கிங்டம்(ராஜ்யம்) திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ஆக பணிபுரிந்து பிறகு ரகசிய போலீஸ் ஆக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனித் தீவில் வாழும் மக்களின் தலைவனாக மாறும் ஒரு சாகச வீரனின் கதை தான்” கிங்டம்”

கதை களம்

நேர்மையான மற்றும் கோபக்கார கான்ஸ்டபிளான சூரி, தனது மேலதிகாரி
ஒரு மாற்றுத்திறனாளியை தாக்கும் போது
அச்சமின்றி
அவரை தாக்குகிறார்,
அந்த தைரியத்தை பாராட்டி மேலதிகாரி ஜெயபிரகாஷ் அவரை
இலங்கையில் ஒரு ரகசியப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கிறார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 18 ஆண்டுகளாக காணாமல் போன தனது நீண்ட காலமாக இழந்த சகோதரர் சத்யதேவுடன்(சிவா) மீண்டும் இணைவதற்கு
வாக்கு தரப்படுகிறது.

சூரி யாழ்ப்பாண சிறைக்குள் ஊடுருவி, இறுதியாக சத்யதேவை சந்திக்கிறார்.
அதன் பிறகு அங்கு ஒடியன் மேற்பார்வையில் இயங்கும் தங்கக் கடத்தல் கும்பலை சூரி சந்திக்க நேரிடுகிறது.

சூரியை வேலைக்கு அமர்த்திய ஜெ.பி எனும் அதிகாரி, உள் விளையாட்டுகளை விளையாடத் தொடங்குகிறார்,
இது சூழ்ச்சி என்று சூரி கண்டு பிடிக்கிறார் இதற்கிடையில், முருகன் தலைமையிலான ஒரு சக்திவாய்ந்த கடத்தல் மாஃபியா இலங்கையில் அமைக்கப்பட்ட கும்பல் சூரியின்
அண்ணன் சிவா விடம் போலீஸ் இன்ஃபார்மர் யார் என்று கேட்டு அந்த தீவில் இருக்கும் மக்களை தொல்லை செய்ய சூரி இலங்கை நேவிப்படையால் கைப்பற்றப்பட்ட தங்கத்தை மீட்டு வர புறப்படுகிறார்.

அதன் பிறகு ஒடியன் இறந்து போக முருகன் மாஃபியா கும்பலுக்கு தலைமை ஏற்று அந்த தீவில் இருக்கும் மக்களை கொன்று குவிக்கிறான் சிவாவும் இரக்க நேரிடுகிறார் .
அதன் பின் சூரி வெகுண்டு எழுந்து அந்த கும்பலை ஒழித்து அந்த மக்களுக்கு தலைவனாவது தான கிங்டம் படத்தின் கதை களம்

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா, தனது நடிப்புத்திறனின் உச்சத்தை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். கோபம், வேதனை, கம்பீரம், சோகம் என மனித உணர்வுகளின் அனைத்து அங்கங்களையும் தீவிரமாகக் கொண்டுவந்து, திரையில் முழுமையாக வாழ்ந்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பும், சில சமயங்களில் மெளனங்களும் கூட காட்சிகளை உயிர்ப்பிக்கின்றன
ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்

: இயக்குனர்

: இயக்குனர் கௌதம் தின்னனூரி, தனது அழுத்தமான கதைசொல்லும் திறனையும், நுணுக்கமான இயக்கத்தையும் ஜெர்சி படத்துக்கு பிறகு கிங்டம் படத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
மாபியா கும்பல் தங்கம் கடத்தும் பொழுது இலங்கை நேவி அங்கு வர பரபரப்பான காட்சி ,
தனது தந்தை ஒடியன் மரணத்திற்கு தீவில் இருக்கும் அனைவரையும் அழைத்து விருந்து வைத்து முருகன் சாகடிக்கும் காட்சி
சூழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது.
அண்ணனா? தம்பியா? இருவரில் ஒருவர் என்ற அந்த கேம் விளையாட்டு பரபரப்பாக இருக்கிறது

தொழில்நுட்ப ரீதியாகவும் (ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு) மிக உயர்ந்த தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், கிங்டம் வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல. திரையுலகில் ஒரு புரட்சி” எ்று சொல்லலாம்
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

நாயகி பாக்கியஸ்ரீ

மருத்துவராக வந்து நாயகனுக்காக உதவி செய்து முக்கியமான விருப்பத்தை ஏற்படுத்துகிறார் நாயகனின் மேலதிகாரியான ஜெயபிரகாஷ் கட்டுப்பட்டு நாயகனுக்கு செய்யும் துரோகம் படத்தில் திருப்புமுனை

சத்ய தேவ்

நாயகனின் அண்ணனாக சிவா என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க வந்து தம்பிக்காக உயிரை தியாகம் செய்து ஆரம்பக் காட்சியில் தம்பிக்காக கொலைப்பணியை ஏற்றுக்கொண்டு ஒரு தியாகத் திருவுருவமாக படத்தில் மீறுகிறார் சத்தியதேவன் நடிப்பு சூப்பர்!

மற்றும் இப்படத்திற்காக பணிபுரிந்த கலைஞர்கள்

அனிருத்

இசையில்
பின்னணி இசை மிரட்டல் ஆக இருக்கிறது
பாடல்களும் ரசிக்க வைக்கிறது.
தெலுங்கு ரசிகர்கள் அனிருத்துக்கு கட்டவுட் வைத்து கௌரவம் செய்திருக்கிறார்கள் அந்த கௌரவத்தை படத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் அனிருத் படத்தின் பாடல்களும் பின்னணி செய்யும் மிரட்டி இருக்கிறது படத்தின் வெற்றிக்கு அனிருத் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இப்படத்திற்கு ஜோமோன் டி.ஜான், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இலங்கை தீவின் அழகை கேமரா அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது
சூப்பர் ஒளிப்பதிவு

நவீன் நூலி, படத்தொகுப்பு செய் திருக்கிறார்.
படம் பரபரப்பாக விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பு கச்சிதமாக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறது.

,நீரஜா கோனா, ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அந்த தீவில் வாழும் மக்களுக்கு கந்தைபோல ஆடைகளை கொடுத்து அசலாக காட்டியிருக்கிறார். மாபியா கும்பல் ஆடைகளிலும், மற்றும் கான்ஸ்டபிள்
நாயகன் வரும் போது
அண்டர் கவர் ஆபரேஷன் செய்யும் போதும் விஜய் தேவரகொண்டா மற்றும் நாயகியின் ஆடை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது

சூப்பர் சுப்பு ,மற்றும் விஷ்ணு எடவன், பாடல்கள் எழுத, தமிழ் வசனத்தை கே.என்.விஜயகுமார் எழுதியுள்ளார்.
நடன இயக்குநர்: விஜய் பின்னி,
ஸ்டண்ட் இயக்குனர்: யானிக் பென், சேதன் D’சூசா & ரியல் சதீஷ்
கலர் கிரேடிங்: ரங்கா
ஒலி வடிவமைப்பு: Sync சினிமா
ஆடியோகிராபி: விநய் ஸ்ரீதர்
VFX மேற்பார்வையாளர்: வசுதேவ ராவ் எம்
இவர்களும் இந்த படத்தின் வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர்கள்
திரு: சுரேஷ் சந்திரா திரு. அப்துல் நாசர்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த கிங்டம்’ பரபரப்பான ஒரு ஆக்சன் மாஸ் கலந்த படமாக வந்திருக்கிறது. விஜய் தேவர கொண்டாவுக்கு இது ஒரு வெற்றிப்படம் என்றே சொல்லலாம்
கிங்டம் என்பது வழக்கமான வெகுஜன பொழுதுபோக்கு படம் அல்ல. , ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை மையமாகக் கொண்ட படம்.
தனது உணர்வுகளுக்கு உண்மையாக இருந்து, கௌதம் தின்னனுரி ஒரு உத்வேகமான கதையை வடிவமைத்துள்ளார
படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் தயாரிப்புத் தரம். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் (நாக வம்சி)
தயாரித்து இருக்கிறார்

மொத்தத்தில் இந்த ராஜ்ஜியம் ரசிகர்கள் ராஜ்ஜியமாக வந்துள்ளது வெற்றி பட்டியலில்” கிங்டம்”