சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் வைபவ். பின்னர், ‘கப்பல், மேயாத மான்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்
இவரது நடிப்பில் சமீபத்தில் ‘பெருசு’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து நடிகர் வைபவ், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ என்ற இந்த திரைப்படத்தில்
காமெடி கலந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிக்க வைக்கிறது.

இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் ,மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.
படத்தை காமெடியும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் சார்!

நகைச்சுவை படமாக உருவாகி உள்ள இதில் மொட்ட ராஜேந்திரன்,(மெமரி தாஸ்) என்ற வேடத்தில் ஜான் விஜய்(ஸ்பில்ட்சூசை) என்ற வேடத்தில் ரெடின் கிங்ஸ்லி, (நெட்டை) யாகவும்,
சுனில் ரெட்டி,(குடி குமார்) ஆனந்த் ராஜ்,(டமார் டால்)இளவரசு(அமைச்சர் செங்குன்றவன்)
வைபவ் பாண்டி, என்ற கதாபாத்திரத்திலும், அதுல்யா ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் பசுபதி, என்ற கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
சாங்ஸ், விபின் தாஸ் உசேன் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கதை களம்

சின்ன வயதில் பாண்டியும், பூச்சியும், பசுபதியை, கஞ்சா கேசில் இருந்து போலீஸிடம் காப்பாற்றுகிறார்கள். இதனால் பாண்டிக்கும், பூச்சிக்கும், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் பசுபதி உதவி செய்வார்.

சைக்கோ சலீம் என்கிற உசேன் போலீஸாரை ஏமாற்றி இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக தன்னுடைய வீட்டில் கொள்ளை அடிக்க சொல்கிறார் .

அதற்கு பாண்டியும், பூச்சியும், கொள்ளையடித்து , டாஸ்மார்க்கில் அந்த பணத்தை தொலைத்து விட என்ன செய்வது என்று தெரியாமல் மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி, ஆனந்தராஜ், இவர்கள் நால்வரிடமும் ரெடின் கிங்ஸ்லி, அழைத்துப் போகிறார் . அங்கு தருமனுக்கு சொந்தமான வாவ் பேங்கை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்கள் அதற்கு அதுல்யா உதவி செய்கிறார்.

இவர் எல்லோரும் சேர்ந்து தர்மன் நடத்தும் வாவ் பேங் கைகொள்ளையடித்தார்களா?

மொட்டை ராஜேந்திரன் பிரியாவை கடத்திக்கொண்டு பணம் சம்பாதித்தார்களா?

திருட்டுப் போன பணத்தை பசுபதி மீட்டாரா ?

என்பதை எல்லாம் காமெடியாக, கலகலப்பாக ,பதில் சொல்கிறது இந்த சி.சி.சி.

நடிகர் நடிகைகள்

வைபவ்

பாண்டி, என்ற கதாபாத்திரத்தில் வைபவ் படம் முழுக்க காமெடியில் கலக்கி இருக்கிறார். அவர் சீரியஸாக நடித்தாலும் முகபாவனை காமெடியை கொடுக்கிறது. அதுல்யாவுடன் , ஒரு டூயட் அந்த நான்கு பேர்களுடன் சேர்ந்து பேங்கில் கொள்ளை அடிக்க ஐடியா! என படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்.

அதுல்யா ரவி,

பாடல் காட்சிகளுக்கு வந்து போகிறார் பேங்கை கொள்ளையடிக்கும், கூட்டத்துக்கு உதவி செய்கிறார் அழகாக நடித்திருக்கிறார்.

மணிகண்டன்

ராஜேஷ் பூச்சி, என்ற கதாபாத்திரத்தில் வைபௌவுடன் வந்து கலகலப்பை தருகிறார்.

ஆனந்தராஜ்

அவர் எப்பொழுதும் காமெடி படத்துக்கு தன்னுடைய நடிப்பின் மூலம் தன் பங்குக்கு சிறப்பை தருபவர் இந்தப் படத்திலும் கலகலக்க வைத்திருக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன்

மெமரி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சில நேரங்களில் மறந்து போய் அவர் செய்யும் லூட்டி தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்

ஜான் விஜய்

எப்பொழுதுமே உருட்டி மிரட்டி பேசுவார் இந்த படத்தில் கொஞ்சம் பயந்து நயந்து நடித்திருக்கிறார் இதுவும் ஒரு புது மாதிரியாக இருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி

நெட்டை என்ற கதாபாத்திரத்தில் பாருக்குள் நடக்கும் அந்த கலாட்டா செம கலகலப்பு.
சுனில் ரெட்டி சதா குடித்து கொண்டே வந்து குடி குமாராக கும்மாளம்
அடித்திருக்கிறார்

இளவரசு

இந்த படத்தில் வெகுஜன மக்கள் கட்சியின் மந்திரியாக சுந்தரியுடன் கூத்தடித்து அந்த பெண் டிரைவருக்காக படம் முழுவதும் அலைந்து கடைசியில் அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய பி ஏ கல்கி ஒளிபரப்பு செய்வது செம காமெடி கலாட்டா

சிஹைன் உசேன்

சைக்கோ சலீம் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான வில்லனாக படம்
முழுக்க வந்து நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். அவர் இல்லாதது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

விபின் தாஸ்

ஏ.சி.பி. யாக ஆபத்து என்ற கதாபாத்திரத்தில் பாயாவுக்கும் புரோட்டாவிற்கும் ஆசைப்பட்டு மந்திரி யிடம் அல்லல்பட்டு அந்த பெண் டிரைவர் தேடி அலையும் காட்சிகளில் செம கலகலப்பு

சாம்ஸ்

இந்த படத்தில் விபின் தாஸ் உடன் படம் முழுக்க காமெடி காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் அவர் உடல் மொழி பாவம் வித்தியாசமாக இருக்கிறது நன்றாக நடித்திருக்கிறார்

குப்பை பொறுக்கு பவராக வந்த கலையரசன் தன்னிடம் இருக்கும் பணத்தின் அருமை தெரியாமல் இருவதுக்கும் 30க்கும் கெஞ்சிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளில் பாவம் என்று சொல்ல தோன்றுகிறது கடைசியில் அவர் கையில் பணப்பெட்டி கிடைத்தவுடன் அவர் அடையும் ஆனந்தம் படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுகிறது

மொத்தத்தில் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தியாசமான கோணத்தில் நடித்த ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர்கள்

விக்ரம் ராஜேஷ்வர், மற்றும் அருண் கேசவ், இருவரும் இணைந்து கதை, திரைக்கதை, எழுதி படத்தை இயக்கியிருக்கிறார்கள் ஒரு காமெடி படத்துக்கு என்ன தேவையோ?

அதை கச்சிதமாக தந்திருக்கிறார்கள் லாஜிக் இல்லாத மேஜிக்காக இருந்தாலும் படம் முழுக்க ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது.

தயாரிப்பாளர்

பாபி பாலச்சந்திரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். கமர்சியல் காமெடி படமாக, தந்ததற்கு அவருக்கு வாழ்த்துக்கள்.

இசையும் பாடல்களும் இமானின் இசையில் ரசிக்க வைக்கிறது கூட்டாளி பாடல் தாளம் போட வைக்கிறது

டிஜோ டாமி,

ஒளிப்பதிவு அருமை பாடல் காட்சிகள் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

சுரேஷ் ஏ.பிரசாத்

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக்காமல் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்
பட தொகுப்பாளர்.

அருண் சங்கர் துரை,

ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் அவரின் கைவண்ணம் சிறப்பாக விளையாடி இருக்கிறது வாவ் பேங், மற்றும் அதுல்யா , நடத்தும் பேக்கரி என எல்லா இடத்திலும் அருமையாக அரங்கம் அமைத்திருக்கிறார். பேங்கை கொள்ளை அடிக்க, சிட்டி கேங் ஸ்டர் தோண்டும் குழி, சிரமப்பட்டு ஆர்ட் டைரக்டர் அமைத்திருக்கிறார்.

டான் அசோக்

சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறார் சண்டை காட்சிகள் ஆனால் தெறிக்கவில்லை என்றாலும் காமெடியாக இருக்கிறது.

Head of Strategy: Dr. Manoj Beno
Production Company: BTG Universal Production

மக்கள் தொடர்பாளர்கள்
ரியாஸ் கே .
அகமது மற்றும் பாரா ரியாஸ் அகமது அவர்களுக்கு வாழ்த்துக்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்
(V4U Media)

மற்றும் படத்தின் வெற்றிக்கு திரைக்குப் பின்னால் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த CCC ஒரு காமெடி கலந்த கலகலப்பான இரண்டு மணி நேரம் சிரித்து, ரசித்து வருவதற்கு, ஏற்றப்படம் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்