ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES) திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ஃபேண்டஸி காமெடி திரில்லர் படமாக வந்துள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இயக்குனர் T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் ( SOUTH STUDIOS ) படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் இப்படத்தில் இணைந்துள்ளார்

கதை களம்

வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து இந்த படம் முற்றிலும் வித்தியாசப்படுகிறது.

ஹாரர் பேண்டஸி, போன்ற படங்களையே பார்த்து வந்தவர் களுக்கு இது ஒரு புது மாதிரியான படம். எதார்த்தமான வாழ்வியல் சினிமா பார்த்தவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படம்.

நாயகன் கார்த்தி, நாயகி அனு, இருவரும் காதலிக்கிறார்கள். இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். நாயகன் வேளச்சேரியில் ஒரு பிளாட்டை விலைக்கு வாங்கி, அதில் குடியிருக்கிறார்கள். அந்த வீட்டுக்கு போன பிறகு அங்கு சில சம்பவங்கள் நடக்கிறது. அது என்ன அமானுஷ்யமா? அல்லது இயற்கை சத்தியா? ஏதோ ஒரு சக்தி அவர்களை ஆட்டிப் படைக்கிறது. அது என்ன? என்பது சஸ்பென்ஸ்,

இதில் மற்றொரு குடும்பமான ரமேஷ், மற்றும் விஜி, இவரது மகன் மகி, இந்த குடும்பமும் இணைகிறது. இவர்கள் யார்?

இந்த இரு குடும்பங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதை மிக சுவாரசியமாக சொல்லி இருக்கிறது படம்

நாயகன் தர்ஷன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தர்ஷன்.இவர் இப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கார்த்தி, என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய காதலி அணுவை உருகி உருகி காதலித்து, பின் மனைவியாக்கி பயந்து நடுங்கும் அனுவுக்கு தைரியம் சொல்லி, ஒரு பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றும் கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார்.

தர்ஷன் மீண்டும் ஹீரோவாக திரும்பும் முக்கிய படமாகும். இவர் கனா மற்றும் தும்பா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த படமும் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் .

இயக்குனர்

இப்படத்தை அறிமுக இயக்குநராக ராஜவேல் இயக்கியுள்ளார். இவர் முன்பாக இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

அரைத்து மாவையே அரைக்கால், ஒரு வித்தியாசமான தமிழ் சினிமாவை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். நிச்சயம் இது வரவேற்பை பெறும்.

எடுத்துக்கொண்ட கதையை தெளிவாக இயக்கி இருக்கிறார் இடைவேளைக்கு பிறகு படம் ராக்கெட் வேகத்தில் போகிறது..

காளி வெங்கட்

ரமேஷ் என்ற குடும்பத் தலைவனாக, நடிகை வினோதினியுடன் படம் முழுக்க கலக்கியிருக்கிறார். தன் மகன் மீது பாசம் வைத்து தவழ்ந்து செல்லும் அந்த காட்சியாகட்டும், அம்பத்தூரில் ஒரு ஃபேக்டரியில் வேலை செய்யும் தளர்ந்த நிலை உள்ள கதாபாத்திரத்தில் வருகின்ற அந்த கதாபாத்திரம் என்று வித்தியாசமான வேடத்தில்,மனுஷன் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

அர்ஷா சாந்தினி பைஜு,

அழகான கலையாண முகம், நல்ல நடிப்பு ஆரம்பக் காட்சிகளில் அமானுஷ்யத்தை கண்டு பயப்படுவதில், இருந்து பிறகு அதற்கு விடை கண்டுபிடிப்பதில் இருந்து நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். அழகான தேர்வு காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் இவரை அழகாக காட்டப்பட்டிருக்கிறது.

வினோதினி

முக்கியமான வேடத்தில் இந்த படத்தில் காளி வெங்கட் மனைவியாக நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகளில், பீதியும் பயமும் கலந்த நடிப்பு, நன்றாக நடித்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் மகனை நினைத்து உருகி அழும் காட்சியில் வினோதினி மனதில் இடம் பிடிக்கிறார்.

மற்றும் இப்படத்திற்காக பணிபுரிந்த கலைஞர்கள் தீனா, தர்ஷன் நண்பனாக படம் முழுக்க வருகிறார்.

அப்துல் லீ ,தர்ஷன் வேலை செய்யும் அலுவலகத்தில் சீனீராக வந்து பிரச்சனைகளுக்கு விடை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தி ருக்கிறார். மற்றும் மாஸ்டர் ஹென்ரிக் ,மகி என்ற கதாபாத்திரத்தில் முதலில் பயந்து நடுங்கி பிறகு காமெடியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

ராஜேஷ் முருகேசனின் மாயாஜால இசையுடன் வலம் வந்து இருக்கிறார் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

சதீஷ் ஒளிப்பதிவில் பிரமிக்க வைக்கும் திருக்கிறார்

ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை எவ்வளவு நீட்டாக ரிச் ஆக காட்ட முடியுமோ காட்டி இருக்கிறார். , திகில் மாறாக மனித உணர்வுகளையும்,
கேமரா வெளிப்படுத்தி இருக்கிறது.

 தொழில் நுட்ப குழு
:- A.நிஷார் ஷரேஃப்

அவர்களின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளரின் பங்கு மகத்தானது.

:- N.K. ராகுல் B.F.A

ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் காட்சிகளில் பிரமிப்பு ஏற்படுத்துகிறார்
தர்ஷன் வீடு, அலுவலகம், பாடல் காட்சிகள் அரங்கம் என இவரின் கை வண்ணம் சிறப்பு.

ஹரிஷ் / K.T.K. சங்கர் (டோன்கிராஃப்ட்)

ஒலி வடிவமைப்பு செய்து இருக்கிறார் சூப்பர் பயமுறுத்தும் இசை சவுண்ட் ஒலி அமைப்பு மிகவும் சரியாக இருக்கிறது. சில இடங்களில் பயமுறுத்துகிறது.

தினேஷ் காசி

சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார்

நடன இயக்குநராக அசார் பணி புரிந்திருக்கிறார்

நடனத்துக்கு அதிக வேலை இல்லை என்றாலும் ரசிக்கும் படி இருக்கிறது.

ஆடை வடிவமைப்பாளராக நந்தினி நெடுமாறன்

பணி புரிந்து இருக்கிறார் தர்ஷன், மற்றும் அர்ஷா, ஆடை வடிவமைப்பு கவனம் பெறுகிறது காளி வெங்கட், வினோதினி ஹென்றி ஆடை வடிவமைப்பு சூப்பர்..

பாடல் வரிகளை மோகன் ராஜன், உமா தேவி. எழுதி இருக்கிறார்கள் அடியே பாடலும், கிளைமாக்ஸ் சோக பாடலும், ரசிக்க வைக்கிறது.

ஒப்பனையாளராக, ஷேக் பாஷா பணிபுரிந்து இருக்கிறார் .மிகை இல்லாத ஒப்பனை நாயகன், நாயகியை, அழகாக காட்டி இருக்கிறார்.

VFX: பீ ஸ்டுடியோஸ்

DI: இன்ஃபினிட்டி மீடியா

கலரிஸ்ட் : M.சண்முகபாண்டியன்

ஸ்டில்ஸ் : R.மனோகர்

விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: R.சேதுராஜ்

திட்ட மேலாளர் – ஜெ.திவாகர்

இயக்க மேலாளர் – ஏ.ஆர்.கார்த்திக்

மார்க்கெட்டிங் மற்றும் புரமோசன் – ரகுல் பரசுராம்

நிர்வாகத் தயாரிப்பாளர்: பிரவீன் K.P.
சாமி

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: S.பி.சக்திவேல்

இணைத் தயாரிப்பாளர்- கலையரசு

தயாரிப்பாளர்: சிவகார்த்திகேயன் – எஸ்.விஜய பிரகாஷ்

தயாரிப்பு நிறுவனம் : Sivakarthikeyan Productions, Play smith studios & South Studios.

மக்கள் தொடர்பு :சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர், மற்றும் திரு.

மொத்தத்தில் இந்த ஹவுஸ்மேட்ஸ்
வித்தியாசமான படமாக வந்திருக்கிறது.
நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.