3BHK திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

3BHK என்பது அரவிந்த் சச்சிதானந்தத்தின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ கணேஷ், எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் பேனரில் கீழ் அருண் விஸ்வா தயாரித்திருக்கிறார்.

ஒரு அற்புதமான வாழ்வியல் படத்தை நடுத்தர மக்களின் சொந்த வீடு, என்னும் கனவை சுமந்து வாழும் குடும்பத் தலைவர்களின் வலி, மற்றும் வேதனையை சிறப்பான படமாக தந்துள்ளார் தயாரிப்பாளர் வாழ்த்துக்கள்🌷

கதை களம்

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது வாசுதேவனுக்கு, ஒரு கனவு அது ஒரு மரியாதை சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுக்கும் என்று நம்புகிறார் வாசுதேவன் (சரத்குமார்)

அதற்காக உழைக்கிறார் உழைத்துக் கொண்டே இருக்கிறார் ஆனால் பணம் மட்டும் சேர்க்க முடியவில்லை .

தன் மகன் பிரபு (சித்தார்த்) நன்றாக படித்து வீடு வாங்கி நன்றாக வாழ்வான் என்று கனவு காண்கிறார்

ஆனால் பிரபு தோல்வி மேல் தோல்வி எதை செய்தாலும் தோல்வி படிப்பு ஏறவில்லை நல்ல வேலை கிடைக்கவில்லை அப்பா பார்த்து திருமணத்தையும் வேண்டாம் என்கிறார் மகள் வாழ்க்கையும் நன்றாக அமையவில்லை இதனால் வாசுதேவன் ஹார்ட் அட்டாக் வந்து
அந்த குடும்பத்தையே துன்ப சூழ்நிலையில் தள்ளி விடுகிறார் .

அதன் பிறகு எப்படி அந்த குடும்பம் ஒரு வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறது இந்த படம்!

படத்தில் ரசிப்பதற்கு ஏராளமான கட்சிகள் இருக்கிறது ..
வாடகை வீட்டுக்காரர்கள் எவ்வளவு தொந்தரவு கொடுக்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறது இந்த படம் .

ஐ .டி .ஆபிஸில் பணிபுரியும் இளைஞர்கள் எவ்வளவு நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறது இந்த படம்.

பெண்ணை பெற்றவர்கள் பணம் இருக்கிறது என்று திருமணம் செய்து கொடுத்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்கிறது இந்த படம் .

வசதி இல்லாத பெண் என்றாலும் மனதுக்கு நிறைவான பெண் என்றால் அந்த பெண்ணுடன் மகிழ்வான வாழ்க்கை வாழலாம் என்பதை சொல்கிறது இந்த படம் .

பிள்ளைகள் படிக்கும் படிப்பை பெற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது அவர்களுக்கு எது வருகிறதோ அந்த படிப்பு தான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது இந்த படம்.

எத்தனை உறவுகள் இருந்தாலும் பணம் இல்லாவிட்டால் நம்மை மதிக்க மாட்டார்கள் என்பதை சொல்கிறது இந்த படம்.

இப்படி படம் முழுக்க நம்மை பல இடங்களில் கண் கலங்க வைத்து, மனதை தொட்டு ,
நம்மோடு ஒன்றிப்போகிறது
இந்த படம்.

ஒரு வீடு வாங்குவது தான் கதை என்று இல்லாமல் அதற்குள் எத்தனை பிரச்சனைகள், எத்தனை தோல்விகள், எத்தனை சங்கடங்கள், என்று அழகான ஒரு காதல் கதையையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். அற்புதமான படமாக வந்திருக்கிறது
கதை எழுதிய வருக்கும், இயக்குனருக்கும், படம் தயாரித்தவருக்கும் வாழ்த்துக்கள்

சித்தார்த்

நாயகன் சித்தார்த் வாசுதேவனின் மகன் பிரபுவாக சித்தார்த் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் பொழுதும் தன் கனவை கைவிடாமல் வேலை தேடும் பொழுதும், தன் அப்பா கனவை நனவாக்க உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு எமோஷனல் கலந்த நடிப்பை சித்தார்த் வழங்கி இருக்கிறார் விருது கொடுத்து கௌரவ படுத்த வேண்டும்

ஐஸ்வர்யாவிடம் மெல்லிய காதலும், ஐ.டி கம்பெனியில் நெருக்கடியான வாழ்க்கையும், அப்பாவிடம் எதிர்த்து பேச முடியாமல் கடைசிவரை அவர் சொல் பேச்சைக் கேட்டு கடைசியில் வெகுண்டு எழுவதும் என சித்தார்த் பண்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்

அவரது சாந்தமான முகம், அப்பாவித்தனமான ஒரு இன்ன சென்ட் , கதாபாத்திரத்துக்கு பொருந்தி போகிறது

சரத்குமார்

வாசுதேவனாக ஆர். சரத்குமார் நடுத்தர குடும்பத்தில் கனவாக ,ஒரு வீடு வாங்க வேண்டும் என்று அந்த குடும்பத்தின் தலைவன் அதற்காக பணத்தை சேர்க்கவும் எவ்வளவு சிரமப்படுகிறார் மகன், மகளைப் படிக்க வைக்க அவர்கள் கனவை நனவாக எப்படி உழைக்கிறார்.

அந்த கனவு நனவாதா? என்பதை சரத்குமார் அருமையான நடிப்பின் மூலம் பட்டைதீட்டிய
வைரம் போல ஜொலிக்கிறார்

இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யாரும் யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாசுதேவனாக உயர்ந்து நிற்கிறார்.

தன்மகன் பிரபு தோத்துப் போய் வரும் போதெல்லாம் ஆறுதல் கூறுவதும்
என்னை போல் ஆகிவிடாதே! என்று பரிதாபமாக பேசுவது
ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் படுத்து இருக்கும் பொழுது எவ்வளவு செலவானது என்று பரிதாபமாக கேட்பது
மனைவி சாந்தியிடம் அன்பாக நடப்பது
மகள் ஆர்த்தியிடம், அரவணைத்து போவது ,என ஒரு நடுத்தர வர்க்கத்தின் குடும்ப தலைவனாக உயர்ந்து நிற்கிறார்.

தேவயானி

வாசுதேவனின் மனைவி சாந்தியாக, தேவயானி
சூரியவம்சம் படத்தில் பார்த்த இந்த ஜோடி பல வருடங்களுக்கு பிறகு கணவன், மனைவியாக அச்சு அசலாக பொருந்தி இருக்கிறார்கள் தேவயானி நடிப்பில்
இதயம் தொடுகிறார் கலங்க வைக்கும் நடிப்பு கச்சிதமான குடும்பத்தலைவி
கணவனுக்கு ஆறுதல் சொல்வதும் மகள் வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டதே என்று ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுவதும், மகனைக் கண்டு உருகுவது என ஒரு நடுத்தர குடும்பத்தை தலைவியாக நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

“மீரா ரகு நாத்

மீரா ரகுநாத் ஆர்த்தியாகவும், வாசுதேவனின் மகளாகவும், பிரபுவின் தங்கையாகவும்
அற்புதமாக நடித்திருக்கிறார் அந்த பேசும் கண்கள் அப்பாவுக்காக உழைக்கும் அந்த மகள் நடுத்தர குடும்பத்தில் பொறுப்புள்ள
மகள் இருந்து விட்டால் எந்த தந்தையும் தலைநிமிர்ந்து வாழலாம் என்று சொல்லும் அந்த நடிப்பு சூப்பர்
என்று சொல்லத் தோன்றுகிறது
படத்தின் பலமே ஆர்த்தியின் கதாபாத்திரம் தான் அவ்வளவு அன்பு நமது வீட்டில் ஒரு பெண் குழந்தை எப்படி இருக்குமோ அதை அப்படியே அச்சு அசலாக, அற்புதமாக நடித்திருக்கிறார்.

சைத்ரா

ஐஸ்வர்யாவாக (ஐஷு), பிரபுவின் காதலியாக சைத்ராவாக. பொறுப்பான காதலியாக வந்து போகிறார் அம்சமாக இருக்கிறார் சித்தார்த்துக்கு ஏற்ற சிறப்பான ஜோடி பிரபுவுக்கு பிரச்சனைகள் வரும்போதெல்லாம் எமோஷனல் ஆகாதே அது தீர்வாகாது நன்றாக யோசி என்று சொல்லி நல்ல காதலியாக நல்ல மனைவியாக அற்புதமான நடிப்பை கொடுத்து இருக்கிறார் சைத்ரா

அழகான புது வரவு மற்றும் யோகி பாபு வீட்டு புரோக்கராக சில காட்சிகள் வந்தாலும் கலகலப்பை ஏற்படுத்துகிறார்

சுப்பு பஞ்சு

சரத்குமார் தம்பியாக வந்து படத்தின் திருப்புமுனைக்கு பக்கபலமாக இருக்கிறார்

விவேக் பிரசன்னா

ஐ டி கம்பெனியில் மேலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு வீட்டு கடன் வாங்கும் இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடியை கொடுக்கிறார்கள் என்பதை இவர் நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்

எல்லோரின் நடிப்பு
நன்றாக இருக்கிறது ஒரு நல்ல படத்திற்கு இப்படி கலைஞர்கள் அமைந்துவிட்டால் அதுவே சிறப்பாக அமைந்துவிடும்

இயக்குனர்

திரை, கதை ,எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்
மனதுக்கு மிக நெருக்கமான ஒரு கதையை தேர்வு செய்து படமாக்கி இயக்கிய விதம் மிகச் சிறப்பு திரைக்கதை சீராக இருக்கிறது
இயக்கம் தெளிவாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு வெற்றிப் படம் கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் அனுபவிக்கும் வலியை அற்புதமாக கடத்தி இருக்கிறார்.
தோல்வி என்பது எத்தனை வலியை கொடுக்கும் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார்
அப்பாவிடம் மகள் காட்டும் பாசம்,
அவ்வளவு நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்
மொட்டை மாடியில் அப்பா மகன் பேசும் காட்சி அருமை
இயக்குனர் வாழ்த்துக்கள் சார்

ஒளிப்பதிவாளர்

ஒளிப்பதிவாளர்
தினேஷ் பி.கிருஷ்ண்
ஜிதின் சிறப்பாக செய்திருக்கிறார் லைட்டிங், கேமரா, கோணம்
எல்லாம் அருமையாக இருக்கிறது ஒவ்வொரு இடத்திலும் கேமரா கண்களுக்கு குளிர்ச்சியாகவும், பிரமாண்டமாகவும் தெரிகிறது. ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.

படத்தொகுப்பாளராக
கணேஷ் சிவா,
பணி புரிந்திருக்கிறார் கச்சிதமான படத்தொகுப்பு
எந்த இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையாமல் தேர்வு செய்த கதையை எங்கும் நகர விடாமல் சீராக படத்தை செதுக்கியிருக்கிறார்

அம்ரித் ராம் நாத்
இசையில்
பாடல்கள் இனிமையாக இருக்கிறது
உருக வைக்கிறது, நெகிழ வைக்கிறது, பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது பல இடங்களில் இசை பேசுகிறது.

141 நிமிடங்கள் திரை இடப்படும் இப்படம்
சில சமயங்களில் கண்ணீரை வரவழைக்கும்.
யோசிக்க வைக்கும்.
வாழ்க்கையை புரிய வைக்கும்.

ஆர்ட் டைரக்டர் வினோத்
இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு வகுத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் வினோத் என்றால் அது மிகையல்ல அந்த கட்டிடம், மழை நீரில் மூழ்கிக் கிடக்கும் சித்தார்த்தின் வீடு, அவரின் அலுவலகம், சரத்குமார் செல்லும் ஃபேக்டரி என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பளிச் என்று கண் முன்னால் தெரிகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.

காஸ்ட்யூம் டிசைனராக
அசோக் குமார், மற்றும் கவிதா, பணி புரிந்திருக்கிறார்கள் சிறப்பு

இந்த படத்திற்கு அருமையான இனிமையான பாடல்களை எழுதி இருப்பவர்கள்
விவேக், கார்த்திக் நேத்தா, பால் டப்பா,
ஸ்ரீ கணேஷ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சவுண்ட் டிசைனராக சுரேன் அழகிய கூத்தன் பணி புரிந்து இருக்கிறார் தெளிவான துல்லியமான ஒலி அமைப்பு,
சவுண்ட் மிக்சிங் அவரே பணிபுரிந்து இருக்கிறார் வாழ்த்துக்கள்

படத்தின் ஒப்பனையாளராக சிவா மல்லேஸ்வரராவ்,
மற்றும் வினோத் சுகுமார் பணிபுரிந்து இருக்கிறார்கள் சரத்குமாருக்கும், சித்தார்த்துக்கும், அவரது மகளுக்கும் தேவயானிக்கும் நடுத்தர மக்களின் ஒப்பனை செய்து அதேபோல வடிவமைப்பு செய்து கவரும் படி தந்திருக்கிறார்

ஆடை வடிவமைப்பு
ஆர்.கே . தன் ராஜ்
சரியான உடை தேர்வு

கலரிஸ்ட்டாக
பிரசாத் சோமசேகர்

டி.ஐ.நாக் ஸ்டியோஸ்

இந்த படத்தின் உதவி இயக்குனர்களாக
ஜெய் கணேஷ்,
விக்னேஷ் நாராயண்,
சாய்சரண்,
ராம் கிரண்,
சிவகுமார், மற்றும்
எஸ்.கணேஷ்
இந்த வெற்றி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் திரைக்கு பின்னால் ஒவ்வொரு நிமிடமும் உழைத்திருக்கும் இவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர்கள் திரு. சுரேஷ் சந்திரா அவர்கள், திரு. அப்துல் நாசர் அவர்கள் படத்தை சிறப்பாக பப்ளிசிட்டி செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று
உழைக்கும் நடுத்தர குடும்பத்தின் கனவுகளை சொல்லும் இந்த படம் மாபெரும் வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளது வாழ்த்துக்கள்🌷🙏