கௌதம் கணபதி இயக்கத்தில், பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சரண்டர்’.
அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர்கள் லால், சுஜீத் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க.
: கதை களம்
நான்கு வகையான டைமன்ஷனில் நடக்கும் கதை
கேங் ஸ்டர்
கனகு அமைச்சர் கொடுக்கும் பணத்தை தேர்தல் செலவுக்காக பிரித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறான் அதில் வில்லியம்ஸ் என்ற போலிஸ் அதிகாரியிடம் கொடுத்து அனுப்பிய 10 கோடி பணம் மிஸ் ஆகிறது விபத்தில் சிக்கிய வில்லியம்ஸ் மற்றும் வர்கீஸ் 10 கோடியை திரும்பினார் களா? என்று அவர்களிடம் இருந்து அந்த பணத்தை மீட்க வேண்டிய கணக்கு
நடத்தும் யுத்தம்
அடுத்து ரைட்டர் பெரியசாமி, மன்சூர் அலிகான் இடமிருந்து தேர்தல் பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கி காணாமல் போக இதனால் காவல் நிலையத்தில் ஏற்படும் குழப்பம் ரைட்டர் பெரியசாமி பார்வையில் இருந்து கதை நகருகிறது
திருச்சியில் இருந்து
முனீஸ்காந்த் துப்பாக்கியை விலைக்கு வாங்க சென்னை வரும் போது கனகுவின் தம்பி டெல்லியிடம் பேரம் பேசி அந்த துப்பாக்கியை வாங்கும் போர்ஷன் ஒரு காட்சி
திருமிழசை காவல் நிலையம்
படம் முழுக்க ஒரு கதாபாத்திரமாக வந்து போகிறது.
புகழேந்தியாக
பிக் பாஸ் தர்ஷன் கம்பீரமான உடல் கட்டுடன் முறுக்கிய மீசை உடன் பெரியசாமிக்காக, கனகுவையும் அவர் தம்பியையும் புரட்டி எடுக்கும் காட்சிகள் அவர் ஒருபுறம் ,
செய்யாத குற்றத்திற்காக காவல் நிலையம் வரவழைக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண் போலீஸ் அதிகாரி பானுமதியால், வஞ்சிக்கபடும்போதுஅந்த தாய் ,மகனும் ஒரு கதாபாத்திரம் .
கனகுவின் தம்பி டெல்லி அவன் செய்யும் அட்டூழியம் ஒரு புறம் என
எல்லா கதைகளும் மையத்தில் இணைந்து ஒரு கிளைமாக்ஸ் முடிவை நோக்கி பரபரப்பாக நகர்கிறது
தர்ஷன்,
புகழேந்தியாக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
லால்,
ரைட்டர் பெரியசாமி ஆக மனுஷன் வாழ்ந்து இருக்கிறார்
பாடினி குமார்,
சோபியா என்னும் கதாபாத்திரத்தில் ஓரிரு காட்சிகள் வந்தாலும் அழகான நடிப்பை தந்திருக்கிறார்.
சுஜீத்சங்கர்,
இவர்தான் மெயின் வில்லன் கணக்கு என்னும் கனகசுந்தரம் தெனாவட்டாக எல்லோரையும் மிரட்டி பணம் சம்பாதித்து கொலை செய்யும் கொடூர வெள்ளனாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
முனீஸ்காந்த்,
திருச்சியில் போஸ்டர் டிசைன் செய்யும் குழந்தை சாமியாக குழந்தைத்தனமாக கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
கௌசிக்
கனகுவின் தம்பியாக டெல்லி என்ற கதாபாத்திரத்தில் பிச்சி உதறி இருக்கிறார் நல்ல நடிப்பு நல்ல சேட்டை.
நம்பியார்,
இவர் கனகுவின் கையால் ஆக வந்து பத்து கோடி காசு பெற்று உயிரைவிடும் மர்கீஸ் சென்ற கதாபாத்திரத்தில் பரிதாபமான நடிப்பை தந்து இருக்கிறார்.
ஆக,வெவ்வேறு அடையாளத்துடன் வாழ்பவர்கள். இவர்களின் வாழ்க்கையை நாண்கு நாளில் நடக்கும் சில சம்பவங்களினூடே இணைப்பதுதான் ‘சரண்டர் “படத்தின் களம்.
விறுவிறுப்பான திரைக்கதை
பல்வேறு இழைகளை ஒன்றாக இணைத்துக் கதை சொல்லும், இயக்கும் திரைக்கதை உத்தி தமிழுக்குப் புதியதில்லை என்றாலும் அதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இதில் இயக்குனரும் இணைந்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களையும் அவர்களை இணைக்கும் சம்பவங்களையும் வைத்துக்கொண்டு பதைபதைக்க வைக்கும் திரைக்கதைப் பயணத்தைச் சாத்தியப் படுத்திவிடுகிறார்.
வெல்டன்
சென்னையின் பல்வேறுபட்ட மனிதர்கள், அவர்களுடைய மாறுபட்ட இயல்புகள், வெவ்வேறு இடங்கள், தருணங்கள், செயல்கள் ஆகியவற்றால் உருவாகும் சிக்கல்களை யதார்த்தமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார். ரவுடிகள், காவல் துறையினர், சாமானிய மனிதர்கள் ஆகி யோரை அச்சு அசலாகக் கண் முன் கொண்டு வருகிறார்.
கதைக் களத்தையும் மாந்தர்களையும் நிகழ்வு களையும் விரிவாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கும் இயக்குநர், சிலவற்றைச் சொல்லாமல் சொல்வதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். உதாரணமாக,
ஒரு போலீஸ் அதிகாரியின் துணியை அவிழ்த்து அவமானப்படுத்த விட மற்றொரு ட்ரெய்னிங் போலீஸ் அதிகாரி புகழேந்தி
கோபப்பட்டு மேலதிகாரி மீது இருக்கும் கட்டுப்பாட்டால்
மிக நுட்பமாக
கனகு தம்பி யை
பழிவாங்குவது புதிய உத்தி, முனீஸ்காந்தின் வெள்ளந்தியான இயல்பு, நேர்மையும் எளிமை யுமாய் கலகலப்பு இயல்பு, சென்னையின் இருண்ட பகுதிகள், ரவுடிகளின் உலகம், சிக்கலில் மாட்டிக் கொண்ட ரவுடிகள், பெரிய தாதா வாக இருந்தாலும், தன் தம்பியை காப்பாற்றுவதற்காக துடிக்கும் துடிப்பும் லால் பாத்திர வார்ப்பிலும் சூழல் சித்தரிப்பிலும் அசரவைக்கிறார்.
இயக்குனர் இவர் ஈரம் அறிவழகன் உதவி இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்
: புகழேந்தி ,பானுமதி, சடையாண்டி, ரைட்டர் பெரியசாமி ,நடிகர் மன்சூர் அலிகான், ரவுடி கணக்கு, அவரின் தம்பி டெல்லி ,ஆகாஷ், வர்கீஸ் ,வில்லியம்ஸ் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் அணலாகவும் மற்றும் இரவு காட்சிகளில் திகிலாவும் படமாக்கி இருக்கிறார்
விகாஸ் படிசாவின், பின்னணி இசை மிரட்டல்
ரேணுகோபாலின்,
படத்தொகுப்பு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.
மனோஜ் குமார்
ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் காவல் நிலையம் ,மற்றும் கனகுவின் வீடு, அலுவலகம், அந்த பஸ் எல்லாமே அற்புதமாக இருக்கிறது.
ஆக்சன் சந்தோஷ் சண்டை பயிற்சிஅமைத்தி ருக்கிறார். பஸ்ஸுக்குள் போடும் சண்டையும், கிளைமாக்ஸ் காட்சியில் போடும் சண்டையும், கனகுவை காப்பாற்ற புகழேந்தி ஆஸ்பத்திரியில் போடும் சண்டையும், ஆக்ரோஷமாகவும் அனல் பறக்கும் வகையிலும் இருக்கிறது.
காஸ்டியூம் டிசைனராக ஜோஸ்வா மேக்ஸ்வெல் பணிபுரிந்து இருக்கிறார்.
காஸ்ட்யூமர்
பி. ஆர் கணேஷ் காவல்துறைக்கும், கான்டபிள்களுக்கும், ஆடை வடிவமைப்பு கச்சிதமாக இருக்கிறது.
முகமது ஒப்பணையாளராக பணி புரிந்திருக்கிறார். எந்த இடத்திலும் ஒப்பனை மிகையில்லாமல் அசலாக தோற்றம் தருகிறது.
PRO: Sathish (S2 Media)
மக்கள் தொடர்பாளர் சதீஷ் (எஸ் 2 மீடியா)
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்ததற்கு….
படத்தின் வசனங்கள் சார்ப்பாக இருக்கிறது
இங்கு சூது தான் வெல்லும் தர்மம் நியாயம் என்பதெல்லாம் மாயை, என்று ரைட்டர் பெரியசாமி பேசும் வசனங்களும்,
நாயகன் தர்ஷன் பேசும் வசனமான எனக்கு ஒரு அப்பா இருந்தால் நான் செய்ய மாட்டேனா? என்று கேள்வி கேட்டு அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல அது ஒரு நம்பிக்கை என்று சொல்லும் காட்சிகளும் சரி,
படம் முழுக்கவே வசனம் நன்றாகவே எழுதியிருக்கிறார் வசனகர்த்தா.
மொத்தத்தில் இந்த சரண்டர் “ரசிகர்களை சரண்டர் செய்து தியேட்டருக்கு வரவழைக்கும் என்பது உறுதி
