Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது
: கதை களம்
பண்ணை பரமசிவம்,
லட்சுமி இவர்களின் தம்பதியரின் மகன் ராஜா, ஒரு தவறான விளம்பரத்தால் தன் மொத்த முடியையும் இழந்து திருமணம் ஆகாமல் தவிக்கிறார் பிரியா, என்ற எதிர் வீட்டு நாயகியை திருமணம் செய்ய போகும்போது தன் நண்பன் ராக்கியால் ஒரு வீடியோ அனுப்பப்பட்டு திருமணம் தடைப்பட்டு போகிறது .
அதன் பிறகு சென்னை சென்று தன் தலை முடியை சரி செய்து கொண்டு வந்து இன்ஸ்டாகிராமில் டிரண்டாகி இருக்கும்
ஸ்ருதியுடன், திருமணம் நிச்சயிக்கப்படுகிறத. இந்த திருமணமாவது நடைபெற்றதா? இல்லையா ?சொட்டை தலையில் இவர் படும் அவதி என்ன? என்பதை கலகலப்பு ,காமெடி யுடன் சொல்லி இருக்கிறது இந்த படம் .
கிளைமாக்ஸ் காட்சி தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது
நாயகன் நிஷாந்த் ரூஷோ
: இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனாக நடித்துள்ளார்
வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதனால் அவதி படுகிறார்
அவதிப்படும் அந்த நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் படம் முழுக்க இவர் படத்தை சுமந்து சென்று இருக்கிறார். நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகியிருக்கிறார்.
கலக்கப் போவது யாரு’ புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
ராக்கி இன்று கதாபாத்திரத்தில் பிரியாவுடன், ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வெற்றி பெறுகிறார். அவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது கதைக்கு பக்கபலமாக நின்று இருக்கிறார்
இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை,திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்கள்
பிரியா என்ற கதா பத்திரத்தில் நடித்திருக்கும் ஷாலினி ,அழகான முகம் கலையான நடிப்பில் அழகாக வந்து போகிறார். தவறான வீடியோவால் பாதிக்கப்படும் நாயகி, கிளைமாக்ஸ்
காட்சியின் போது தன்னம்பிக்கோடு பேசும் வசனம் கைதட்டல் வாங்குகிறது .
அடுத்த வர்ஷினி சுருதி, என்ற கதாபாத்திரத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் இன்றைய தலைமுறையினர் செய்யும் அலப்பறைகளை படம் முழுக்க செய்து கலகலப்பை ஏற்படுத்துகிறார். இந்த இண்ஸ்ட்ராகிராம் நடனம் ரசிக்க வைக்கிறது
மற்றும் நடிகர் நடிகைகள் ராஜா இளங்கோவன், ஆனந்த் பாண்டி, வணங்காமுடி என்ற டாக்டர் வேடத்தில் கலக்கி இருக்கிறார் மற்றும் ரோபோ சங்கர் ,இவர்கள் வரும் காட்சிகளில் கலகலப்பு நிரம்பி வழிகிறது
இயக்குனர்
: நவீத்.எஸ். பரித் இயக்கத்தில் புதுமையும், இளமையும், காமெடியும் கலகலப்பு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. சந்தோஷமா வாங்க, ஜாலியா போங்க என்பது இவரின் தத்துவமாக படத்தை இயக்கி இருக்கிறார்.
ரஞ்சித் உன்னி யின்,
இசையில் உயிரே, என்ற சோகப் பாடலும், இன்ஸ்டாகிராம் பெண்ணே ,என்ற பாடல் ஓரக்கண்ணாலே, என்ற பாடலும் ரசிக்க வைக்கிறது.
ரவீஸ், ஒளிப்பதிவு சூப்பர். 18 நாட்களில் பரபரப்பாக படமாக்கி இருக்கிறார்.
ராம் சதீஷ், படத்தொகுப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார் கச்சிதமாக இருக்கிறது.
ராம்குமார் ,ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார்
அரங்க அமைப்புகள் கண்களை கவர்கிறது.
ஐரின் ஜோசப், ஸ்பெஷல் மேக்கப் மேனாக பணிபுரிந்து இருக்கிறார் நாயகனுக்கு அந்த சொட்டை தலைக்கு சூப்பராக பொருந்தி இருக்கிறது.
நாயகிகள் மேக்கப் நன்றாக இருக்கிறது.
மற்றும் படத்தின் ஆடை வடிவமைப்பாளர், போஸ்டன் டிசைன் செய்தவர், தங்கள் பங்குக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
மக்கள் தொடர்பாளர் ராஜா .
மொத்தத்தில் இந்த சொட்ட சொட்ட நனையுது ,என்ற திரைப்படம் முடி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன மூளை இருந்தால் போதும் என்ற தன்னம்பிக்கை விதைத்து படத்தை கொடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 🌷
