“சதுரங்கப் பலகையில் காய்களை நகர்த்துவது மகன்நந்தன் என்றால், வாழ்க்கைப் பலகையில் அவனுக்காக ஒவ்வொரு காயையும் எதிர்த்து நகரும் ‘கிராண்ட் மாஸ்டர்’ அந்தத் தாய்!” ♟️❤️
கதைக்களம்:
ஒரு தூய்மைப் பணியாளராக வாழ்வாதாரத்திற்காகப் போராடும் தாய் (அபர்நிதி)மற்றும் அவரது மகன் (அஸ்வின் ) அவனின் செஸ் கனவு.
வறுமை, சமூகத் தடைகள் என பல பிரச்சினைகளுக்கு நடுவிலும், தனது மகனை செஸ் விளையாட்டில் சாதிக்க வைத்து ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக்க வேண்டும் என்பதே அந்தத் தாயின் கனவு.
அந்த கனவுகளுக்கு பின்னணியில் ஒரு திண்டுக்கல் பின்னணி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
அந்தக் கனவை நிறைவேற்ற அவர் எதிர்கொள்ளும் போராட்டம்தான் படத்தின் முக்கியக் களம். திண்டுக்கல் மலைச்சாமி, சென்னையில் நாராயணன், போன்றவர்களை சாதியாலும், ஆதிக்க வெறியாலும், எப்படி சந்திக்கிறார்? எப்படி ஜெயிக்கிறார்? என்பதையும், அதற்கு புரோட்டா மாஸ்டர் ரஹீமிடம் பயிற்சி எடுப்பதும், தன் கணவனை பறிகொடுப்பதும், வளர்ப்பு தாயான மலர், உதவியோடு எப்படி வெற்றி கொண்டார்!! என்பதுதான் இந்த படத்தின் முக்கிய கதைக்களம்.
⭐ படத்தின் தனிச்சிறப்பு
வழக்கமான ஹீரோ–ஹீரோயின் மையமான கமர்ஷியல் கதையை விட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம், ஒரு தாயின் தியாகம் மற்றும் ஒரு குழந்தையின் கனவு ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, செஸ் விளையாட்டை வெறும் விளையாட்டாக இல்லாமல், அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாதையாக படம் பயன்படுத்துவது சுவாரஸ்யமான அம்சம்.
🔥வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஒரு தூய்மைப் பணியாளர் (தாய்),
வறுமை மற்றும் சமூகத் தடைகளைக் கடந்து, தனது மகனைச் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வைத்து ஒரு ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக்குவது படத்தில் சிறப்பு சதுரங்க விளையாட்டோடு சாதி அரசியல் மற்றும் கீழ் சாதியினர் வாழவே கூடாது!! என்று நினைக்கும் ஆதிக்க வெறியாலும், எப்படி நசுக்க படுகிறார்கள். என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இந்த படம் இன்றைய இளைஞர்கள் களுக்கு பெரிய மோடிவேஷனாக இருக்கும்.
🔥அபர்நிதி ,
வெள்ளை அம்மா கதாபாத்திரத்தில் படத்தின் இதயமாக, தூய்மைப் பணியாளராக வாழும் ஏழைத் தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அபர்ணதியின் தோற்றத்திலும் நடிப்பிலும் ஒரு வசதியற்ற தாயின் யதார்த்தம் பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பாக நடித்திருக்கிறார். மகனின் திறமையை நம்பி, அவனுடைய கனவுக்கு தடையாக இருக்கும் வறுமை மற்றும் சமூகச் சூழலை எதிர்கொள்ளும் அவரது கதாபாத்திரம் இன்றைய சமூகத்தின் விளிம்புநிலை பெண் கள் அவர்கள் வறுமை, வாழ்வாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு நடுவிலும், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து Grand Master ஆக வேண்டும் என்ற கனவுக்காக அவர் போராடுகிறார்.
போராடும் தாயாக அபர்ணதி நடித்திருக்கும் தி கிராண்ட் மாஸ்டர் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கிறது.
மகனின் திறமையை நம்பி, அவனை உயர்த்துவதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளே கதையின் உணர்வுப்பூர்வமான பகுதியாக அமைகின்றன.
ஒருபுறம் வாழ்க்கையின் அன்றாடப் போராட்டம்… மறுபுறம் மகனின் கனவை நனவாக்க வேண்டும் என்ற பிடிவாதம்… இந்த இரண்டுக்கும் நடுவில் நிற்கும் தாயின் மனநிலையை அபர்ணதி தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிச்சயம் விருது கிடைக்கும்.
☘️சேத்து மான் படத்தில் அசத்திய அஸ்வின், இந்த படத்தில் முக்கியமான ரோலில் அற்புதமாக நடித்திருக்கிறார்☘️சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டு மீது பெரும் பித்துடன் இருக்கிறார் நந்தன்.செஸ் மட்டுமே நினைப்பது என உடலிலும் உள்ளத்திலும் சாம்பியன் என்கிற வேட்கை மட்டுமே நந்தனுக்குள் இருக்கிறது. அதை அறியும் அவனது தாய் பயிற்சி கொடுத்து அணிக்குள் கொண்டு வருகிறார். .
ஒருபக்கம், சுரேஷ் மேனன் பகை ,ஒரு பக்கம் சாதிபகை, இப்படி தவிக்கும் நந்தன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் !!என்பது குறிப்பிடத்தக்கது .
அஸ்வின் கையில் செஸ் காய், முகத்தில் நம்பிக்கை; தாயின் முகத்தில் கவலையும் வலியும் — இரண்டுக்கும் நடுவில் ஒரு பெரிய கனவு.
காட்டுகிறார். வாழ்த்துக்கள் அஸ்வின்.
☘️ லிங்கேஷ், ஒண்டி
என்ற கதாபாத்திரத்தை தூய்மை பணியாளராக திண்டுக்கல்லில் நடக்கும் ஃபிளாஷ் பேக் காட்சியில், தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதிக்க வெறியர்களால் துன்புறுத்தப்பட்டு சுரேஷ் மேனன்
கையால் உயிர் இழக்கும் காட்சிகள் மனதை தொடுகிறது.
☘️சுரேஷ் மேனன் நடிப்பு நன்றாக இருக்கிறது. வில்ல தனத்தில் மிரட்டுகிறார். ஆதிக்க வெறியால் துப்புரவு பணியாளர் மகன் எப்படி தனக்கு சரிசமமாக வரலாம் என்று அவர் நந்தனை நசுக்கப்பார்க்கும். அந்த பகை உணர்ச்சி, அவர் நடிப்பில் பக்குவமாக இருக்கிறது.
இயக்குனர் அருமையாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழரசி, மலர் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .
🔥.இயக்குநர்: முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் கனவுகளை மையப்படுத்தியே படத்தை உருவாக்கியிருக்கிறார்.
கிராமப்புறம், நகர்ப்புறம், எங்கேயும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை இல்லை. என்பதை அற்புதமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் முத்து ,முத்தாக எழுதி இருக்கிறார்.
நந்தன் படிக்கும் பள்ளியில் ஆசிரியர், நந்தனை தீண்டத்தகாதவர் என்று பார்ப்பதும், அங்குள்ள ஒரு காவல்துறை அதிகாரி நந்தனுக்கு உதவி செய்வதும் ,ஜீவன் உள்ள காட்சிகள்.
அதேபோல திண்டுக்கல்லில் மலைச்சாமி வெள்ளையம்மாளுக்கு எதிராக, இருப்பது .அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு வெள்ளையம்மாவுக்கு ஆதரவாக இருப்பது பாராட்டத்தக்க காட்சிகள்.
மலைச்சாமி சமூகத்தைச் சேர்ந்த, கோடங்கி வெள்ளையம்மாள் ஐ, ஊக்குவிக்க ரஹீம் பாய் உற்சாகப்படுத்த, வெள்ளையம்மாள் ஆடுகளப் போட்டியில் இருந்து , செஸ் விளையாட்டில் அப்கிரேட் ஆவது திறமையாளர்களை யாராலும் கட்டுப்பட முடியாது என்பதை எடுத்துரைக்கும் காட்சிகள்.
நந்தன்’ கிரான்ட் மாஸ்டராக ,தாய் வெள்ளையம்மாள் எடுக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டிய அற்புதமான காட்சிகள். இயக்குனர் பல காட்சிகளில் இந்த படத்தில் உயர்ந்த சிந்தனையை மேலோங்கி எழுப்பி இருக்கிறார் பாராட்டுக்கள் .
குப்பைமேட்டில் பிறந்ததால் அவன் உடலில் துர்நாற்றம் வீசுகிறது என்று விரட்டப்படுவதும், செஸ் போர்டில், என் பெயர் இல்லை என்று சொன்னதும் பெயரே இல்லாமல் நிறைய பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர் என்று சொல்வதும், இயக்குனரின் வித்தியாசமான சிந்தனை ஒரு மோட்டிவேஷன் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் .
ஓடுகிறவனுக்கு பல வழிகள் துரத்துகிறவனுக்கு ஒரே வழி என்ற வசனம். மற்றும் செஸ் விளையாடும் போது எதிராளியை எப்படி நிலை குலைய வைப்பது என்று அபர்நிதி தன் மகனுக்கு பாடம் எடுப்பதும், காவல் நிலையத்தில் அபர்நிதி துப்பாக்கி தூக்குவதும் விறுவிறுப்பாக இருக்கிறது.
☘️அர்ஜுன் ரவி, யின்
ஒளிப்பதிவு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில்
மற்றும் சென்னை, மற்றும் செஸ் விளையாட்டு அரங்கம் என பிரமாத படுத்தி இருக்கிறது.
☘️தினேஷ் ஆண்டனியின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சாமானிய மக்களுக்கு உயிரூட்டும் விதமாக இசை இருக்கிறது
☘️ரஜித்தின் படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வெற்றிக்கு படத்தொகுப்பு மிகவும் உதவி இருக்கிறது .
☘️ராகவன் சஞ்சீவியின் ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது.
ஏழை குடிசை, கல்விச்சாலை, செஸ் நடக்கும் இடம், என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் அற்புதமாக பணி செய்து இருக்கிறார் .
☘️சவுண்ட் டிசைன் கிருஷ்ணமூர்த்தி, சவுண்ட் துல்லியமாக இருக்கிறது .
☘️ராக் பிரபுவின் சண்டைக் காட்சிகள் எதார்த்தமாகவும் இயல்பாகவும் இருக்கிறது.
☘️சமூக விழிப்புணர்வு மிக்க இப்படத்தை V6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வேலாயுதம் தயாரித்துள்ளார்.
☘️மக்கள் தொடர்பாளர் சதீஷ் &சிவா(AIM)
☘️மொத்தத்தில் இந்த படம் தன்னம்பிக்கை நிறைந்த படம்.
☘️ படம் முடியும் போது தூய்மை பணியாளர்கள் தங்களது துன்பங்கள் பற்றியும் சொல்லும் போது மனம் கனக்கிறது.
வெற்றி பட்டியலில் தி கிராண்ட் மாஸ்டர் 🔥
