98வது ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலில் #PAPA_BUKA திரைப்படம்

இயக்குநர் பா. இரஞ்சித் (@beemji) அவர்களின் இணைத் தயாரிப்பில், டாக்டர் பிஜுகுமார் தாமோதரன் ( @drbijufilmmaker) இயக்கத்தில் உருவாகியுள்ள #PAPA_BUKA திரைப்படம், முதன்முதலாக பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பில் 98வது ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலில் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவின் 50வது சுதந்திர ஆண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீலம் புரொடக்சன்ஸ்(@officialneelam) பங்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.