D N A திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

டி. என். ஏ திரில்லர் மற்றும் ஃபேமிலி & எமோஷனல் கலந்த உணர்வு பூர்வமான படமாக வந்திருக்கிறது.

இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார், இவர் அதிஷா வினோவுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். இருவருக்கும் வாழ்த்துக்கள். அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் அதர்வா, மற்றும் நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல் , ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன் , ரித்விகா , சுப்பிரமணியம் சிவா முகமது, கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஹாஸ்பிடல், குழந்தை கடத்தல், சம்பவத்தை அடிப்படை யாக கொண்ட கதை… அவ்வளவு விருவிறுப்பு… அதிலும் இரண்டாம் பாதியில் நமக்கே படபடப்பு வந்து விடுகிறது… கிளைமாக்ஸ் நெருங்கும் போது சீட் நுனிக்கே வந்து… விடுகிறோம்.. சஸ்பென்ஸ படத்தில்
தப்பு செஞ்சவங்க யாரும் தப்பிக்கிறது இல்லை தண்டனைக் காலம் தள்ளிப் போகிறது என்பது தான் இப்படத்தில் ஒன் லைன் ஆக சொல்லப்படுகிறது

அதர்வா (ஆனந்த்)

காதல் தோல்வியால் குடிகாரன் ஆகிறார் தந்தை வெறுக்கிறார் நாசமா போயிடுவே என்று சாபம் கொடுக்கிறார். தம்பி திருமணம் அதர்வா வால் நிற்கிறது.

இந்த பக்கம் நிமிஷா சஜயன் .

வெகுளி தனமாக, மனவளர்ச்சி குன்றிய நிலையில் அம்மா விஜி சந்திரசேகரால் சபிக்க படுகிறார்.

இப்படி குடிகாரனாக இருந்து திருத்திய அதர்வா, வெகுளி பெண்ணான நிமிஷா, இருவரும் சேர்கிறார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ட திரைக்கதையில, ஆனந்துக்கும், திவ்யாவுக்க்கும், திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்துக்குப் பிறகு குழந்தை பிறக்க, மருத்துவமனையில் இது என்னோட குழந்தையே இல்லை என நிமிஷா சஜயன் குண்டை தூக்கிப் போடுகிறார்.

அதன் பின்னர் கதையில் நடப்பது தான் செம ட்விஸ்ட். கடைசி வரையில், பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல், கிளைமேக்ஸ் வரை செம த்ரில்லர் படமாக மாறி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது.

அடுத்து குழந்தை கடத்தல் பாட்டி, அந்த பாட்டியிடம் இருந்து குழந்தை எப்படி போகிறது? எங்கே போகிறது ? மனைவி சொன்னதை அதர்வா நம்பினாரா? குழந்தை உண்மையாகவே மாறிவிட்டதா? காவல் துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்தது என்ன? காணாமல் போன குழந்தை மீன்டும் கிடைத்ததா? கடைசியில் என்ன ஆனது? என்பது தான் இந்த டிஎன்ஏ படத்தின் கதை

அதர்வா

பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா.

அவர் சரியான ஒரு நல்ல படத்திற்காக காத்துக் கொண்டிருந்தார் இந்த படம் அவருக்கு சரியான ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறது ஆனந்த் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் ஆரம்பக் காட்சியில் காதலியை இழந்த வேதனையில் போதை ,தன் அப்பாவிடம் சாபம் பிறகு நிமிஷா சஜயனை பார்த்த பிறகு அவரோடு வாழ வேண்டும் என்று ஆசை ,அதன் பிறகு தன் குழந்தை காணாமல் போய்விட்டதை அறிந்து, இன்வெஸ்டிகேஷனில் இறங்கும் அதர்வா எதிரிகளை அடித்து வீழ்த்தும், கதாபாத்திரத்தில், இந்த படத்தில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது இப்படம்.

நிமிஷா சஜயன்

2021 இல் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சனில் நடித்தார். திரைப்படமும் இவரது நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதே ஆண்டு, அவர் நயாட்டு, மாலிக் ஆகிய திரைப்படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். .

இப்போது டி.என்.ஏ என்ற இந்த படத்தின் மூலம் திவ்யா ,என்ற கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனநிலை சரியில்லாமல் நடிக்கும் நடிப்பும் சரி, தன் குழந்தையை காணாமல் தவிக்கும் தவிப்பும் சரி, ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில், தன் குழந்தை தான் அந்த பாப்பா என்று அவர் துடிக்கும் துடிப்பும் அற்புதமாக இருக்கிறது .

படத்தில் ஒவ்வொரு காட்சியும் நிமிஷா அவர் கதாபாத்திரம் சிறப்பாக வடிவம் பெற்று இருக்கிறது அம்மா விஜியுடன், மனநிலை சரியில்லாத பெண்ணாக, நல்ல கணவன் அமையமுடியாமல் ஏங்கும் பொழுதும், அதர்வா கிடைத்தவுடன் அவர் மீது அன்பைப் பொழிவதும், குழந்தை பெற்றவுடன் தன் குழந்தைக்காக, ஏங்குவதும் என படம் முழுக்க ஸ்கோர் செய்திருக்கிறார் நிமிஷா,

இந்த படத்தில் அவர்தான் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது மிகையல்ல. மற்ற கலைஞர்கள்

ரமேஷ் திலக்,

அதர்வா நண்பராக வெங்கட் ,என்ற கதாபாத்திரத்தில் மனதில் இடம் பிடிக்கிறார். பாலாஜி சக்திவேல், ரிட்டைர் ஆகும் போலீஸ் சின்ன சாமி வேடத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்

விஜி சந்திரசேகர்,

நிமிஷாவின் அம்மாவாக நன்றாக நடித்திருக்கிறார் சேத்தன்,

அதர்வா அப்பாவாக, மகன் இப்படி குடிகாரனாகி,வீனாக போகிறானே என்று புலம்புவது,
துடிப்பது என நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் வெல்டன் சார்.

ரித்விகா , மருத்துவராக புனிதவதி ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரிச்சியமான நடிகை யாகிறார் சுப்பிரமணியம் சிவா, ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

வரதராஜ் என்ற கதாபாத்திரத்தோடு இவர் செய்யும் சம்பவம் இன்று நாட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் மற்றும் மனநல மருத்துவராக கருணாகரன்

வரதராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முகமது.நடிப்பு சூப்பர்!

தப்பு செஞ்சவங்க யாரும் தப்பிக்கிறது இல்லை தண்டனைக் காலம் தள்ளிப் போகிறது என்பதை வரத ராஜ் கதாபாத்திரம் மூலம் சிறப்பாக சொல்ல பட்டிருக்கிறது

நடித்த அணைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள்

பார்த்திபன் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் திரில்லர் ஜானரில், கேமிரா புகுந்து விளையாடி இருக்கிறது.

இசை அமைப்பாளர்கள்

இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள்.

பாடல், பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அருமையான ஒரு கதை ,அதற்கு திரைக்கதை வடிவம் கொடுத்து, நல்ல நடிகர்களை தேர்வு செய்து ஒரு சிறப்பான படத்தை கொடுத்து இருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில், கோயிலில் நடக்கும் அந்த சம்பவம் அருமையாக இருக்கிறது.

சாபு ஜோசப், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது சிவ சங்கர் ,ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார். அருமையான அரங்க அமைப்புகள்.

டான் அசோக் ,சன்டை பயிற்சியாளராக ஐந்து சன்டை காட்சிகள் ஒவ்வொன்றிலும் இடி, மின்னல் என தெரிக்கின்றது . தினேஷ் நடனமாஸ்டர் ஆக பணி புரிந்திருக்கிறார்

நவதேவி ராஜ் குமார் , காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்திருக்கிறார் அதர்வா,நிமிஷா
மற்றும் அனைத்து தேர்வு சிறப்பானது

இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள் கார்த்திக் நேதா, உமா தேவி, முத்தமிழ், சகி சிவா
ஆகியோர் எழுதியிருக்கிறார்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. ஆடை வடிவமைப்பாளர் சுபீர் நன்றாக உடைகளை தேர்வு செய்து இருக்கிறார் ஒப்பனையாளர், மற்றும் டி.ஐ ,பணி புரிந்தவர்கள் கலர் கரெக்ட் செய்தவர்கள், என அனைவரின் பங்களிப்பும் சிறப்பு .

மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள் படத்தை மக்களிடம் நன்றாக கொண்டு சேர்த்து இருக்கிறார் வாழ்த்துக்கள்.

DNA’ படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்கிறது. இசை உரிமையினை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதர உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டதால் தயாரிப்பு தரப்பு இப்போதே லாபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

ஒரு நல்ல படம் தனக்கு வேண்டிய அனைத்தையும் தானே, தேடிக்கொள்ளும் என்பது உண்மை.

DNA”வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா🙏🌷