Kannappa *CAST & CREW
Starring: Vishnu Manchu, Mohan Babu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Sarat Kumar, Kajal Aggarwal, Arpit Ranka, Brahmanandam, Saptagiri, Mukesh Rishi, Madhubala, Aishwarya Bhaskaran, Brahmaji, Devaraj, Raghu Babu, Siva Balaji, Sampath Ram, Lavi Pajni, Surekha Vani, Preity Mukundhan, Kaushal And Adhurs Raghu.
ஆகியோர் முக்கிய வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான படத்திற்கு பிரம்மாண்டமான நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
கதை களம்
சின்ன வயதிலேயே தின்னா தன் தாயையும் நண்பனையும் பறிகொடுத்ததால் கடவுள் இல்லை என்ற எண்ணத்தில் வளர்ந்து வருகிறார்
நாகநாதன் எனும் கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் மகனுக்கு ஜாதி கட்டுப்பாடு சம்பிரதாயம் வழக்கங்களை இருந்து மாறுபடுவதில் வேறுபட்டு நிற்கிறார்
சிவபெருமானும் பார்வதி அன்னையும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது கடவுளே இல்லை என்று சொல்லும் இந்த தின்னாவை எப்படி உங்கள் பக்தனாக மாற்றப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார் பார்வதி அன்னை
பொறுத்திருந்து பார் காலம் கனியும் என்கிறார் சிவபெருமான் .
வாயு லிங்கத்தை கவர்ந்து செல்வதற்காக எதிரி கூட்டம் ஒரு லட்சம் பேர் படையெடுக்கிறார்கள் அதை தின்னாவும் நாகநாதன் முறியடிக்கிறார்கள்.
அதற்கு மதுபாலா. சம்பத் ராம், தேவராஜ், ஐஸ் வர்யா போன்றவர்கள் கூட்டணி அமைத்து ஐந்து பட்டியை சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைகிறார்கள்.
இந்நிலையில் நெமிலி, தின்னாவும் காதலிப்பது ஜாதி கட்டுப்பாட்டை மீறியது என்று சரத்குமார் தின்னவை தங்கள் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கிறார்
அதன் பிறகு தின்னா எப்படி கண்ணப்பனாக மாறினார் ?
நிமலியும் தின்னாவும் ஒன்று சேர்ந்தார்களா?
வாயு லிங்கம் எதிரிகளிலிருந்து காப்பாற்றப்பட்டதா?
என்பதை பிரம்மாண்டமான முறையில் சொல்லி இருக்கிறது இந்த கண்ணப்பா “
பிரபாஸ், மோகன்லால் காட்சிகள் அருமை. இரண்டாம் பாதி முக்கியமானதாக மாறுகிறது. பிரபாஸின் எண்ட்ரி நிச்சயம் புல்லரிக்க வைக்கும். பிரபாஸ. கடைசி 40 நிமிடங்களில் விஷ்ணுவின் நடிப்பு அருமை ..
துணை நடிகர்கள் பொருத்தமான தேர்வு காட்சி அமைப்புகள்
கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு, சிவபெருமானாக அக்ஷய் குமார், பார்வதியாக காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மகாபாரதம் சீரியல் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரம்மாண்ட தொலைக்காட்சி தொடர்களில் எல்லாம் பணியாற்றிய இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில்
படத்தின் பிரமாண்ட காட்சிகள் மற்றும் படபிடிப்பு பிரமிக்க வைக்கிறது
விஷ்ணு மஞ்சு
விஷ்ணு மஞ்சு கதையின் நாயகனாக படம் முழுக்க உழைத்திருக்கிறார் கடுமையான அவரது பயிற்சி படத்திற்கு மெருகேற்றி இருக்கிறது
அவர் நடிப்பு, வசனஙகள் அருமையான பதிவு செய்திருக்கிறார் . விஷ்ணுவின் சாகசத்தைப் பாராட்டலாம். இப்படத்தால் மஞ்சு விஷ்ணு மீதான மரியாதை அதிகரித்துள்ளது
. கடைசிக் காட்சியில் சிவபெருமானுக்கு கன்களை கொடுத்துவிட்டு அவர் அழுது புலம்பும் அந்த காட்சி அற்புதமாக மெய்சிலிர்க்க வைக்கிறது இதெல்லாம் உண்மையாக நடந்திருக்கும் பொழுது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்தாலே அந்த இரண்டாம் நூற்றாண்டில் இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பெருமைப்படுத்தும் வகையில் இருக்கிறது வெல்டன் விஷ்ணு மஞ்சு
அக்ஷய் குமார்,
சிவ பெருமான் ஆக வந்து அசத்தியிருக்கிறார்
பிரபாஸ், மோகன்லால்,
இருவரும் சிவபெருமானுக்கு உதவி செய்பவராக வந்து ஆச்சரியப்படுத்துகிறார்கள் மோகன்லால் சிவபெருமானாக வருகிறார்.
சரத்குமார்,
நாகநாதன் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சுவின் அப்பாவாக கம்பீரமாக நடித்திருக்கிறார்.
காஜல் அகர்வால்,
அன்னை பார்வதி தேவியாக அம்சமாக வந்து போகிறார்
மோகன்பாபு
வாயு லிங்கத்தை காப்பாற்றும் வேடத்தில் கம்பீரமாக வந்து கடைசியில் ஒரு பாடலை பாடி அற்புதமாக நடித்திருக்கிறார் படத்தையும் இவரே தயாரித்திருக்கிறார் வாழ்த்துக்கள் சார்
மற்றும் பிரீத்தி முகுந்தன்
உள்ளிட்ட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்
பெரிய பட்ஜெட்டில் நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட கண்ணப்பா திரைப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்று சொல்லலாம்
படத்தின் ப்ளஸ்
கண்ணப்பாவாகவே வாழ்ந்த விஷ்ணு மஞ்சு: காலஹஸ்தி கோயிலுக்குச் சென்றால் கண்ணப்பர் கோயிலுக்கும் பக்தர்கள் சென்று வருவது வழக்கம். வேடர் குலத்தை சார்ந்த கண்ணப்பா சிவலிங்கத்தின் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து தனது கண்களை பிடுங்கி லிங்கத்துக்கு வைத்து தன்னுடைய மகத்தான பக்தியை வெளிப்படுத்தும் புராண கதை பலருக்கும் தெரிந்திருக்கும். அதை திரையில் பிரம்மாண்டமாக கொடுக்க வேண்டும் என்கிற பெருமுயற்சியில் வெற்றி கண்டுள்ள விஷ்ணு மஞ்சு படத்தில் கண்ணப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார் அதிலும் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் தனது கண்களை அம்பு வைத்து பிடுங்கி எடுக்கும் காட்சியெல்லாம் அல்டிமேட்
படத்தின் மிகப்பெரிய பலம் மற்றும் ப்ளஸ்.
படத்தின் ஒளிப்பதிவு அற்புதம் நியூசிலாந்து காடுகளை திகட்ட திகட்ட தங்கள் கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்
கேமரா பலம் மற்றும் ப்ளஸ்
பிரபாஸ் வரும் சீனெல்லாம் பட்டாஸ்:
ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் சிவனின் திருவிளையாடலுக்காக கண்ணப்பாவை சோதிக்க அனுப்பப்படும் நபராக பிரபாஸ் வரும் 20 நிமிட கேமியோ காட்சிகளும் படத்துக்கு பெரும் பலமாக உள்ளது
: தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து ஹனுமான், ராமர், சிவன் என ஏகப்பட்ட கடவுள்களை பற்றிய பிரம்மாண்ட பக்திப் படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் கண்ணப்பா படமும்
சேரும்
தொழில்நுட்ப கலைஞர்கள்.
கதை திரைக்கதை எழுதி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு மஞ்சு,
படத்தை எந்த இடத்திலும் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக அமைத்து இன்று இளைஞர்களுக்கு எப்படி படம் பிடிக்குமோ அப்படி கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளர்:
டாக்டர் மோகன் பாபு
அவர்கள்
ஒரு நல்ல திரைப்படம் சிறப்பாக வர வேண்டும் என்று பணத்தை தாராளமாக செலவு செய்து அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார்
Banner: Twenty Four Frames Factory & AVA Entertainment
முகேஷ் குமார் சிங் மிகவும் சிரமப்பட்டு பல தொழில்நுட்ப கலைஞர்களை வெளிநாடு அழுத்தி சென்று ஒரு பிரமாண்டமான படைப்பை கொடுத்திருக்கிறார் அனைவரிடமும் நல்ல நடிப்பை வழங்கி ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவருக்கு வாழ்த்துக்கள்
ஷெல்டன் ஷா,
இவர்
ஒளிப்பதிவு நியூசிலாந்தில் பிரமாண்டமான காடுகள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது அருமையான படப்பிடிப்பு அருவியும், நீர்வீழ்ச்சியும், அற்புதமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்
ஸ்டீபன்
இசையில் பின்னணி இசை, மற்றும் பாடல்களும்
ரசிக்க வைக்கிறது
ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி
இவரின் கைவண்ணத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு பக்தி கதையை விறுவிறுப்பாக எப்படி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்திருக்கிறார் ஆண்டனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தயாரிப்பு நிர்வாகி: சின்னா
Executive Producer: Vinay Maheshwari & R. Vijay Kumar
Stunts Master: Kecha Khamphakdee
அற்புதமான சண்டை காட்சிகள் வேக வைக்கிறது பாகுபலி படம் போல ஒரு பிரபாண்டமான சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார் சண்டை பயிற்சியாளர் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் பாலத்தில் சரத்குமார் போடும் சண்டைக் காட்சி கிளைமாக்ஸில் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி மோகன்லாலுடன் விஷ்ணு மஞ்சு போடும் சண்டைக் காட்சி என பிரமிக்க வைக்கிறது.
பிரபுதேவா, பிருந்தா
நடன மாஸ்டர்ஸ்
நளினமான நடனம் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.
மக்கள் தொடர்பாளர் அஸ்வத் சரவணன்,
படத்தை மிகவும் நன்றாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் மக்கள் தொடர்பாளர் அஸ்வத் அவருக்கும் வாழ்த்துக்கள்
சம்பத் ராம் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
மற்றும் இப்படத்திற்காக பணிபுரிந்த காஸ்டியூமர்.
அரங்க அமைப்பாளர்,
ஒப்பனையாளர்,
மற்றும் கலர் கரெக்ஷன் செய்தவர்கள்,
டி ஐ பணியில் பணிபுரிந்தவர்கள்,
தயாரிப்பு நிர்வாகிகள்
என அனைவருக்கும் பாராட்டுக்கள் .
ஐஸ்வர்யா ,மற்றும்,
மதுபாலா,
தேவராஜ்,
மற்றும் பிரம்மானந்தம்,
என நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கும் அவர்களின் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த கண்ணப்பா”
அப்பப்பா “என்ன பிரம்மாண்டம்
என்ன கடின உழைப்பு
என்று சொல்லத் தோன்றுகிறது மொத்தத்தில் இந்த படம் வெற்றியப்பா என்று சொல்லும் அளவிற்கு படம் பிரமாண்டமாக வந்திருக்கிறது ரசிக்க வைத்திருக்கிறது கண்ணப்பாவின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் படம் வெற்றி பட்டியலில்🌷🙏
