விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
கதை களம்
ஈழத்தில் இருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தவர்களை, ராஜீவ் காந்தி குண்டு வழக்கின் போது விசாரணை கைதிகள் என்ற பெயரில் கைது செய்து துன்புறுத்தி அவர்களை வேலூர் சிறையில் தினம் தினம் சித்திரவதை செய்து மனிதநேயம் இல்லாமல் நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து 43 பேர் தப்பிப்பதற்காக போராடும் போராட்டம் தான் கதைக்களம்
இதில் நாயகன் மாறனும், நாயகி செல்வியும், திருமணம் ஆன ஆறு மாதத்தில் பிரிந்து விடுகிறார்கள் செல்வி கர்ப்பிணியாக இருக்கும் பொழுது மாறன் கைது செய்யப்படுகிறார் அவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை மிக உருக்கமாக சொல்கிறது இந்த படம்.
விசாரணை கைதிகள் குற்றவாளிகளாக பார்க்கும் நிலை மாறவேண்டும் என்ற நல்ல சிந்தனையில் திரில்லர் படமாக வந்திருக்கிறது இந்த படம்.
வேலூரில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை களம் என்றாலும் கொஞ்சம் கற்பனை கலந்து உள்ளது.
ஈழத்தமிழர்களை நாம் தொப்புள் கொடி உறவு என்று மேடையில் பேசுகிறோம் எழுதுகிறோம் ஆனால் நடப்பது என்ன ? நம்மை தேடி வருபவர்களை அகதிகள் என்கிறோம்
அவர்களுக்கு குடியுரிமையோ, அல்லது தமிழகத்தில் வாழ்வதற்கான எந்த முகாந்திரத்தில் நாம் ஏற்படுத்தி தந்திருக்கிறோமா? என்ற கேள்வியை முன் வைக்கிறது இந்த படம் .
1991முதல்1995, வரை சிறையில் நடந்த வேதனை வலி , அடி, கை உடைந்து, தலை கீழாக தொங்க விட்டு, என சித்ரவதை அனுபவிப்பது கொடுமை நெஞ்சம் பதற வைக்கும்
மகேஸ்வரி அம்மா ஈழத்தமிழர் பாஷை கற்றுக் கொடுத்து இருக்கிறார் டீச்சர் வேடத்தில் நடித்திருக்கிறார்
43பேர் தப்பித்து போகும் போதும், 153அடி தோண்டும் தப்பித்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கும் காட்சிகள் பதற வைக்கிறது.
வில்லன் மலையாள போலீஸாக காட்டப்பட்டிருக்கிறது சரியான கோணம்
பாதிக்கப்பட்ட ஈழத்து தமிழர்களை கலந்து எடுத்து உள்ளார் இயக்குனர். பத்து முகாம்களில் சென்று ஆலோசனை செய்து எடுத்து இருக்கிறார்கள் அவர்கள் வேதனை முழுக்க முழுக்க தெரிகிறது .
சசிகுமார்
மாறன் என்ற கதா பத்திரத்தில், அருமையான நடித்திருக்கிறார். ஈழத் தமிழராக , விசாரணை கைதியாக சிறையில் ஒவ்வொரு நாளும் சித்திரவதை செய்யப்பட்டு எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்றும் தன் மனைவி குழந்தையின் முகத்தை பார்த்து விட வேண்டும் என்று துடிக்கும் துடிப்பும் சிறையில் அனுபவிக்கும் சித்தரவதை
கண்களில் கண்ணீர் வர வைக்கிறது சசிகுமார் நடிப்பு பட்டதை எட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது
ஈழத்தில் நடக்கும் காட்சியில் போலீஸ அதிகாரி ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதால் வெகுண்டு எழுந்து கையை வெட்டும் பொழுது தமிழனின் உணர்வு ரத்தம் தெரிக்கிறது சசிகுமாருக்கு தொடர்ந்து வெற்றி படங்களாக வந்து கொண்டிருக்கிறது அந்த வரிசையில் இதுவும் ஒரு மிகச்சிறந்த வெற்றி படம் வெளிநாடு வாழும் தமிழர்கள் சசிகுமாரை சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுவார்கள் அவர் நடிப்பு அருமை
லிஜா மோல்
செல்வி என்ற கதாபாத்திரத்தில் ஜெய் பீம் படத்தில் வருவது போல
இதில் நடித்திருக்கிறார் படம் முழுக்க முழுக்க கணவனை தேடி தேடி அலையும் ஒரு பெண்ணாக மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுத்து அலைந்து ஓய்ந்து எப்படியாவது கணவர் சசிகுமாரை பார்த்து விடமாட்டோமா என்று பரிதாபத்தில் வாழும் பெண்ணாக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் படம் முழுக்க அவர் குழந்தையுடன் சசிகுமாருக்கு காத்திருக்கும் அந்த காட்சிகள் கண்களில் நீர் வரவழைக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு சோதனை ஏற்படக்கூடாது என்று மனம் பரிதவிக்கும் அற்புதமான நடிப்பு செல்வியாக வாழ்ந்து இருக்கிறார்
ரமேஷ் கண்ணா
சோமு என்ற சிபிஐ ஆஃபீஸராக தமிழர்களுக்கு உதவும் நல்ல மனிதநேயம் உள்ள அதிகாரியாக, அதிகாரியாக வந்து போகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
மு.ராமசாமி
திருச்சியில் இருந்து அகதிகள் முகாமில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்து வரப்பட்ட ஈழத் தமிழராக நடித்திருக்கிறார் அவருடைய பரிதவிப்பு எப்படியாவது மனுக்கள் கொடுத்தாவது வெளியே வந்து விடமாட்டோமோ என்று தவிக்கும் தவிப்பு, பொருட்களெல்லாம் அடித்து உதைக்கும் போது அவர் போஸ்ட் ஆபீஸ் ஃபாக்ஸ் உடைக்கும் பொழுதும் ஆக்ரோஷம் தெரிகிறது அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் ஐயா மு. ராமசாமி
மற்ற நடிகர்கள்
பாய்ஸ் மணிகண்டன் வாய் பேச முடியாதவராக, தன் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை ஓவியம் வரைந்து காட்டும் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்
மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி ஈழத்தமிழராக சசிகுமார் உடன் படம் முழுக்க உறுதுணையாக வந்து போகிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது .
அகதிகள் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் அகதி முகாமில் வெங்கட் போஸ் நடித்தி ருக்கிறார் காவல்துறை அதிகாரியாக அவரிடம் மனிதநேயம் இந்த படத்தில் கொஞ்சம் குறைவு அந்த கதாபாத்திரம் அப்படி.
மற்றும் வேலூர் சிறையில் இருக்கும் காவல்துறை அதிகாரியாக சுகதேவ் நாயர் சுதன் என்ற கதாபாத்திரத்தில் வெளுத்து, வாங்கி இருக்கிறார் தமிழர்கள் மீது அவ்வளவு வெறுப்புணர்ச்சி கோபம், வன்மம், 10 வருடத்துக்காவது இவர்களை சிறையில் வைத்து தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தி இருக்கிறார்.
மற்றும் இப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட துணை நடிகர்கள், நடிகைகள், அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் சத்யசிவா,
கழுகு என்ற ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருந்தார் அதன் பிறகு சசிகுமாரும் இயக்குனர் சேர்ந்து ஒரு படம் கொடுத்தார்கள் இந்த படத்தின் மூலம் ஒரு அற்புதமான ஈழத் தமிழர்களின் வலியையும், வேதனையும் சொல்லி இருக்கிறார் நிச்சயம் பாராட்ட வேண்டிய படைப்பு இயக்குனரின் கைவண்ணம் நன்றாக தெரிகிறது கடுமையாக உழைத்திருக்கிறார்கள் நிறைய ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள் அகதிகள் முகாம்களில் சென்று செய்திகளை சேகரித்திருக்கிறார் ஈழத்தமிழர்களுடன் சென்று அவர்களின் வலியை, வேதனையும் கேட்டு படமாக்கி இருக்கிறார் வாழ்த்துக்கள் இயக்குனருக்கு,
ஒளிப்பதிவாளர் என். எஸ் .உதயகுமார்
இவரின் கைவண்ணத்தில் ஒளிப்பதிவு படம் முழுக்க மிரட்டலாக இருக்கிறது
இரவு நேர காட்சிகளை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்
வேலூர் சிறையில் நடக்கும் அந்த விசாரணை கைதிகள் நடத்தப்படும் கொடூரத்தை திகிலாக படமாக்கி இருக்கிறார்
ஈ .வி .பி.யில் செட் போட்டு பள்ளம் தோண்டி ,சசிகுமார் முட்டி போட்டு போகும் காட்சி சூப்பர்
எப்படி கேமிரா, வைத்து லைட்டிங், வைத்தார் என்று யோசிக்க வைக்கிறது ,
வெல்டன் உதயகுமார் சார்
படத்தொகுப்பாளர் என். பி.ஸ்ரீகாந்த்
இவரின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது சீராக படம் செல்வதற்கு இவர் படத்தொகுப்பு தான் காரணம் சூப்பர் படத்தொகுப்பு
ஆர்ட் டைரக்டர்
உதயகுமார்
கை வண்ணம் சிறப்பு
ஜெயில் செட்,
வண்டலூர், எக்மோர்,
செட் என்று கலக்கியிருக்கிறார்.
படம் ஆரம்பம் முதல் மினியேச்சர் செய்து இருக்கிறார்
அகதிகள் முகாமில் லைவ் விஷ்வல் சூப்பர்
போலீஸ் ஸ்டேஷனில்
ஜெயில் காட்சிகள்,
என அரங்கம் அமைத்து இருக்கிறார் வெல்டன்.
தயாரிப்பாளர்
பாண்டியன் பரசுராமன் ஒவ்வொரு துறையிலும் கவனம்
செலுத்தி படத்தை ரசிகன் பார்வையில் எடுத்துக் கொடுத்து இருக்கிறார்
தயாரிப்பு நிர்வாகியாக இருந்து தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார்
சினிமா பதினைந்து வருடங்கள் பணி புரிந்திருக்கிறார் இப்போது ஒரு நல்ல படம் மூலம் தயாரிப்பாளராக இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்
இசை ஜிப்ரான் பின்னணி இசை சூப்பர் மிரட்டலாக இருந்தது
வைக்கம் விஜயலட்சுமிபாடும் பாடல் சூப்பர்
பாடல்கள்
அருண் பாரதி ,
மோகன் ராஜா
தாலாட்டு பாட்டுஅருமை
தப்பி வந்த தங்க நிலவே, பாடல் சூப்பர்
கவிஞர் சினேகன்
எழுதிய காதல் பாடல் ரசிக்க வைக்கிறது.மற்றும்
ஐந்து பாடல்களும் ரசிக்க வைக்கிறது.
மக்கள் தொடர்பு – AIM சதீஷ், சிவா
மற்றும் ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர் ,
டி .ஐ ,செய்தவர்கள் கலர் கரெக்ஷன், செய்தவர்கள்
இந்த படத்திற்காக உழைத்த அத்துணை கலைஞர்களுக்கும் கிளாசிக் சினிமா வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறது இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மறந்து போன ஒரு சம்பவம் அதை நினைவூட்டி அந்த மக்களின் வலியையும், வேதனையும், மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தியதில் இயக்குனரின் பங்கு குறிப்பிடத்தக்கது .
இப்படிப்பட்ட நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் நாயகன் சசிகுமார் 🌷அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
