கதை களம்
மதுரை உசிலம்பட்டியில் சின்னதாக ஒரு துணிகடை வைத்து இருக்கும் ராமு முப்பது மூன்று வருடம் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று கோபி செட்டி பாளையம் பகுதி யை சார்ந்த அம்பிகாவை திருமணம் முடிக்க நிச்சயதார்த்தத்திற்கு தன் அப்பா, அக்கா, மாமா மற்றும் நண்பர்களுடன், கோபிசெட்டிபாளையம் வருகிறார்.
கோபிசெட்டிபாளையம் வந்த பிறகு ஊரடங்கு போடப்படுகிறது கொரானா காலம் என்பதால் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என்று சட்டம் இயற்றப்படுகிறது .
இதனால் ராமுவும், அவரது குடும்பமும் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அதன் பிறகு நிச்சயதார்த்தம் நடக்கும் வேளையில் அம்பிகா, கௌதம் என்ற வேறு ஜாதிக்கார இளைஞனுடன் ஓடிப் போய் விடுகிறார்.
இதன் பிறகு ராமு, ராதா ,இருவரும் மனம் விட்டு பேச அவர்களுக்குள் புரிதல் ஏறபட்டு
காதலிக்கிறார்கள்.
அந்த காதல் நிறைவேறியதா?
ஒடிப்போன அம்பிகா, ஏன் திரும்பி வந்தாரா?
விக்ரம் பிரபு திருமணம் நடந்ததா?
என்பதை அழகாக சொல்லி இருக்கிறது இந்த லவ் மேரேஜ்
லவ் மேரேஜ் படத்தின் முதல் பாதியை பொருத்தவரை ஒரு சிம்பிளான, அனைவராலும் ரிலேட் பண்ணும் வகையிலான ஒரு ஃபன்னான பேமிலி எண்டர்டெயினர் படமாக தான் இருக்கிறது
இடைவேளைக்கு பிறகு படம் நல்ல ஒரு மனதுக்கு நெருக்கமான கதையாக பயணிக்கிறது
விக்ரம் பிரபு
,மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு அடக்க ஒடுக்கமான மாப்பிள்ளையாக அடக்கி வாசித்துள்ளார். படத்தின் கதாபாத்திரங்களும், சூழலும் நம்மை படத்தோடு ஒன்றி பயணிக்க
விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் பெறுகிறது. சின்ன சின்ன உணர்ச்சிகளை கொண்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் ஆபாசமோ , வன்முறை காட்சிகளோ இல்லாமல் ஃபேமிலி ஆடியன்சிற்கு ஏற்ற மாதிரியான ஒரு படம் லவ் மேரேஜ்.
சுஷ்மிதா பட் ,
அம்பிகா,என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அழகான முகம், அழகான நடிப்பு நன்றாக இருக்கிறது.
ரமேஷ் திலக்,
போட்டோகிராபர் வேடத்தில் நடித்துள்ளார் படம் முழுக்க கலகலப்பாக இருக்கிறது. மீனாட்சி தினேஷ், ராதா என்ற வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார்
அருள்தாஸ்,
வில்லத்தனத்தில் பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கிறார் முருகானந்தம், நாயகியின் தாய் மாமனாக கொங்கு பாஷை பேசி நன்றாக நடித்திருக்கிறார் கோடாங்கி வடிவேலு
காமெடி கலந்த பாத்திரத்தில் சிறந்த நடிகராக கலகலப்பாக நடித்திருக்கிறார்
சத்யராஜ் அம்மாவாசையின் பேரனாக பௌர்ணமி என்று கதாபாத்திரத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் கலகலப்பை ஏற்படுத்துகிறார்
மற்றும் வின்னர் ராமச்சந்திரன் , கஜபதி , போன்ற வர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
தொழில்நுட்ப கலைஞர்கள்
காஸ்ட்யூம் டிசைனராக நவ ராஜ் குமார் பணிபுரிந்துள்ளார்
கிரியேட்டிவ்புரொடியூசர் ரா.கார்த்தி
லீலாவதி குமார் நடன பயிற்சியாராக பணி புரிந்திருக்கிறார்
தினேஷ் காசி சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார்
பாடல்கள் மோகன் ராஜன், மற்றும் ஷான் ரோல்டன், எழுதி இருக்கிறார்கள்
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர்கள் DR சுதா ஸ்ரீ, ஸ்ரீநிதி சாகர்
இயக்குனர் சண்முகப்பிரியன் ஒரு யதார்த்தமான வாழ்வியல் சினிமாவை கொங்குச் சீமையில் குடும்பம், எமோஷனல், காதல் கலந்து உருவாக்கி இருக்கிறார்.
பழைய பாக்கியராஜ் சார் படம் பார்த்தது போல இருந்தது.
மொத்தத்தில் இந்த லவ் மேரேஜ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்
காதலித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் பிடிக்கும்
விக்ரம் பிரபு படத்தில் இது ஒரு வித்தியாசமான ரசிக்கக்கூடிய படமாக வந்திருக்கிறது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்🌷
