கதைக்களம்
, படத்தின் ஆரம்பத்திலேயே விஷ ஊசியால் கொலை செய்ய பட்ட ஒரு பெண் உடல் கருகிய நிலையில் குப்பை தொட்டியில் கிடக்கிறது.
அதன் பிறகு போலீஸ் இன்வெஸ்டிகேஷன்நடக்கிறது. மும்பையில் உள்ள விஜய் ஆண்டனி அன் அபிசியலாக இந்த வழக்கை விசாரிக்க சென்னை வர, அங்கு தமிழறிவு என்ற ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்கிறார். தமிழறிவு நீருக்கடியில் அரை மணி நேரம் அமர்ந்து இருப்பார் .
அவருக்கு எதை பார்த்தாலும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளும் திறமை இருக்க, பிறகு தான் தெரிகிறது அந்த கொலையை அவர் செய்யவில்லை என்று.
பிறகு தமிழறிவு உதவியுடன் அந்த கொலைக்காரனை விஜய் ஆண்டனி கண்டுப்பிடித்தாரா?
அந்த கொலைகாரன் யார் என்று தெரிந்தா? என்று சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வந்துள்ளது மார்கன்”
விஜய் ஆண்டனி
எப்போதும் திரில்லர், வித்தியாசமான கதைக்களம் என்றால் அல்வா சாப்பிடுவது போல அவருக்கு, அப்படித்தான் காவல்துறை அதிகாரியாக படம் முழுவதும் ஒரு கேஸை கண்டுப்பிடிக்க அவர் போராடுவது என நன்றாகவே நடித்துள்ளார்
தன் மகள் இறந்து போக கதறும் இடம் சூப்பர்!
தனக்கு நாயகி இல்லாமல் கதைக்கு பக்கபலமாக நாயகனாக உயர்ந்து நிற்கிறார்!
கொலைகாரனின் விஷ ஊசி ஏற்றப்பட்டு ஒரு பக்கம் கருப்பு நிறமாக முகத்தை கொஞ்சம் கருப்பாக்கிக் கொண்டு சிரத்தையுடன் நடித்திருக்கிறார்.
அஜய் தீஷன்
அறிமுக நடிகர் தமிழறிவாக வரும் அஜய், அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆக்ஷன், மற்றும் கோபம், கருணை என எல்லா இடத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்
விஜய் ஆண்டனிக்கு நிகரான கதாபாத்திரம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய் ஆண்டனி தாண்டி இந்த கேஸையே அவர் தான் கண்டிப்பிடித்து தீர்கிறார். வெல்டன் அதிலும் சித்தர் சக்தி தண்ணீரில் மூழ்கி, நடக்காத ஒரு விஷயத்தை தன் ஆன்மா மூலம் தமிழறிவு பார்ப்பது என ஹாலிவுட் அளவிற்கு ஒரு கான்செப்ட் வைத்துள்ளனர்
தொடர் கொலைகள், அதுவும் ஒரே பேட்டர்ன் யார் செய்திருப்பார்கள் என் பல சுவார்ஸ்யம் எட்ஜ் ஆப் தி சீட்டில் உட்கார வைக்கிறது
தமிழறிவு கதாபாத்திரம்!
படத்தின் மிகப்பெரும் பலம் ஆரம்பம் முதல் முடிவு வரை விசாரணை நோக்கியே படம் செல்கிறது, அந்த வேகத்தில் சமுத்திர கனி, தீப்ஷிகா, மகாநதி சங்கர், அர்ச்சனா, கனிமொழி,பிரகிடா என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
படத்தின் திரைக்கதை.சூப்பர் கிளைமேக்ஸ் டுவிஸ்ட். அருமை நடிகர், நடிகை பங்களிப்பு அதை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவு யுவா, ஒளிப்பதிவில் நீச்சல் குளத்தைக் காட்சிப்படுத்திய விதம், நீருக்குள் எடுக்கப்பட்ட ஷாட்டுகள் கவனம் பெறுகின்றன
இரவு நேர காட்சிகள் திகில் அடையச் செய்கிறது அதை காட்சிப்படுத்திய விதமும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணமும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசை விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் கதையின் போக்கிற்கு பலம் சேர்க்கிறது
பாடல் ரசிக்க வைக்கிறது
இயக்குனர்: சித்தர்கள் வழியில் வாழ்க்கையைக் காணும் விஷயம், ரசாயன ஊசி, அடுத்தடுத்த திருப்பங்கள், கிளைமேக்ஸில் ஏன் கொலைகள் நடந்தது என்பதற்கான காரணம் என மார்கன் திரைப்படத்தை சலிப்பில்லாமல் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்
நீருக்குள் இருந்தபடி கொலையான இடத்திற்கு அஜய் கதாபாத்திரம் செல்வது படத்தின் பலமான காட்சியாக
எழுதி இயக்கி இருக்கிறார்
எடிட்டிங் இவரே செமஃபாஸ்ட்
படத்தொகுப்பு பரபரப்பாக செய்யப்பட்ட விதம் சூப்பர் படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
ராஜாவின் அரங்கமைப்பு அற்புதமாக இருக்கிறது எல்லா இடங்களிலும் ஆர் டைரக்டர் அருமையாக பணி புரிந்திருக்கிறார்
டெக்னிக்கல் ஹெட் ஜனார்த்தனன்.
திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்
விஷ்ணு,லியோ ஜான் பால்
அருமையான திரை கதை களம்
நடனம் பயிற்சி:பிரபு
காஸ்ட்யூம்; சிமோன் ஸ்டாலின்
மக்கள் தொடர்பாளர் ரேகா அவர்கள் படத்தை மக்களிடம் நன்றாக கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
படத்தின் ப்ளஸ்
நீச்சல் வீரராக வரும் அஜய் தீஷன் அறிமுக படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தண்ணீரின் பின்னணியில், அவர் யூகிக்கும் காட்சிகள் வியப்பு.
வெல்டன்.
சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கும்படி நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
யுவாவின் ஒளிப்பதிவில் வியப்பாய் காட்சிகள் நகர்கிறது. விஜய் ஆண்டனியின் இசை படத்துடன் ஒன்றை செய்கிறது. பின்னணி இசையும் மிரட்டல்.
கதை திரைக்கதை யூகிக்க முடியாத அளவுக்கு கொண்டு சென்று கிளைமாக்கில் ஒரு டுவிஸ்ட் வைத்து படத்தை சிறப்பாக முடித்து இருக்கிறார் இதெல்லாம் இந்த படத்திற்கு மிக பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் இந்த மார்கன் ஒரு வெற்றி படமாகவே விஜய் ஆண்டனி அவர்களுக்கு அமைந்திருக்கிறது. அவரே தயாரித்து, அவரே இசையமைத்து, அவரே நடித்திருக்கிறார்
படத்தின் வியாபாரம் சாட்டிலைட், ஓவர்சீஸ், ஓ.டி.டித்தளம், இந்தி ரைட்ஸ் எல்லாமே சிறப்பாக விற்பனையானது என செய்தி வருகிறது இப்பொழுது தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாடுவதால் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்🌷
