மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’
இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை
செய்து ள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது
:இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், ராமர், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்
கதை களம்
மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
ஒரு காலகட்டத்திற்கு பிறகு அப்பாவுக்கு மகனுக்கும் இடைவெளி ஏன் விழுகிறது?
அவர்கள் பேசிக் கொள்வதே இல்லை
மகன் என் நேரமும் செல்போனில் மூழ்கிக் கிடக்கிறான்.
மகள் குடும்பத்தை காப்பாற்ற திருமணம் செய்து கொள்ளாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறார்
இதை பார்க்கும் தந்தைக்கு மனதுக்குள் வலி ஏற்படுகிறது
பணத்தேவைக்காக அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கிறார்.
மிடில் கிளாஸ் தாய்மார்களுக்கு எந்நேரமும் ஒரே வேலை தான் காலையில் டிபன், செய்வது வீட்டை சுத்தம் செய்வது, ஐந்து மணிக்கு ஒரு காப்பி,
பின் வாசல் தெளித்து கோலம் போடுவது, இரவில் டிபன் செய்து தருவது, இது இவர்களின் வாடிக்கையான வாழ்க்கை
பெற்ற தந்தை தாய் படும் கஷ்டத்தை அருகில் இருந்து பார்க்க பெண் குழந்தை அது படித்து பணிக்கு செல்லும் பொழுது பொறுப்பாக தன் வீட்டுக்கு சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் திருமணம் தடைபட்டாலும் குடும்பத்தின் சுமையை ஏற்று அந்த மகள் உழைக்கிறார்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று கனவு காணும் மகன் எந்நேரமும் காதலி திவ்யாவுடன் கடலை போட துடிக்கிறான் அவள் கண்டு கொள்ள மறுக்கிறாள்
பிரவினிஎன்னும் செல்ல பிராணி உடன் பொழுது போக்குகிறான்
அது இறந்த போது துடித்து போய்
மின் பொறியாளரிடம், சண்டைக்கு போகிறான்
இப்படி முரன்பட்ட
இந்த நான்கு பிரதான பாத்திரங்களை வைத்து கதைக்களம் அமைத்திருக்கிறார் இயக்குனர்.
நாம் அருகில் இருந்து ஒரு குடும்பத்தை பார்த்தது போல இருக்கிறது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் தான் இந்த நான்கு பேரும்
நடிகர் & நடிகைகள்
ஜோதிராமயா, என்கிற எழுத்தாளர்
சத்யராஜ்
கதாபாத்திரத்தின் மூலம் அருமையாக விளக்கமாக படத்தை
கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்
என்ன ஒரு நக்கல் நையாண்டி,
பாட்டிக்கும் பேத்திக்கும் நடக்கும் அந்த சுவாரசியமான பகுதி ரசிக்க வைக்கிறது
பாட்டி நடிப்பு,
பேத்தி நடிப்பும்,(சின்ன குழந்தை) சூப்பர்
கறுப்பி என்று சொன்னதற்காக அப்பாவிடம் ஆட்டோ விட்டு சரவணன்
என்கிற சிறுவனை
கொல்ல சொல்லும் அந்த பிஞ்சு குழந்தை
ஊறுகாய் விற்கும் சாம்ஸ், கலகலப்பு
கடைசியில் ரோஷினியிடம் மாட்டி கொண்டு விழிக்கும் போது ஒரே ஓட்டம்.
பேங்க் மேனேஜராக வரும் லொள்ளு சபா சாமிநாதன்
மேனேஜருக்கே உரிய தெனாவெட்டு
சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்
பச்சோந்தி
பிரேமாவாக
அரசியல்வாதியாக வரும் கீதா கைலாசம்
செம அலப்பறை
அந்த மின் பொறியாளர் இடம் பஞ்சாயத்து பேசும் காட்சி ஹாஸ்யம்
கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் கமல் டிரைவிங் ஸ்கூல்
வைத்து இருக்கும் ஜார்ஜ் மரியம்
பிண்ணிட்டார்யா!
குடித்துவிட்டு செய்யும் கலாட்டா
ஜோர்,
அரசியல்வாதியின் அல்லக்கையாக வரும் ராமர்
செம
இது போன்ற வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
மின் பொறியாளர்,
சுனில் சுஹதா
குளிக்கும் சீன் ஒன்றேபோதும்
செம கலாட்டா
அவருக்கு பக்கபலகமாக வரும் ஓகே மதுமிதா,
எப்படி தூண்டில் போடுகிறார்.
காளி வெங்கட் மகனாக வினோத்,
தினேஷ் என்ற கதாபாத்திரத்தில் இன்றைய இளைஞர்கள் பிரதிபலிப்பு
வீட்டு வளர்ப்பான பிரவுனி ,
காளி வெங்கட் நண்பன் கெயில்,
இப்படி எல்லா கதா பாத்திரங்களும் நம்மை உற்சாக உலகத்துக்கு கொண்டு செல்கிறது
மற்றும்
ரோஷினியைப் பெண் பார்க்க வரும் மாமியாரும் ,சின்ன மாமியாரும், ரோஷினியை கரம்பிடிக்க நினைக்கும் கிஷோர்
சூப்பர்
பொங்கலுக்கு சட்டை எடுத்துக் தரவில்லை என்று தினேஷ் கோபித்துக் கொண்டு காணாமல் போகும் காட்சிகள் நடுத்தர குடும்பத்தின் சிரமத்தை அப்படியே எடுத்துக் காட்டி இருக்கிறது .
காளி வெங்கட்
கடன் கேட்க சேட்டுவிடம் செல்லும் பொழுது
சேட்டு அப்பாவையும், மனைவி, எல்லாம் எல்லாம் காளி வெங்கட் நலம் விசாரிக்கும் போது சேட்டு நையாண்டி
செய்வது
செம கலகலப்பாக இருக்கிறது.
:ரோஷினியின் மேலாளராக வரும் அர்ச்சனா ஒரே காட்சியில் கண்கலங்க வைத்து விடுகிறார
காளி வெங்கட்
(கண்ணன்)
என்ற கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுனராக, குப்பை அள்ளுபவராக, மனுஷன் வாழ்ந்திருக்கிறார் அருமையான நடிப்பு மகளை நினைத்து உருகும் காட்சிகளும் மகளுக்கு திருமணம் ஆகவில்லையே என்று ஏங்கும் காட்சியிலும்
ஜார்ஜ் மரியத்திடம் கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது நடக்கும் லூட்டிகள்
ரசிக்க வைக்கிறது
ரோஷினி ஹரி பிரியன்
(தீபிகா)
என்ற கதாபாத்திரத்தில்
ஐ .டி.யில் வேலை செய்யும் பெண்ணாக,
அப்பாவை கீழ் ஜாதிக்காரர் என்று சொண்ணதற்காக திருமணத்தையே வெறுத்து நிறுத்தும்
அன்பு மகளாக தம்பியிடம் மனம் விட்டு பேசுடா என்று சொல்லும் கட்டத்திலும் சரி மிடில் கிளாஸ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.
ஷெல்லி
கமலம் என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர குடும்பத்தில் தலைவியாக அற்புதமாக புரிந்து கொண்டிருக்கிறார
* இயக்குனர் கார்த்திகேயன் மணி
இவர் கதை சொல்லி இருக்கும் பாணியிலும் இயக்கத்திலும் ,கதை வசனத்திலும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார அவருக்கு வாழ்த்துக்கள்.
ஆனந்த் ஜி.கே வின் ,
அழகான ஒளிப்பதிவு சென்னையை அழகாக படம் பிடித்திருக்கிறது காளி வெங்கட் வீடு, பெங்களூரில் ஐடி ஆபீஸ் ,என எல்லா இடங்களிலும் கேமரா பளிச் சென்று இருக்கிறது
படத்
தொகுப்பாளராக
சதீஷ் குமார் சமுஸ்கி, பணி
புரிந்திருக்கிறார
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது படத்திற்கு பலமாக இருக்கிறது
இசை கே.சி. பாலசாரங்கன்,
இவரது இசையில் வடிவேலு பாடும் என்னடா பிழைப்பு இது ரசிக்க வைக்கிறது.
பின்னணி இசை சில நேரம் மௌனமாக இருந்தாலும் கதைக்கு தேவையான இடங்களில் அருமையாக பின்னணி இசை கொடுத்திருக்கிறார்
விஜய் யேசுதாஸ் குரலில் அன்பு மகளே பாடல் ரசிக்க வைக்கிறது.
: Producers: Arch Thomason, Robert Martichenko, Corinne Martichenko, Karthikeyan Mani, Dev
Ananth
பாடல்கள் கவிஞர் சினேகன்
பாடல்கள் ரசிக்க வைக்கிறது
ஆர்ட் டைரக்டர் ஜாக்கி
அருமையான கை வண்ணம்
Sound Design: Anthony BJ Ruban
Sound Mix: Pramod Thomas
Associate Director: Viren Viapuri
Assistant Directors: Pavan, Sathish
Assistant Cinematographers: Aswin, Suresh
Costume Designer: Nandini Nedumaran
Make Up: Kaalimuthu
Executive Producer: Harikrishnan GA
Production Controllers: Monica Suyamprakasam, Sheion Zacharias
Production Managers: Veeramani, Maharaja
Creative Producer: Abishek rajaa
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் நல்ல முறையில் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த மெட்ராஸ் மேட்னி
அப்பாவிடம் பிள்ளைகள் வளர்ந்த பிறகு விலகி விடுகிறார்கள் என்ற கருத்தையும்,
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்காக ஒரு தலைவன் எப்படி உழைக்கிறான் அதிலிருந்து மேலே வர முடியாது என்று தெரிந்தும் அடுத்த தலைமுறையாவது முன்னேற மாட்டார்களா ?
என்ற தவிப்பையும்,
ஒரு பெண் குழந்தை பெற்று விட்டால் அவளைப் படிக்க வைத்து திருமணம் செய்யும் வரை பெற்றோர்கள் தங்கள் பிரச்சனைகளை தலையில் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ,
பிள்ளைகள் தன் அப்பாக்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற படிப்பினையும் இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.
பாராட்டப்பட வேண்டிய படம்.
இந்த காலத்துக்கு அவசியமான படம். தரமான படம். குடும்பத்தோடு பார்ப்பதற்கு சிறந்த படம்.
