்திரன்”

இளைய திலகம் பிரபு அவர்களுக்கு ராஜபுத்திரன்”

கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும், வெற்றியும் ,தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்கும் படம் ராஜபுத்திரன் .

இப்படத்தில்
கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

கதை களம்

கிராமத்துக் கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் மகன் மீது உயிரை வைத்திருக்கும் செல்லையா, என்ற கதாபாத்திரத்தில் பிரபு.

அப்பா மீது உயிரை வைத்திருக்கும்
பட்டா என்ற கதாபாத்திரத்தில் நாயகன் வெற்றி”

பள்ளியில் வாத்தியார் அடித்துவிட்டார் என்பதற்காக பள்ளிக்கூடம் அனுப்பாத தந்தை
தன் அப்பா பெயரை சொல்லி யாராவது திட்டி விட்டால் அவரை உண்டு இல்லை என்று செய்யும் மகன்
இந்த பாசப்பிணைப்பு
பல படங்களில் பார்த்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் புதுசாக இருக்கிறது ரசிக்க வைக்கிறது.

வெளிநாட்டில் வாழும் கூலி வேலை செய்யும் ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் அனுப்பும் பணம் உண்டி” என்ற பெயரில் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்வதை இந்த படத்தில் புதிதாக சொல்லி இருக்கிறார்கள்
அது எப்படி வருகிறது எப்படி அவர்கள் வீட்டுக்கு போகிறது என்பதை, கதை

அந்த தொழில் செய்யும் வில்லன் லிங்கா, அவருக்கு உதவியாளராக இருக்கும் தேவராஜ் என்னும் மீசை,
இவர்கள் இருவரையும் தீர்த்து கட்ட நினைக்கும் இயக்குனர் ஆர் வி உதயகுமார்,

பட்டாவை காதலிக்கும் பூச்செண்டாக நாயகி,
பிரபுவுக்கு தோழனாக வரும் இமான் அண்ணாச்சி,
இப்படி இந்த கதாபாத்திரங்களை கிராமத்து மண்வாசனையோடு பாசத்தை குழைந்து பக்குவமாக கொடுத்திருக்கிறார்கள்
படம் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்யமாக இருக்கிறது.

காதல் .காமெடி .வீரம்நகைச்சுவை, மன்சூர் அலிகான் அடாவடி, வட்டி வசூல் என எல்லாமே ரசிக்க வைத்திருக்கிறார்கள்
படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் ,பலம்

நடிகர் & நடிகைகள்

: இளைய திலகம் பிரபு

நடிகர் திலகத்தின் வாரிசு என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்
இளைய திலகம் பிரபு
அற்புதமான நடிப்பு மகன் மீது உயிரையே வைத்திருக்கும் அவர் மகனுக்காக எதை செய்யும்
கதா பாத்திரம்
மகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி வந்து தீர்க்கும் தந்தையாக கிராமத்து மனிதராக முதல் மரியாதை நடிகர் திலகம் அவர்களை ஞாபகப்படுத்துகிறார் இந்த படத்தில் செல்லையா ,என்ற கதாபாத்திரத்தில் பிரபு அவர்களை தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அருமையான தேர்வு அருமையான நடிப்பு

: வெற்றி

நாயகன் வெற்றி” இந்த படத்தில் பட்டா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இதுவரை இவரை கிரைம், திரில்லர், சஸ்பென்ஸ் படங்களில் பார்த்து பழகி விட்டோம்
முதல் முறையாக கிராமத்து நாயகனாக எதார்த்த நாயகனாக லுங்கியும் சட்டையுடன் அப்பா மீது பாசம் பொழியும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது
நன்றாக
நடித்தி ருக்கிறார். காதலி பூச்செண்டு வை ,
சுற்றி சுற்றி வந்து காதலிப்பதாகட்டும், வில்லன் லிங்காவிடம் மோதும் போது, சண்டைக்காட்சியில் அனல் பறக்கிறது .
படம் முழுக்க ராமநாதபுரத்து மாவட்ட இளைஞனாக அற்புதமாக நடித்தி ருக்கிறார் இனி இது போன்ற கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கலாம் அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பு

பணத்தை தொலைத்து விட்டு தவிப்பதாகட்டும் ,

தன் காதலியை சனியன் என்று சொல்லிவிட்டு உருகுவதாகட்டும்,

பூச்செண்டுவை மன்சூர் அலிகான் கடன் கொடுக்கவில்லை என்று அழைத்துச் செல்லும் போது அங்கு வந்து சீறுவதாகட்டும் ,

இப்படி படம் முழுக்க தன் நடிப்பை வெளிப்படுத்தி மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார் வெற்றி

நாயகி கிருஷ்ண பிரியா

: ஆரம்பக் காட்சியில் கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் வில்லனை ஆக்ரோசமாக கத்தியோடு வந்து முதுகில் குத்தும் காட்சியிலேயே இவர் மீது எதிர்பார்ப்பு ஏற்படுகிறது

அதை அடுத்து ஓட்டு சேகரிக்கும் லிஸ்ட் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் போவதும் பின்னால் வெற்றி வந்து வளைய வருவது அவரை கண்டு பயப்படுவது என மிரட்சியாக நடித்திருக்கிறார்

கிளைமாக்ஸ் காட்சியில் இவர் எடுக்க முடிவு கொஞ்சம் நம்பகத்தன்மையை இழந்தாலும் கதைக்கு வலுவூட்டுகிறது

நல்ல தேர்வு அழகான முகம் நல்ல நடிப்பு

: மற்ற நடிகர்கள்

வில்லன் லிங்காவாக கோமல் குமார்,
ஸ்டைலாக சுருட்டு பிடித்துக் கொண்டு, அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் செய்யும் வில்லத்தனம் கொடூரம் .

வில்லனின் கையாளாக லிவிங்ஸ்டன் தேவராஜ், என்ற கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த துரோகத்தையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இவர் செய்யும் காரியம் கொடூரம் .

மன்சூர் அலிகான் வட்டி என்கிற பெயரில் அப்பாவி மக்களிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது கட்ட முடியாத பெண்களை வீட்டுக்குள் வேலை செய்ய வைப்பது கலகலப்பு .

இமான் அண்ணாச்சி பிரபுவின் நண்பராக உற்று தோழனாக படம் முழுக்க வந்து கலகலப்பை ஏற்படுத்துகிறார்

ஆர்வி உதயகுமார் இரண்டு ஒரு காட்சிகள் வந்தாலும் சூது செய்வதில் சகுனியை மிஞ்சும் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது.

படம் முழுக்க வெற்றியுடன் வரும் அந்த சிறுவன் கதாபாத்திரம் கலகலப்பாகவும் நன்றாக இருக்கிறது.

துபாயில் வேலை செய்யும் பழைய ஜோக் தங்கதுரை இதிலும் காமெடியும் கிளைமாக்ஸில் கண்ணீரையும் தருகிறார்.

மொத்தத்தில் இந்த படத்தில் நடித்த அந்த ஊரைச் சேர்ந்த கிராமத்து பெரியவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள்

தயாரிப்பாளர் ஷபி
ஒரு குத்து பாடலுக்கு ஆடிவிட்டு ஒன்று இரண்டு காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்
இவர் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு அழகான முகம்

தொழில்நுட்ப குழு

இயக்குனர்

இயக்குனர் மகா கந்தன்
ஒரு கிராமத்து கதையை கமர்சியலாக எப்படி சொல்ல வேண்டுமோ பாசம் ,காதல், மோதல் என்று கச்சிதமாக சொல்லி இருக்கிறார்.

Produced by : K.M. Safi

Co producer – K. Kotharsha, T. Farook (Farook pictures )
Banner : Crescent Cine Creation

Music : AIS Nawfal Raja

கிராமத்து பின்னணி இசை அற்புதமாக கொடுத்திருக்கிறார் நிறம் மாறும் உலகில் என்ற பாடலும் போய் வாடி, என்ற பாடலும்
ஒரு உம்மா தந்தா, என்ற பாடலும் ரசிக்க வைக்கிறது பாடல்கள் இனிமை

DOP : Oliver Deny

படத்தின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருக்கிறது லாங் சாட், ஒயிடில் வைத்து ஒவ்வொரு சாட்டுக்கும், அற்புதமான வடிவம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவு இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம்

Publicity Design : Selva
Executive Producer : Vasheer Ahamed
Production controller: Sheik Rasuldeen

PRO : Diamond Babu

மற்றும் இந்த படத்திற்கு ஒப்பனை செய்தவர்,
காஸ்ட்யூம் டிசைனர்,
ஆடை வடிவமைப்பாளர்,

ஆர்ட் டைரக்டர்,
கலர் கரெக்ஷன், மற்றும் டி. ஐ. செய்தவர்

ஸ்டண்ட் மாஸ்டர், நடனபயிற்சி கொடுத்த மாஸ்டர்
என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

: மொத்தத்தில் இந்த ராஜபுத்திரன்”
பாசம் கலந்த கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் அன்பை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராதது உருக வைத்து விடுகிறது .

எத்தனையோ கிராமத்து படங்கள் பார்த்திருந்தாலும் இந்த படம் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்யமாக இருக்கிறது
படத்தில் பணி புரிந்த நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்,
மக்கள் தொடர்பாளர் டைமன்ட் பாபு, அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙏