பறந்து போ திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ படம் வெளிவந்து வெற்றி வாகை சூடியுள்ளது

நடிகர்கள்:

சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

கதை களம்

அப்பாவின் பால்யமும் மகனின் பால்யமும் ஒன்றாகும் பயணம் அந்த பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள் மகனின் குறும்பு, பதில் சொல்ல முடியாத அப்பா, இப்படி படம் முழுக்க ஒரு வசந்த பூக்களை படம் அள்ளி தெளித்து கொண்டே இருக்கும். அந்த காட்சிகள் அவ்வளவு அருமையாக உள்ளது

பாலாஜி சக்திவேல் வரும் காட்சிகள் அவ்வளவு இதம்.

அஞ்சலி வரும் காட்சிகள் மனதை மயிலிறகால் வருடியது போன்ற ஒரு சிலிர்ப்பு. சிறு வயதில் வந்த கிரஷ், அஞ்சலியின் கணவர் குணசேகரன் கதாபாத்திரம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம் குருவி ,மைனா காதல் ,

குருவி க்காக நாற்பது ஆயிரம் ரூபாய் மைனா எடுக்கும் போது கிரேசி, நிலை அறிந்து பணம் தருவது,

பேத்திக்காக சேலை வாங்கும் பாட்டி, மண்டபத்தில் வாழும் எம்பயர், கதாபாத்திரம் என எல்லா கதாபாத்திரங்களும் பாஸிட்டிவ் நிறைந்த கதாபாத்திரங்கள்

குளோரின், கோகுல், அன்பு ,இந்த மூன்று கதாபாத்திரத்தில் உள்ள எதார்த்தம் மிகவும் ரசிக்க வைத்தது .

மிடில கிளாஸ் மக்கள் தன் குழந்தையை பார்த்துக் கொள்ள தான் போராட்டம் என்ற அந்த ஒற்றை வார்த்தையை கதையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர். வாழ்த்துக்கள் சார் .
படம் முழுக்க பாடல்கள் , எல்லாம் பாடல்களும் குறிப்பாக Sunflower. மதன் கார்க்கியின் வரிகளில், விஜய் யேசுதாஸ் பாட, சந்தோஷ் தயாநிதி இசையில்
அற்புதமான பாடல் மனதில் இடம் பிடிக்கிறது

சிவா

கோகுல் என்ற கதாபாத்திரத்தில் , இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். படம் முழுக்க அன்பு வுடன் ஓடிக்கொண்டே, தனது மனைவி உடன் போனில் பேசிக் கொண்டே, இருக்கிறார்

அன்பு மீது காட்டும் அக்கறை ரசிக்க வைக்கிறது .

சிகரெட் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு அன்பு விடம் மாட்டி கொண்டு அல்லல் படுவது , அஞ்சலி யுடன் வழிவது, என்று படம் முழுக்க அவர் ராஜாங்கம் தான்.

கிரேஸ் ஆண்டனி

குளோரின் என்ற கதாபாத்திரத்தில் இயல்பான குடும்பத்தலைவி யாக கணவனையும், மகனையும், வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

கணவனை டேய் கோகுல் என்று அழைப்பதும் சாத்தான் என்று அழைப்பது செல்ல குறும்பு இவர் சரியான தேர்வு. நடிகை ஊர்வசி யின் வாரிசு என்பதை நினைவு படுத்தும் வகையில் இவர் நடிப்பு உள்ளது.

மிதுன் ரியான்

அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பட்டய கிளப்பி இருக்கிறார்
பால்ய சினேகிதி ஜென்னாவுடன் அவர் அடிக்கும் லூட்டி,
தாத்தா பாலாஜி சக்திவேல் தலையில் கொட்டுவது,
விஜய் யேசுதாஸ் இடம் மாட்டி விடுவது,
மல மேல் நின்று கொண்டு சிவாவை அழைப்பது,என அருமையான நடிப்பு அம்சமாக பொருந்தி போகிறார்.

அஞ்சலி

அஞ்சலி இந்த படத்தில் வனிதா என்ற கதாபாத்திரத்தில் ஓரிரு காட்சிகள் வந்தாலும் சிவாவுக்கு அட்வைஸ் மழை அட்வைஸ் செய்வதும் தன் மகன் குமாரை அன்புடன் பழகு விடுவதும் தன் கணவனை சிவாவிடம் அறிமுகப்படுத்தும் காட்சியும் ஸ்கோர் செய்து விடுகிறார் மனதில் நிற்கும் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார்

அஜீ வர்கீஸ்

மலையாளத்தில் 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அஜீ வர்கீஸ்
அஞ்சலி கணவர் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக
வெள்ளந்தியாக நடித்திருக்கிறார்
நல்ல தேர்வு

விஜய் யேசுதாஸ்

ஓரிரு காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கும் படியான கதாபாத்திரம் அருமையான பாடலும் பாடி, சிறப்பாக நடனம் ஆடி இருக்கிறார். மற்றும் மைனா நடிப்பு சிறப்பு இயக்குனர் பாலாஜி சக்திவேல்

சிவாவின் அப்பாவாக வந்து கலகலப்பையும் ஒரு அப்பாவின் கரிசனத்தையும் தந்து படத்துக்கு மெருகேற்றி இருக்கிறார்.

தொழில்நுட்பக் குழு:

இயக்குனர்

எழுதி , இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராம்,
தன்னுடைய பழைய பாணியில் இருந்து விலகி கல கலப்பான கதை யை கையில் எடுத்து,
படம் முழுக்க முழுக்க எமோஷனல் கலந்த
நகைச்சுவையாக
படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்த படம்
அன்பு, எனும் ஒரு எட்டு வயது சிறுவன்
அவன் அப்பா கோகுல் ,இருவரின்
ஒரு ஜாலியான பயணம். அதில் நடக்கும் சுவராஸ்யமான சம்பவம், என்று அருமையான படத்தை கொடுத்திருக்கிறார், வாழ்த்துக்கள் சார் .
படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கிராமத்துக்கு குடிவரலாமா என்ற கேள்விக்கு ஜாதி என்ன என்று கேட்பார்கள் என்ற பதிலும்

வடநாடு போலாமா என்ற கேள்விக்கு அங்கு ஜாதியுடன் மதம் என்று கேட்பார்களே என்ற பதிலும்

வெளிநாடு போலாமா என்ற கேள்விக்கு அங்கு உன் நிறம் என்ன என்று கேட்பார்களே என்று

ஒரு உலக தத்துவத்தை அற்புதமாக சொல்லி முடிக்கிறார் இது தான் ஒரு இயக்குனரின் சமூக அக்கறை!
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்

ஒளிப்பதிவு

என்.கே. ஏகாம்பரம்,
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்
சிறுவன் உடன் மலை, கிராமம், சுற்றி சுற்றி படமாக்கி இருக்கிறார் கேமிரா மூலம் அருமையாக பதிவு செய்திருக்கிறார்

படத்தொகுப்பு

மதி வி.எஸ்.,
படத்தொகுப்பாளராக பணியாற்றி யுள்ளார்
கச்சிதமான படத்தொகுப்பு

இசை அமைப்பாளர்

சந்தோஷ் தயாநிதி,
இசையில் பாடல்கள் அனைத்தும் செம
பின்னனி இசை அருமையாக இருக்கிறது

: மதன் கார்க்கி, யின்
பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது

தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,
நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,
ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ராஜசேகரன்,
விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,
ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,
ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,
விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,
தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,
உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு: திரு.சுரேஷ் சந்திரா – திரு.அப்துல் நாசர்
அவர்கள்

மொத்தத்தில் “பறந்து போ”திரை படம் வெற்றி படமாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 💐