இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. கிராமத்தில் வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்
இசக்கி கார்வண்ணன் இலட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பேரில் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் எம். எஸ்.பாஸ்கர்
விமல் , சாயாதேவி,
மனோஜ் குமார், ஸ்ரீரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார்,
இசக்கி கார் வண்ணன்
ஷேஸ்விதா,
விமல் ராஜ்
என நடித்துள்ளனர்.
கதை களம்
திண்டுக்கல் சிவன்மலை யின் இருந்து உருவான சுப்பிரமணியபுரம், யோகோப்புரம்,
இந்த இரண்டு ஊரிலும் எப்பொழுதும்
மத சண்டை யோகோபுரம் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதி, சுப்பிரமணியபுரம் இந்து மக்கள் வாழும் பகுதி சுப்பிரமணிய புரம் வந்து
எம்.எஸ் .பாஸ்கர்
பிட் நோட்டீஸ் கொடுத்து மக்களை மதமாற்றம் செய்கிறார் .
என்று விமல் அவரிடம் சண்டைக்கு போகிறார் .
கிறிஸ்தவ பள்ளியில் ஆசிரியராக இருக்கும் விமல் இந்து பாடங்களை நடத்துவது எம் .எஸ். பாஸ்கருக்கு கடுப்பாக இருக்கிறது
இதனால் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது
தமிழ்செல்வியும்
பரமசிவமும் சின்ன வயதிலிருந்து நண்பர்களாக பழகுவார்கள் ஆனால் தமிழ்செல்வியின் அப்பா மனோஜ் குமார் தனக்கு ஆசிரியர் வேலை கிடைப்பதற்காக மகளை பாத்திமா ஆக மதம் மாறச் செய்து ஊரை விட்டு கூட்டிசெல்கிறார்
சாயாதேவி பாத்திமாவாக
மதம் மாற்றப்பட்டு
கிறார்.
சின்ன வயதில் இருந்தே சாயாதேவியுடன் பழகிய விமல் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்யும் பொழுது அவர்கள் இருவரையும் மதவெறி பிடித்த கும்பல் கொலை செய்கிறது
தங்களை கொலை செய்தவர்களை தேடி தேடி கொலை செய்கிறார்கள் விமலும் ,சாயா தேவியும் ,ஜெனி, சலீம் ,என்ற இருவரின் உடலுக்குள் புகுந்து
தொடர்ந்து இரண்டு கொலைகளை சுப்பிரமணிய புரத்திலும் யோகோப் புரத்திலும் விழ
இதை கண்டுபிடிக்க வரும் இசக்கி கார்வண்ணன் இந்த கொலையை செய்தது யார்?
என்று துப்பரிய தொடங்குகிறார்
மனிதனுக்கு மனிதம் தான் தேவையே தவிர ,மதம் தேவையில்லை ,
ஜாதி தேவையில்லை, அன்பு இருந்தால் இந்த உலகத்தையே கட்டி ஆழலாம்
என்ற அற்புதமான தத்துவத்தை படமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்
வாழ்த்துக்கள் சார்🌷🙏
🌷 நடிகர் & நடிகைகள்
விமல்
பரமசிவம் என்ற கதாபாத்திரத்தில் தமிழ்செல்வியை காதலித்து, உயிருக்கு உயிராக நேசித்து, எம் எஸ் பாஸ்கர் உடன்
மோதி தனக்கு தீங்கிழைத்தவர்களை ,
ஆக்ரோசமாக அழிக்கும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அந்தரத்தில் தொங்கி பறந்து பறந்து
ஆவேசமாக நடித்திருக்கிறார்
சாயாதேவி
தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் சின்ன குழந்தையில் இருந்து விமலை காதலித்து
தன் அப்பா மனோஜ் குமார் ,
கிறிஸ்தவ மதம் மாறி ஃபாத்திமா வாக பரிதாப முடிவு ஏற்படுகிறது
தன்னை அடிக்கும் அண்ணனை திருப்பி அடித்து வெளுத்து வாங்குகிறார் புரட்சி பெண்ணாக நன்றாக நடித்து இருக்கிறார்
எம் எஸ் பாஸ்கர்
கிறிஸ்தவ பாதிரியாராக, நடித்திருக்கிறார் அவர் பேச்சு, மொழி அவர் நடிப்பு, எல்லாமே அப்படியே அச்சு அசலாக பொருந்தி இருக்கிறது
திருநெல்வேலி பாஷை பேசி, மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் ஒரு உண்மையான பாதிரியாரை பார்த்தது போலவே இருந்தது
எம் சுகுமார்
பாத்திமாவின் அண்ணன் பிலிப்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்
தன் அப்பாவையும் உடன் பிறந்த தங்கையும் கொல்லும் அந்த கொடூரம் உள்ள மனிதனாக எம். சுகுமார் மிரட்டி இருக்கிறார்
ஸ்ரீ ரஞ்சனி விமலுக்கு அம்மாவாக வந்து தாய்மையின் உருவமாக காட்சி தருகிறார்
பிளாஷ்பேக் காட்சி என்ன நடந்தது என்பதை உருக்கமாக சொல்லி மனதை தொடுகிறார்
மனோஜ் குமார் பாத்திமாவின் அப்பாவாக வந்து மதம் மாறினாலும் மனம் மாறாத இந்துவாக சுடலை சாமியாக வந்து மிரட்டி இருக்கிறார் இந்த காட்சிகள் எல்லாம் எப்படித்தான் மதம் மாறினாலும் மனசு மாறாது என்பதை காட்டுகிறது
மற்றும் துபாய் ராஜா என்ற கதாபாத்திரத்தில்
கூல் சுரேஷ், வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்
காதல் சுகுமார் காமெடி போலீசாக சிரிப்பு மூட்டுகிறார்
மகேந்திரன் விமல் நண்பனாக வந்து துரோகியாக மாறுகிறார்
இசக்கி கார் வண்ணன்
கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக கொலைகளை கண்டுபிடிக்க
வந்து அந்த ஊரை பாதுகாப்பது என்று சிறப்பாக நடித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
துணிச்சல் மிக்க காவல்துறை அதிகாரியாக கொலைகளை செய்தது யார் என்று அவர் அங்குலம் அங்குலமாக அலச உண்மை தெரிய வரும் பொழுது அதிர்ச்சி அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்
ஆதிரா பாத்திமாவின் அம்மாவாக நடித்திருக்கிறார்
அருள்தாஸ் சாமியாராக வந்து கிளைமாக்ஸ் காட்சியில் மிரட்டுகிறார்
ஹீரோயின் தோழி – சேஷ்விதா,
ஜெனி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் முதல் பாடல் காட்சி தூளாக நடனமாடி மனதைக் கவர்கிறார் படம் முழுக்க அற்புதமாக நடித்திருக்கிறார்.
விமல் நண்பராக V.R.விமல்ராஜ்
சலீம் என்ற கதாபாத்திரத்தில் விமலுக்கு ஏற்ற நண்பனாக படம் முழுக்க வந்து போகிறார்
– ஆறு பாலா
கான்ஸ்டபிள் ஆக நடித்திருக்கிறார்
குடிகாரன் –
நண்டு கதாபாத்திரத்தில் வீரசம்மர் படம் முழுக்க தத்துவம் பேசி நடித்திருக்கிறார்
சுகுமார் நண்பராக களவாணி கலை
நன்றாக நடித்திருக்கிறார்
மற்றும் படம் முழுக்க வரும் அந்த ஊர் மக்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
தொழில்நுட்ப கலைஞர்கள்
: கதை ,வசனம், எழுதி தயாரித்து, இயக்கி நடித்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இதற்கு முன்பு சேரன் நடித்த தமிழ் குடிமகன் என்று அற்புதமான படத்தை கொடுத்த இவர் இப்பொழுது
நாட்டில் நடக்கும் ஜாதி சண்டை, மதச் சண்டை, இது போன்ற அவலங்களை தோலுரித்துக் காட்டி
இருக்கிறார்
எந்த மதத்தையும் புண்படுத்தாமல் எல்லோரும் உறவாக இருக்க வேண்டும் என்று இறுதிக்காட்சியில் வலியுறுத்தி இருக்கிறார் இதை அவருக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்
படத்தையும் நன்றாக இயக்கி இருக்கிறார்
நல்ல சிந்தனை, வரவேற்க வேண்டிய கதை,
நிச்சயம் மக்கள் வரவேற்பார்கள்
தீபன் சக்கரவர்த்தியின், பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது படம் ஆரம்பித்தவுடன் வரும் அந்த முதல் பாடல், கூல் சுரேஷ் திருமண விழாவில் நடக்கும் அந்த பாடல் நன்றாக இருக்கிறது அருமையான இசை
படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் .எம். சுகுமார் அவர்கள்தான்
பச்சை பசேல் என்று ஒரு மலை கிராமத்தை தேர்வு செய்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டியிருக்கிறார் இரவு நேர படப்பிடிப்பிலும் திகில் ஊட்டும் வண்ணம் படமாக்கி இருக்கிறார் நடித்தவர்கள் அனைவரையும் அழகாக காட்டியிருக்கிறார் அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
ஆர்ட் டைரக்டர் வீரசமர் கைவண்ணம் நன்றாக இருக்கிறது அந்த சிவன் கோயில், சர்ச் ,மற்றும் விமல், சாயாதேவி, குடியிருக்கும் வீடு மனோஜ் குமார் வீடு என எல்லா இடத்திலும் அவர் கைவண்ணம் நன்றாக தெரிகிறது நண்டு என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.
புவன் படத்தொகுப்பாளராக, பணி புரிந்திருக்கிறார் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக் ஆகவில்லை கச்சிதமான படத்தொகுப்பு.
நடனப் பயிற்சி கொடுத்து இருப்பவர் லீலாவதி,
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வரும் பாடலுக்கு அற்புதமான நாடகம் அமைத்திருக்கிறார் சுரேஷ் கல்யாணத்தில் நடக்கும் போதும் நடன காட்சி ரசிக்க வைக்கிறது
தினேஷ் காசியின் ஆக்சன் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது ஒவ்வொருவரையும் கொலை செய்யும் பொழுதும் பீதி
ஏற்படுத்தி
பயப்பட வைக்கிறார்.
சுரேஷ்குமார் ஒப்பனையாளராக பணிபுரிந்து இருக்கிறார் எல்லோரையும் அழகாக காட்டி இருக்கிறார் பேயாக வரும் காட்சிகளில் பயத்தை காட்டி மேக்கப் போட்டு இருக்கிறார்
ஆடை வடிவமைப்பாளராக ரஞ்சித் பணிபுரிந்து இருக்கிறார் விமலுக்கு, சாயாதேவிக்கு, மற்றும் சலீமாக, வரும் விமல் ராஜ்,
ஷேஸ்விதா,
எல்லோருக்கும் ஆடை கச்சிதமாக தேர்வு செய்யப்பட்டு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
மற்றும் பங்கு பெற்ற கலைஞர்கள்
Stills : K.Raj
Mix : C.A.Mydeen
Colourist : K.S.Rajasekaran
DI & VFX : Whitee Lottus
Dubbing & Mixing : Bharani Studios
Design : Dinesh Ashok
இவர்கள் உழைப்பும் பங்காற்றுதலும் சிறப்பாக இருக்கிறது கலர் கரெக்ஷன்
டி. ஐ.செய்தவர்கள் எல்லாமே படத்திற்கு கச்சிதமாக இருக்கிறது
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் இந்த படத்தை மக்கள் இடம் கொண்டு போய் நல்ல முறையில் சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த பரமசிவன் ஃபாத்திமா
காலத்துக்கு ஏற்ற கதையுடன் வெளி வந்திருக்கிறது.
மதம், ஜாதி, இவைகளை விட்டு மனிதர்கள் மனிதம் என்ற வாழ்க்கையை கையில் எடுத்தால் அனைவரும் சந்தோஷமாக வாழலாம் என்று சொல்லி இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான இசக்கி கார்வண்ணன், அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்🙏🌷
