இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ள படம், ‘மாயக்கூத்து’. டெல்லி கணேஷ், மு.ராமசாமி, சாய் தீனா, நாகராஜன், பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா என பலர் நடித்துள்ள இப்படம் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை விரும்பக்கூடிய அத்தனை பேரும் வரவேற்க வேண்டிய நல்ல படைப்பு
பல வருடங்களுக்கு முன்னால்” அவள் அப்படித்தான் “என்ற ஒரு படத்தை இயக்குனர் ருத்ரையா கொடுத்திருந்தார் அந்த படம் இன்றும் பேசப்படுகிறது அதைப்போல இந்த மாயக்கூத்து திரைப்படமும் இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் காலம் கடந்து பேசப்படும் அதுதான் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி .
பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்து நல்ல கதை இல்லாமல் பணத்தை வீண் செலவு செய்யும் தமிழ் சினிமாவில் 25 லட்ச ரூபாயில் ஒரு நல்ல படத்தை வித்தியாசமான கதையை தந்திருக்கிறது இந்த படம்.
இந்தப் படம் ஏழை மாணவி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்றால் அதற்கு தடையாக இருக்கும் நீட்பற்றி பேசுகிறது.
ஒரு ஏழை பெண்மணி பணக்கார வீட்டில் வேலை செய்யப் போனால் அவள் மீது எப்படி அபாண்டமான குற்றம் சுமத்தப்படுகிறது என்பதை சொல்கிறது இந்த படம்.
எழுத்தாளர் தான் ஒரு கடவுள் என்று கர்வத்தோடு இருக்கும் அவருக்கு பாத்திரப்படைப்புகள் வெளியே வந்தால் எப்படி ஒரு பாடம் புகட்டும் என்பதை சொல்கிறது இந்த படம்.
49 ஆவது கொலை செய்துவிட்டு அரை சதம் அடிக்க கொலையை செய்ய துடிக்கும் தனபால் என்ற ஒரு ரவுடியை பற்றி சொல்கிறது இந்த கதை.
பல அரசியலை பேசி இருக்கிறது இந்த படம் குறிப்பிட்ட சிலர் வகுத்து வைத்த சட்டத்தின் படி தான் இங்கு வாழ வேண்டுமா என்று கேட்கிறது இந்த படம்.
இது நியாயம் எது தர்மம் என்று யார் வகுத்தது எப்படி வாழ்வது எப்படி வாழ கூடாது என்று யார் வகுத்தது சட்டம் என்று கேட்கத் தோன்றுகிறது இந்த படம் .
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்
கொண்டாட பட வேண்டிய படம்
நடிகர் & நடிகைகள்
நாகராஜன் கண்ணன் “
வாசன் என்ற எழுத்தாளராக வந்து அவர் படைக்கும் படைப்பில் ஏழைகளுக்கு பாதகமான தீர்ப்பை வழங்குகிறார். அவர்கள் உயிரோடு வந்த அவரை எப்படி சித்தரவதை செய்தார்கள்
என்று நடிப்பின் மூலம் கதை ஆசிரியராகவும் அருமையாக நடித்து எழுதியிருக்கிறார்
மெண்டல் டார்ச்சரில் அவர் தவிக்கும் தவிப்பு கிளைமாக்ஸ்சில் அவர் கதையை மாற்றி அமைக்கும் பணி எல்லாமே ரசிக்க வைக்கிறது.
ஐஸ்வர்யா
செல்வி என்ற கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் தன் மீது திருட்டு குற்றம் சுமத்தும் அந்த பணக்கார வீட்டில் போராடும் பொழுதும் கணவருடன் அந்நியோன்யம் காட்டும் பொழுதும் தன்னை படைத்த அந்த எழுத்தாளர் இடம் வந்து நியாயம் கேட்கும் பொழுதும் ஐஸ்வர்யா நடிப்பு சிறப்பாக இருக்கிறது
ரேகா
அசோக்கின் மனைவி
ராதிகாவாக ரேகா வரும் அந்த பணக்கார பெண்ணின் பேச்சில் முகத்தில் ஏழைகள் மீது அலட்சியம் திமிர் தனம் தெரிகிறது சிறப்பாக நடித்திருக்கிறார்
சாய் தீனா
தனபால் என்ற கதாபாத்திரத்தில் வரும் சாய் தீனா படம் முழுக்க மிரட்டல் ஆக நடித்திருக்கிறார் யார் அந்த கருப்பு ஆடு என்று கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் மனம் திருந்துவதாக காட்டி இருப்பது சிறப்பு.
மு ராமசாமி
வரதராசன் என்ற கதாபாத்திரத்தில்
ஒரு படைப்பாளனுக்கு இவ்வளவு கர்வம் இருக்கக் கூடாது என்று நியாயத்தை போதிக்கும் பீஷ்மராக வந்து போகிறார்
அவர் வரும் காட்சிகள் சிறப்பாக நடித்திருக்கிறார்
டெல்லி கணேஷ் பதிப்பகம் நடத்தும் உரிமையாளராக வந்து இன்று புத்தகங்கள் யார் படிக்கிறார்கள் என்று வெந்து ததும்பும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
மற்றும் பிரகதீஸ்வரன்,
முருகன் ,காயத்ரி ,
என எல்லோரும் தங்கள் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
: இயக்குனர்
ஏ.ஆர்.
ராகவேந்திரா,
அறைத்த மசாலாவை
அரைக்காமல் ஒரு புதுமையான படத்தை கொடுத்ததற்காக பாராட்டலாம்
பல காட்சிகள் ரசிக்க வைக்கிறது .
இயக்கம் சீராக இருக்கிறது.
குறைந்த பட்ஜெட் டில்
தரமான படம் கொடுப்பது எப்படி என்று இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
படத்தில் ஒரு 15 நிமிடம் நம்மால் ஒன்றி போக முடியவில்லை அதன் பிறகு கதைக்களம் சூடு பிடிக்கிறது. ஜிவ்வென்று பறக்கிறது.
திரைக்கதை அருமையாக இருக்கிறது. படத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது ஒன்றி போய் விடுகிறோம் அதில் இருந்து மீண்டு வர இரண்டு மணி நேரம் ஆகிறது அவ்வளவு அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் .
எதிர்காலத்தில் இவரிடமிருந்து நிறைய தரமான படங்களை எதிர்பார்க்கலாம் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🌷
Producers: Rahul Deva & Prasad Ramachandran
Co-Producers: Gopichand Vagvala, Sonia Sabharwal & Arjun Sabharwal
Production Houses: Rahul Movie Makers & Abhimanyu Creations
Executive Producer: Rahul Deva
Creative Producer: Sundar Ram Krishnan
கதை திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்
ஏ.ஆர் ராகவேந்திரா மற்றும் எம். ஸ்ரீனிவாசன்
படத்திற்கு வசனம் எழுது சிறப்பாக நடித்திருக்கிறார்
நாகராஜன் கண்ணன்
சிறப்பான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.
சுந்தர்ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு அருமை பல இடங்களில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
நாகூர் ராமச்சந்திரன் , படத்தொகுப்பு தான் படத்திற்கு மிகப்பெரிய பலம் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் வெளியே வந்து மிரட்டுவது ,பேசுவது மீண்டும் கதைக்குள்ளே செல்வது என படத்தொகுப்பாளர் அற்புதமாக பணிபுரிந்து இருக்கிறார்.
அஞ்சனா ராஜகோபால், இசையில் 5 பாடல்கள் ஐந்தும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை உருக வைக்கிறது.
பாடல்களை நாகராஜன் கண்ணன், மற்றும் கபீர் வாசுகி ,
எழுதியிருக்கிறார்கள்
அனிமேஷன்
அதீதி ஹரிகுமார்
கே.பி .நந்துவின்
ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது
அந்த புத்தக க் கடை, மற்றும் வீடு ,எல்லா இடங்களும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்.
Sound Designer: Duraiseenu
Stunts: SR. Harimurugan
5.1 Final Mix: Vadivel
Dubbing Studio: Granta Sound Company
Dubbing Engineer: Kashyap Rammohan
DI: Shade 69 Studios (Technical Head- Naveen Sabapathy)
Colorist: Raju Selvam
Conformist: Lakshmanan Dharumar
Production Manager: Raja Pakkirisamy
Trailer Editor: Anil Krishnan
Teaser Editor: S. Vinoth Kumar
என அனைவரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது. திரைக்குப் பின்னாலும் அனைவரும் திறம்பட உழைத்திருக்கிறார்.
மக்கள் தொடர்பாளர்
ரேகா அவர்கள்.
மொத்தத்தில் இந்த படம் ஒரு குறிஞ்சி மலர்,
தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான வடிவமைப்பு,
நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் 🌷
