டிரெண்டிங் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், வெளிவந்துள்ள வித்தியாசமான படம் “டிரெண்டிங்”

இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது “டிரெண்டிங்”.நிச்சயம்உங்களை யோசிக்க வைக்கும் ,சோசியல் மீடியாக்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இந்த படம் ஒரு பாடமாக இருக்கும்

கதை களம்

நாயகன் கலையரசனும், நாயகி பிரிலாயாவும், அழகான ஒரு மித்த தம்பதியினர் இவர்கள் அர்ஜுன் மீரா என்ற youtube சேனல் நடத்தி வருகிறார்கள்

இதில் சிறந்த கப்பிலாக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வாங்குகிறார்கள். youtube இல் நிறைய பணம் வருவதால் பெரிய வீடு ,ஒன்று விலைக்கு வாங்குகிறார்கள். கார் வாங்குகிறார்கள். ஆடம்பரமாக வாழ்கிறார்கள் திடீரென இவர்களது அர்ஜுன் மீரா, யூடியூப் சேனல் டெலிட் செய்யப்படுகிறது. வருமானம் போகிறது இதற்கு பிறகு என்ன செய்வது என்று இருவரும் தவிக்கிறார்கள்.

கடன் கொடுத்த பெசன்ட் ரவி வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார். இப்பொழுது இவர்களுக்கு

ஒரு வலைதளத்திலிருந்து ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. அதில் நான்கு நிலை இருக்கும். அதில் வென்று விட்டால் இரண்டு கோடி கிடைக்கும் என்று இவர்களுக்கு ஆசை காட்டி கணவன் மனைவி இருவரும் அந்த கேமை விளையாடுகிறார்கள்
அதில் இறங்கிய பிறகு தான் தெரிகிறது எவ்வளவு மோசமான உலகத்துக்குள் அவர்கள் பயணிக்கிறார்கள் என்று அந்த பயணத்தில் இருந்து மீண்டார்களா?
இரண்டு கோடி ரூபாயை வென்றார்களா?

அவர்கள் வாங்கிய கடன்காரர்களிடம் இருந்து வெளியே வந்தார்களா?

என்பதை சொல்லும் படம் “ட்ரெண்டிங்” இன்றைய ட்ரெண்டிங் கேற்ப சொல்லி இருக்கிறது வித்தியாசமான படமாக வந்திருக்கிறது

படம் முழுக்க, பரபரப்பான திரைக்கதை, அடுத்து என்ன நடக்கும்!
என்ற ஆர்வத்தை உண்டாக்குகிறது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

நாயகன் கலையரசன்

அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில், யூடியூபராக அம்சமாக பொருந்தி போகிறார். சப்ஸ்கிரைபர் வரவில்லை என்று தவிப்பதும் வந்த பின்பு மகிழ்ச்சி அடைவது மனைவியை நேசிப்பது பின்னர் சந்தேகப்படுவதுபிறகு கேம்முக்குள் சிக்கி வருத்தப்படுவது, என்று நன்றாக நடித்திருக்கிறார் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் அம்சமாக youtube ஆக தெரிகிறார். நாயகி பிரிலாயா

இவர் சேலத்தைச் சேர்ந்த தமிழ் பெண் அழகான டயலாக் டெலிவரியுடன், அருமையான நடிப்பின் மூலம் நன்றாக நடித்து இருக்கிறார்.
இவருடைய கடந்த காலத்தில்
வருண் என்ற காதலனுடன் செய்த தவறு பின்னாளில்
விபரீதமாக முடிகிறது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த காட்சியின் மூலம் வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இவருக்கு படம் முழுக்க எமோஷனல் காட்சிகள் அதிகம் அதில் திறமையாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார்.

பிரேம் குமார்

அருள் என்ற கதாபாத்திரத்தில் கலையரசன் நண்பனாக வந்து கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைத்து விடுகிறார் இவர் மகள் திவ்யாவுக்காக 15 லட்சம் கேட்டு கலையரசனின்வீட்டுக்கு வரும் காட்சிகளில் செம, பரபரப்பு நாயகி மீரா, இவருடன் பேசும் கிளைமாக்ஸ் காட்சி அடுத்து என்ன? நடக்கும் என்று ஆலலைஉண்டாக்கி இருக்கிறது பிரேம்குமார் நடிப்பு சூப்பர்!

மற்றும் பெசண்ட் ரவி பைனான்ஸியராக நடித்துள்ளார். வாழ்க வளமுடன் என்று கொடுத்த பணத்தை வசூலிக்கும் அடாவடி பைனான்சியராக மிரட்டி இருக்கிறார்.

இயக்குனர்

இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். நாளைய இயக்குனர் என்ற குறும்படங்களை இயக்கி இப்பொழுது இயக்குனராக முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார்.

வித்தியாசமான சிந்தனை, வியக்க வைக்கும் கற்பனை, இந்த கேம் விளையாட்டில் கணவன், மனைவி இருவரும் சிக்கிக் கொள்ள அந்த கேம் நடத்துபவர் வாய்ஸ் நன்றாக இருக்கிறது. அவர் நடிப்பு முகம் காட்டாமல் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சி உருக வைத்து விடுகிறது சரியான முடிவு இயக்குனர் பெரிய இயக்குனராக வலம் வருவார் என்பது உறுதி.

இப்படம் ஒரு வ்லாகிங் செய்யும் தம்பதிகளை பற்றிய கதையாக அமைத்துள்ளார் இயக்குனர் வெல்டன்.

இசையமைப்பாளர்

சாம் சி. எஸ்.இசை மிரட்டல் படம் முழுக்க பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்

தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வித்தியாசமான ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்காக.

ஒளிப்பதிவாளர்

பிரவீண் பாலு கைவண்ணத்தில், பளிச் என்று இருக்கிறது .
ஒரே வீடு, நான்கு கதாபாத்திரங்கள், ஒளிப்பதிவாளர் லைட்டிங், கோணம், எல்லாமே படத்திற்கு வெற்றியாக அமைந்திருக்கிறது.

அருண்குமார் ஆர்ட் டைரக்டராக, பணிபுரிந்து இருக்கிறார் கலையரசன் வீடு, அந்த கேம் நடத்துபவர் அரங்கம், மற்றும் எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது.

நாகூரான் ராமச்சந்திரன், படத்துக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். கச்சிதமாக இருக்கிறது. பரபரப்பான விறுவிறுப்பான திரைப்படத்திற்கு படத்தொகுப்பு உதவி செய்திருக்கிறது. இடைவேளைக்கு பிறகு சில எமோஷன் காட்சிகளில் கத்திரி வைத்து இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பாடல்கள் கார்த்திக் நேத்தா, கதைகேற்ப எழுதி இருக்கிறார். ரசிக்க வைக்கிறது.
ப்ரியா கலையரசன்
காஸ்ட்யூம் டிசைனராக முதன் முதலாக பணிபுரிந்து இருக்கிறார் எல்லோருக்கும் ஆடை வடிவமைப்பு கச்சிதமாக இருக்கிறது.

மான்ஸ்டர் முகேஷ்
சண்டைக் காட்சி அமைத்து இருக்கிறார்.

Co-Directors: Madura, Vijayakumar
Associate Director: Dineshrajan Muthukumaran
VFX: Siva (HocusPocus)
DI: Raghavan (Lights On Media)
Stills: Raja
Publicity Designer: Yellow Tooth
Vivek Amirthalingam
Trailer editor: Mahesh K Subramaniyam

மக்கள் தொடர்பாளர்கள் ,
சதீஷ் & சிவா
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்🙏

மொத்தத்தில் இந்த “ட்ரெண்டிங் “வைரல் நியூஸ் மட்டுமல்ல உலகம் முழுதும் இன்று சோசியல் மீடியாக்களில் சப்கிரைபர், மற்றும் வருமானத்திற்காக
தேவையற்ற வீடியோக்களை அப்லோட், செய்து சமூக கெடுதலை உண்டாக்கும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் படமாக
வந்திருக்கிறது .
இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🙏🌷