இந்திரா திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

திருவான்மியூர் காவல் நிலையத்தில் அதிகாரியாக இருக்கும் இந்திரகுமார் அவரின் வாழ்க்கை பயணத்தில் முதல் பாதி வெளிச்சமாகவும், காதல் ,கலகலப்பு என்று வாழ்கிறார்.

இரண்டாவது பாதியில் டார்க், பகுதியில் கண்கள் தெரியாமல் நடப்பது, என்னவென்று புரியாமல் விடை காண முடியாமல் தவிக்கிறார். இந்த இரண்டு பக்கங்களையும் அழகாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.

கதை களம்

மர்மமான முறையில் நான்கு பெண்கள் கொல்லப்படுகிறார்கள் காவல்துறைக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது திருவான்மியூர் எல்லைக்குட்பட்ட சரககத்தில் நடக்கும் இந்த கொலையை கண்டுபிடிக்க நாகேந்திரன் வருகிறார் (கல்யான்)
கொலை செய்யும் அந்த சீரியல் கில்லர்

சுனில் (அபிமன்யு)

இவரைப் பிடித்து விசாரிக்கும் பொழுது மூன்று பெண்களை கொலை செய்தேன் ஆனால் இந்திராவின் காதலியான கயலை, நான் கொலை செய்யவில்லை என்கிறார். அப்படி என்றால் தன் காதலியை கொலை செய்தது யார் ?என்று கண்டுபிடிக்க முயல்கிறார்.இந்திரா,
அதிர்ச்சி ஊட்டும் சம்பவங்கள் அரங்கேறுகிறது! அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று விறுவிறுப்பான கதைக்களத்தில் பயணிக்கிறது

வசந்த் ரவி

வசந்த் ரவி இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் . பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

கடைசியாக வெப்பன் படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படங்களை எல்லாம் விட இந்த படத்தில் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார். பார்வையற்றவராக அற்புதமாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகள், உடன் ,உடல் மொழி நன்றாக இருக்கிறது .

பார்வையற்றவர் போலவே நடித்திருப்பது, தனக்கு என்ன நேர்ந்தது? என்ன நடந்தது? என்று தெரியாமல் விழிப்பதும்! தன் காதலி எப்படி இறந்தார் ?என்று கண்டுபிடிப்பது அவரின் உழைப்பை காட்டுகிறது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் வசந்த ரவி அவர்களுக்கு இப் படம் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் சார் 🌷

மற்றும் இப்படத்தில் நடித்த நடிகர் & நடிகைகள்

சுனில், (அபிமன்யு) என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.

மெஹ்ரின் வசந்த் ரவியின் காதலியாக வந்து கவர்ச்சியில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

(கயல்) என்ற கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

மதி என்ற கதாபாத்திரத்தில் வேலைக்கார பெண்ணாக (அணிகாசுரேந்தர்) வந்த பின்பு படத்தில் தென்றல் வீசுகிறது இளமையும் அழகும் பூத்துக் குலுங்குகிறது அனிகாவின் காதல் ஃப்ளாஷ்பேக் அற்புதமாக இருக்கிறது.

இவர் காதலனாக வருபவர் பத்ரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்

அடுத்து கல்யாண் (நாகேந்திரன்) என்னும் போலீஸ் அதிகாரியாக இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகள் அற்புதம்

ராஜ்குமார் வசந்த் ரவியின் நண்பனாக வந்து படம் முழுக்க உதவி செய்கிறார் மற்றும் நடித்திருக்கும் துணை கதாபாத்திரங்கள் அனைவரும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

இயக்குனர் சபரீஷ் நந்தா, வித்தியாசமான திரில்லர், கதையை மக்களுக்கு வழங்கி இருக்கிறார். அருமையான இயக்கம்

ஒவ்வொரு காட்சியிலும் ,மிரட்டி இருக்கிறார். அடுத்து என்ன? அடுத்து என்ன ?என்று விழிகளை வியக்க வைக்கிறார்!.

பிரபு ராகவ் ஒளிப்பதிவாளராக இருளான காட்சிகளில், திகிலாக படமாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு அருமை.

அஜ்மல் பின்னணி இசை மிரட்டலாக இருந்தாலும் சில சமயம் வசனங்களை மீறிய இசை கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரவீன் கே. எல் அவரின் சார்ப்பான படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. புரோடக்சன் டிசைனராக சூர்யா ராஜிவ் பணியாற்றி இருக்கிறார் .

அனல் பறக்கும், சண்டை காட்சிகளை விக்கி, அமைத்திருக்கிறார். சண்டை காட்சிகள் விறுவிறுப்பின் உச்சம்.

மற்றும் அரங்கமைப்பாளர், ஒப்பனையாளர், கலர் கரக்சன், செய்தவர்கள் டி. ஐ செய்தவர்கள், என அனைவரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது. ஒரு வெற்றி படத்திற்காக எல்லோரும் உழைத்து இருப்பது நன்றாக தெரிகிறது

Executive Producer: V. Madhusudhan
Promotions: Vasumathi (The RoadMap)
: Production House: JSM Movie Production, Emperor Entertainment
Producer: Jaffer Sadiq, Irfan Malik
Tamilnadu release – Trident Arts – R Ravindran

படத்தின் ஹை லைட்ஸ்

🌷ஆரம்ப காட்சியில்,
திகில் ஊட்டும் வண்ணம்
வசந்த் ரவி இறந்து கிடக்க, தூக்கத்திலிருந்து விழிக்கும் அந்த காட்சி செம மிரட்டல்.

🌷இடி மின்னல் காட்சிகள் படம் பார்ப்பவர்களை நிச்சயமாக மிரட்டும்.

🌷கயல் தூக்கில் தொங்கும் அந்த காட்சி எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும், யார் அவரை கொலை செய்தது ?என்ற சஸ்பென்ஸ் படத்திற்கு வலிமை சேர்த்து இருக்கிறது.

🌷தொடர்ந்து சீரியல் கில்லர் ஏன் கொலை செய்கிறார் அவரின் ஈகோவை சீண்டினால் அவர் கொடூரமான முறையில் கொலை செய்கிறார் என்று சொல்லி இருப்பது நம்பத் தகுந்த ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது .
சுனில் அதற்கு ஏற்ற காட்சிகளில் அற்புதமான பார்வையில், கொடூரமாக மிரட்டி இருக்கிறார்.

🌷சுனில் பார்,
போலீஸ் ஸ்டேஷனில்
மிரட்டும் காட்சிகள், அடிவாங்கும் போது
மிரட்டும் பார்வையில், கலக்கி இருக்கிறார்.

🌷கஜராஜ் கொல்ல படும் காட்சி
பயம் ஏற்படுத்தும் காட்சிகள்

🌷சுனில், இந்திரா மோதல் அந்த சண்டைக் காட்சி விறுவிறுப்பு உச்சம் .
அடுத்து பத்திரனுடன்
வீட்டுக்குள் போடும் அந்த சண்டை காட்சிகள், அனல் தெரிக்கிறது.

🌷இண்டர் வெல் பிளாக்
எதிர் பாராத திருப்பம்,
கிளைமாக்ஸ் காட்சியை நன்றாக அமைத்து இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்.🌷

மக்கள் தொடர்பாளர்
சதீஷ் குமார் (S2 Media)
மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் படத்தை அவருக்கும் வாழ்த்துக்கள்🌷

வெற்றி பட்டியலில் இந்திரா 🌷