தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேகர் கம்முலா கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்
கதை களம்
படத்தில் ஆரம்பமே பிரம்மாண்டமான கப்பல்,குபேர மில்லியனர் வீடு என பிரமிக்க வைக்கிறது படம் அடுத்து….. மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ.1 லட்சம் கோடியை சட்ட விரோதமாக கைமாற்ற தொழில் அதிபர்(நீரஜ் மித்ரா) ஜிம் சர்ப் நினைக்கிறார்.
அப்போதே படம் ராக்கெட் வேகத்தில் போகிறது. அடுத்து, சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனா (தீபக் தேஜ்)உதவியை நாடுகிறார். அவரது மனைவி சுனைனா , புஜ்ஜி, என்ற பாப்பா இவர்களுக்காக நாகார்ஜுனா இந்த தவறான செயலை செய்வதற்கு ஒத்துக் கொள்கிறார்.
சட்டவிரோத பரிவர்த்தனைக்காக கல்வி அறிவு இல்லாத தனுஷ்(தேவா) குஷ்பு, கேள், திவ்யான்
உள்ளிட்ட 4 பிச்சைக்காரர்களை நாகார்ஜுனா தேர்வு செய்கிறார். அவர்கள் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார்.
ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்த பின்பும் சம்பந்தப்பட்ட பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் தனுசை கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படும்போது அவர் தப்பித்து விடுகிறார். எதிர்பாராத விதமாக பண பரிவர்த்தனையும் தடைபடுகிறது.
பத்தாயிரம் கோடி குறிப்பிட்ட நபருக்கு போய் சேராமல் நாகார்ஜுனா நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார் இதனால் தனுசை வலை வீசி தேடுகிறார்கள்.
தனுஷ் உயிரோடு கிடைத்தால்தான் பணப்பரிவர்த்தனை முழுமை அடையும் என்பதால் அவரைத் தேடி நாகார்ஜுனா தலைமையில் குழுக்களாக பிரிந்து தேடுகிறார்கள்.
அவர் வில்லன் கும்பலிடம் இருந்து தப்பித்து மும்பை பகுதியில் ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டே இருக்கிறார் ஒரு கட்டத்தில்
ஒரு ரெயில் நிலையத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு அழுது கொண்டிருக்கும் ராஷ்மிகாவை, தனுஷ் சந்திக்கிறார்கள்
இப்போது ராஸ்மிகா செல்போனில் இருந்து நாகார்ஜுனாவுக்கு தனுஷ் போன் செய்ய இப்பொழுது அந்த கும்பல் ராஸ்மிகாவையும் துரத்துகிறது .
அந்த கும்பலில் இருந்து தனுஷும் ராஸ்மிகா வும் தப்பித்தார்களா?
அந்த பத்தாயிரம் கோடி தனுஷ் கைக்கு வந்ததா ?
நெருக்கடியில் சிக்கிய நாகார்ஜுனா நிலை என்ன ஆனது?
தனுஷ் உடன் சேர்ந்து வந்த குஷ்பூ கர்ப்பிணியாக இருக்கிறார் அவருடைய நிலைமை என்ன ஆனது ?
நீரஜ் மித்ரா போட்டோ ஸ்கெட்ச் அவர் விரித்த வலையில் அந்த திமிங்கிலம் சிக்கியதா ?
தனுசை உயிரோடு விட்டார்களா நீரஜ் மித்ரா வை சேர்ந்த அல்லக்கை கும்பல்?
இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக அற்புதமாக படமாக்கி இருக்கிறார். வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களுக்கு.
தனுஷ்
தனுஷ் தேவா கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்து இருக்கிறார். பிச்சைக்காரனா நடிக்கிறது பெரிய விஷயம். தனுஷ் பிச்சைக்காரனாவே வாழ்ந்து இருக்கிறார். வழக்கமா குத்து, வெட்டுன்னு பார்த்தவங்களுக்கு இது புதுசு. தேவா என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க பிச்சைக்காரன் ஆக பிச்சைக்காரர்களுக்காக உருகுவது, வெள்ளந்தியாக பேசுவது , ராஷ்மிகாவை, அம்மா என்று அழைப்பது மேடம் என்று அழைப்பது அவரை சுற்றி சுற்றி வருவது, நாகார்ஜுனாவை நம்பியே படம் முழுக்க பயணிப்பது, கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனை குப்பைமேட்டில் படுக்க வைத்து பிச்சை எடுக்க வைப்பது,
என்று ஒரு ராஜாங்கத்தை நடத்தி இருக்கிறார் தனுஷ்
வாழ்த்துக்கள் சார்!
ராஷ் மிகா மந்தனா
படத்தின் முக்கியமான திருப்புமுனை ராஷ்மிகா மந்தனா கேரக்டர்தான். வீட்டை விட்டு தன் காதலனை கரம் பிடிப்பதற்காக ஓடிவந்து ரயில் நிலையத்தில் கண்ணீர்விடும் காட்சியில், இருந்து கடைசியில் கிளைமாக்ஸ் காட்சியில் கைக்குழந்தையுடன் தனுசுக்கு ஆறுதல் சொல்லும் காட்சி வரை, ராஸ்மிகா மனதுக்கு நெருக்கமாக இடம் பிடித்துக் கொள்கிறார்
கவர்ச்சி, காதல், டூயட் என்று இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அப்படியே பொருந்தி போகிறார்.
நாகார்ஜுனா
தீபக் தேஜ் ,என்ற சி.பி.ஐ ஆபீசராக, நேர்மையாக நடந்ததால் சிறையில் தள்ளப்பட்டு ,அதன் பிறகு நீரஜ் மித்ரா சதி வலையில் சிக்கி பிறகு தனுசுக்கு ஆதரவாக மாறுகிறார். படம் முழுக்க இவர் கதாபாத்திரமும் இவர் நடிப்பும் மிகச் சிறப்பாக இருக்கிறது
இவர் மனைவியாக சுனைனா, நடித்திருக்கிறார் அவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது
இயக்குனர்
இயக்குனர் சேகர் கம்முலா, மும்பை பின்னணியில் சம்பவங்கள் நடப்பது போல கதையை எழுதி இருக்கிறார் . இதில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா ஆகிய எல்லோரையும் சிறப்பாக நடிக்க வைத்து இரருக்கிறார்கள்
வில்லன் நீரஜ் மித்ரா கதாபாத்திரத்தில் ஸ்டைலாக நடிக்க வைத்திருக்கிறார்.
தனுஷ் பிச்சைக்காரராக வடிவமைத்து அவரின் தோற்றமே படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்
ஒரு பணக்கார வில்லனுக்கும், ஒரு நேர்மையானவருக்கும் இடையே தனுஷ் மாட்டிக்கொள்ள அதன்பின் என்ன நடக்கிறது என்பதை அருமையாக திரைக்கதை எழுதிய ிருக்கிறார் கதை சீராக செல்கிறது வசனங்கள் நன்றாக இருக்கிறது.
கிரைம், திரில்லர் பாணியில் விறுவிறுப்பாக , படத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
ஒரு பவர்புல் கிரைம் திரில்லர். நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை என்கேஜாக இருக்கிறது. கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம்.
மற்றும் இப்படத்தில் இயக்குனர் பாக்கியராஜ், பக்ஸ், நாசர், ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இசை
தேவி ஸ்ரீ பிரசாத், இசை பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக இருக்கிறது .
போய் வா போய் வா போய் வா நண்பா” பாடல் துள்ளாட்டம் போட வைக்கிறது .
படம் முழுக்க தனுஷ் வரும்போது வரும் அந்த இசை உருக வைக்கிறது
ஒளிப்பதிவாளர்
நிக்கீத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார் மும்பையில் உள்ள பகுதிகளில் கேமரா சுழன்று சுழன்று விளையாடி இருக்கிறது.
திருப்பதியில் நடக்கும் காட்சிகளும் மற்றும் எல்லா காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் சிறப்பாக இருக்கிறது.
இந்த படத்திற்கு கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். மூன்று மணி நேரம் என்பதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் பல காட்சிகள் நீளமாக இருப்பது படத்தை தொய்வு ஏற்படுத்தி உள்ளது. படத்தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மற்றும் இப்படத்தில் ஆர்ட் டைரக்டர் அருமையாக பணிபுரிந்து இருக்கிறார் வில்லனின் வீடு, ஜெயபிரகாஷ் வீடு, கட்டு கட்டான பணம், கப்பல் ,குப்பை மேட்டில் வாழும் மனிதர்கள், பிச்சை எடுக்கும் அந்த மனிதர்களின் இருப்பிடம், இப்படி எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் அற்புதமாக பணிபுரிந்து இருக்கிறார்.
படத்தின் ஒப்பனையாளர் கச்சிதமாக பணிபுரிந்து இருக்கிறார் தனுசுக்கு பிச்சைக்காரனாக இருக்கும் போது ஒரு விதமான மேக்கப்பும் அவர் கோடீஸ்வரனாக மாறிய பிறகு ஒரு மேக்கப்பும் நன்றாக வித்தியாசம் காட்டி இருக்கிறார்.
மற்றும் கலர் கரெக்ஷன், செய்தவர்கள் டி .ஐ செய்தவர்கள்,
தயாரிப்பு நிர்வாகி, உட்பட அனைவரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது ஒரு வெற்றி படத்திற்காக எல்லோரும் திறமையாக உழைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் சதீஷ், அண்ட் சிவா , மற்றும் ரியாஸ் அஹமது, ஆகியோர் சிறப்பாக படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த குபேரா” தனுஷ் நடித்த படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படமாக வந்திருக்கிறது
தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்படம் வெற்றிவாகை சூடும் என்பது உறுதி🌷
