அக்யூஸ்ட் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதியாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘அக்யூஸ்ட் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.

: கதை களம்

இந்த படத்தில் அழகான காதல் இருக்கிறது. கணக்கு & மலர் இருவரின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தான் காதலித்த மலருக்காக, நாகராஜ் கையை தொட்டான் என்பதற்காக கணக்கு நாகராஜ் கையை வெட்டி விட்டு இரண்டு வருடம் சிறைக்குச் செல்கிறார்.

சிறையில் இருந்து திரும்பும்போது நாகராஜ், மலர் இருவருக்கும் திருமணம் ஆகிறது . மனம் நொறுங்கிப் போன கணக்கு, மலர் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆனால் நாகராஜ் அவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு மலரை, டார்ச்சர் செய்கிறார். ஒரு கட்டத்தில் கணக்கு, நாகராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளிவிட நாகராஜ் இறந்து விடுகிறார்.

இப்போது மலர், நாகராஜ் இருவருக்கும் பிறந்த குழந்தைபுற்று நோய் இரண்டாம் கட்ட கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறது.

தான் காதலித்த, மலர் இன்னொருவன் மனைவியான பிறகும் ஃமலரின் குழந்தையை காப்பாற்ற துடிக்கிறார் கணக்கு.

தன் மலருக்காக ஒரு கொலையும் செய்ய ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு நடப்பது தான் பரபரப்பான, விறுவிறுப்பான, ஒரு ஆக்சன் மசாலா கலந்த ஒரு அருமையான திரைக்கதை,

அக்யூஸ்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க செல்லும் காட்சியிலிருந்து படம் செம விறுவிறுப்பாக ரெக்கை கட்டி பறக்கிறது.

கணக்கு ,தன் காதலி மலருடன் மீண்டும் இணைய வேண்டும். வாழ்வில் அடிமட்டத்தில், இருந்து ஆசையாக காதலித்த இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் படத்தின் முடிவு?

படம் பிரமாண்டமாக வரவேண்டும் என்று ஒரு பஸ் விலைக்கு வாங்கி அதை சுக்குநூறாக நொறுங்கிவிட்டு படமாக்கி இருக்கிறது படக்குழு படத்தில் அனைவரும் உழைத்த உழைப்பு மிக கடினமாக தெரிகிறது.

பல கேள்விகளுக்கும், சில துரோகங்களுக்கும் படத்தின் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

இந்தத் திரைப்படம் சீட் எட்ஜ், திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், அஜ்மல் ஒன்றிணைந்து பயணிக்கும் போது இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகம் ஜெட் வேகத்தில் போகிறது. இந்தப் படத்தின் திரைக்கதை அவ்வளவு வேகமாக இருக்கிறது .

அடுத்து என்ன நடக்கும் உதயா தப்பிப்பாரா? அஜ்மல் அவரை காப்பாற்றுவாரா? இவர்கள் இருவரையும் கொலை செய்ய நினைக்கும் கூட்டம் இவர்களை சும்மா விடுமா? கிளைமாக்ஸ் காட்சி என்ன ஆகும்? என்பதெல்லாம் திரைக்கதைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

நாயகன் உதயா

தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு பிரேக் வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாயகன் உதயா இந்த படத்தில் கணக்கு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் உச்சத்தை தொட்டிருக்கிறார். நவரச நடிப்பில் நம்மை நெகிழ்ச்சி அடைய வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளில் குத்தாட்டம் போடும் பொழுதும், மலருக்காக ஏங்கி உருகும் பொழுதும், காமெடி செய்வதிலும் கிளைமாக்ஸ் கட்சியில் அழுது உருகுவதிலும் உதயா இப்படத்தின் மூலம் மிகப் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார்,

படத்தின் தயாரிப்பாளராகவும், இப்படம் அவர் கை கொடுத்திருக்கிறது. உதயா மீண்டும் கம் பேக் ,என்றே சொல்லலாம்

அஜ்மல்

இன்னொரு நாயகனாக இந்த படம் முழுவதும் பயணம் செய்திருக்கிறார். வேந்தன், என்ற கான்ஸ்டபிள் ஆக மனிதநேயம் உள்ள கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அவர் மனைவி இடம் பேசும் பொழுது நல்ல ரொமான்ஸ் ,யோகி பாபுவிடம், காமெடியில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அஜ்மல் கதாபாத்திரம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

யோகி பாபு

ராம நாயுடு, என்ற கதாபாத்திரத்தில் கலகலப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவர் வருகைக்கு பிறகு படத்தில் காமெடி கலகலப்பு றெக்கை கட்டி பறக்கிறது. கதைக்கு மிக முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்துகிறார். யோகி பாபு வெல்டன்.

நாயகி ஜான்விகா

மலர் என்ற கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார். மொட்டை மாடியில் உதயா உடன் ஆடும் குத்தாட்டமும் சரி, கிளைமாக்ஸ் காட்சியில் தன் கணவனுக்காக அழுது புலம்புவதும் சரி ,காதலனுடன் ரொமான்ஸ் செய்யும்பொழுது பாசமாக நடந்து கொள்வதும், என ஜான்விகா இந்த படத்துக்கு சரியான தேர்வு

மற்றும் கலைஞர்கள்

நடிகர் பவன், குணசேகராக ஓரிரு காட்சிகள் வந்தாலும் படத்திற்கு மிகப்பெரிய பலம் நன்றாக நடித்திருக்கிறார்.

சாந்த கா தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நடிப்பு படத்தின் திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

தயா பன்னீர்செல்வம், நாகராஜ் என்ற வேடத்தில் சில காட்சிகள் வந்தாலும் சிறப்பான முத்திரையை பார்த்து இருக்கிறார் கணக்குவின் காதலியை, அடைய வேண்டும் என்ற இலக்கில் வெற்றி பெறுகிறார், தயாரிப்பாளராக நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் அவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ், அசிஸ்டென்ட் கமிஷனர் சரவணனாக கர்ஜிக்கிறார்.
அவர் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. இயக்குனர் பிரபு சாலமன் ஒரே காட்சியில் வந்தாலும் நீதிபதியாக சரியான தீர்ப்பை வழங்கி அசத்தலான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

உதயாவை நீதிபதியும் முன் ஆஜர் படுத்த அழைத்து செல்லும் சற்குணமாக ஜெயக்குமார், நடித்திருக்கிறார்

நடிகை தீபா இந்த படத்தில் முக்கியத்துவமான வேடத்தில் நாயகனின் சகோதரியாக விசாலாட்சி, என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

சுபாதாரா, குணசேகரன் மனைவியாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்துகிறார். நாட்டில் இன்று நடக்கும் பிரச்சனைகளை கண்முன் காட்டுகிறார்.

மற்றும் அம்மா கிரியேஷன் சிவா அமைச்சராக வந்து உதயாவை தீர்த்துக்கட்ட சொல்லி கர்ஜிக்கிறார் அவர் வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.
சங்கர் பாபு சற்குணம் என்ற கான்ஸ்டபிள் வேடத்தில் , ஜெயகுமார் கிருபா என்ற கான்ஸ்டபிள் வேடத்தில், நடித்துள்ளார்கள்

அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் வெல்டன்.

இயக்குனர் பிரபு சீனிவாஸ்

ஒரு கமர்சியல் படத்தை சீட் ஏஜ் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு திரைக்கதையாக்கி, எழுதி அதற்கான நடிகர்களை தேர்வு செய்து, படத்தை விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார்.

பஸ் ஆக்ஸிடெண்ட் காட்சிகள் மற்றும் உதயாவும், அஜ்மலும், தப்பிக்கும் காட்சிகள் எல்லாமே படத்துக்கு பரபரப்பை சேர்த்திருக்கிறது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

மருதநாயகத்தின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது இரவு நேர பாடப்பிடிப்பு, உதயா வாழும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் யோகி பாபுவின் ஹோட்டல் அறை, என எல்லா இடத்திலும் கேமரா ஒர்க் நன்றாக இருக்கிறது.

நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. குத்து பாடல் ரசிக்க வைக்கிறது. சோகப்பாடல் உருக வைக்கிறது. மொத்தத்தில் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.

பாடல்கள் ரசிக்க வைக்கிறது எழுதியவர்கள் தேஸா, HYDE KARTY, பத்மஜா ஸ்ரீராம். கே.எல். பிரவீண் இப்படத்தின் படத்தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக பரபரப்பாக செல்வதற்கு எடிட்டரின் டேபிளில் அவர் கைவண்ணத்தில் படம் சீராக செயல்பட்டிருக்கிறது.

ஆனந்த் மணியின், ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது காவல் நிலையம், மற்றும் யோகி பாபு விடுதி , உதயா தப்பிக்கும் போது காட்டப்படும் ஆஸ்பத்திரி, என எல்லாம் அருமையாக உள்ளது

சந்திரிகா நடன பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறார் மொட்டை மாடியில் உதயாவும் நாயகியும் ஆடு அந்த நடனம் மிகவும் பேசப்படும் நடனகாட்சிகள் அருமை.

ஸ்டன்ட்சில்வா, சண்டை பயிற்சியாளராக ஆக்ரோஷமான ஆக்சன் காட்சிகளை அமைத்திருக்கிறார். பஸ்ஸுக்குள் போடும் சண்டையும், கிளைமாக்ஸ் காட்சியில், நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளும், அஜ்மல் மோதும் காட்சிகளும் ,சண்டை காட்சிகள் அனல் தெரிக்கிறது.

காஸ்டியூமராக இலியாஸ் பணிபுரிந்து இருக்கிறார் உதயாவுக்கும், மலருக்கும், அஜ்மலுக்கும், மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் ஆடை தேர்வு கச்சிதமாக இருக்கிறது.

மற்றும் இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

SFX: ARUN S MANI
Colorist: KARTHIKESH
VFX: D-NOTE
VFX Head : D NOTE MURTHY
DI & Mixing : D STUDIOS POST
Executive producer: S.SIVASARAVANAN
Production Executive: “THENI” SHANKAR
Co-Director : R.SHANKAR BABU
Stills: AMIR
Make-up: MURUGAN
Publicity Designs: ‘ANJALAI’ MURUGAN

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் 🌷

மொத்தத்தில் இந்த அக்யூஸ்ட் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்
நல்ல ஒரு கமர்சியல் ஆக்சன் படம் என்று வரவேற்கப்படுவார் வெற்றி பட்டியலில் அக்யூஸ்ட்🌷