குற்றம் புதிது திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கதை களம்

ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான, பாசபினைப்பினை இந்தப் படம் கிரைம், திரில்லரில் அசத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில், ஒரு வித்தியாசமான கதைகளம் கொண்ட படம். இந்த படத்தின் மையக்கதை..

காவல்துறை உதவி ஆணையர்(சத்யா) ஒரு கம்பீரமான காவல் துறை அதிகாரி, இவரது மனைவி இன்னொரு மகளுக்கு பிரசவத்திற்காக வெளிநாடு சென்று விடுகிறார்.

சத்யா மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்ப நேரம் ஆகி விடுகிறது மகளுக்கு போன் செய்கிறார் வந்து விடுகிறேன் என்கிறார். அப்பொழுது நேரம் 11:45 ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பி விடுவார் என்று தூங்கப் போய் விடுகிறார்.

மறுநாள் காலையில் மகளைக் காணவில்லை என்று இன்வெஸ்டிகேஷன் நடத்துகிறார். அப்பொழுது ஒரு வீட்டில் அருகே ஆட்டோ ஒன்றில் ரத்த கரையோடு நிற்கிறது என்று அந்த வீட்டு பெண்மணி போன் செய்ய எல்லோரும் அங்கே விரைகிறார்கள். அந்த ஆட்டோவுக்கு சொந்தக்காரரான விநாயகம் (ராமச்சந்திரன்) தலைமறை வாகி விட, அவரது ரூமுக்கு அருகே தங்கி இருக்கும் கதிரேசனை(தருண் விஜய்)அழைத்து வந்து விசாரணை நடத்துகிறார்கள்

கதிரேசன் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல அவரை விட்டு விடுகிறார்கள். அவர் சொன்னதெல்லாம் உண்மையா? என்று ஆஸ்பத்திரிக்கும் மற்றும் எல்லா இடங்களுக்கும் விசாரணை செய்து கதிரேசன் நல்லவர் என்று அனுப்பி விடுகிறார்கள்.

ஆனால் கதிரேசன் திடீரென்று நான் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டேன் என்று சரணடைகிறார்.

தருண் விஜய் கொலை செய்ததாக சொல்லும் பெண் சேஷ்விதா கனிமொழியா ? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கும் காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த கொலை மட்டும் அல்ல, மேலும் இரண்டு கொலைகள் செய்திருப்பதாக சொல்கிறார் தருண் விஜய், தான் கொலை செய்தவர்களில் சேஷ்விதா கனிமொழியும் ஒருவரா? என்பது தெரியாது, என்று சொல்லி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்கிறார். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை, அவர் கொலை செய்ததாக சொல்லப்படும் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறது. அப்படியானால், அவர் சொல்லும் மூன்றாவது கொலைக்கும், சேஷ்விதா கனிமொழிக்கும் என்ன தொடர்பு?, உயிருடன் இருப்பவர்களை கொன்று விட்டதாக சொல்லும் தருண் விஜய் யார் ?, எதற்காக இப்படி சொல்கிறார் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை புது வடிவிலான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘குற்றம் புதிது’.

படம் ஆரம்பத்திலிருந்து ஜெட் வேகத்தில் பறக்கிறது .அடுத்து என்ன நடக்கும்! என்ற கோணத்தில் பரபரப்பான, கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ கிரைம் ,ஜானர் படங்களை பார்த்திருக்கிறோம் ஆனால் குற்றம் புதிது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமாக நமக்கு படைத்திருக்கிறது பட க்குழு.

நாயகன் தருண் விஜய்

தருண் விஜய், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். சட்டென்று மாறும் முகபாவம் அழுகை, பரிதாபமான பார்வை,
போலீஸ் அதிகாரியை அங்கிள் என்று சொல்லிக்கொண்டு அழைக்கும் வந்த சாதூரியம், நீதிபதியை அங்கிள் என்று சொல்லும் அந்த வார்த்தை, இதெல்லாம் இன்றைய டிரெண்ட் ஆன வசனங்கள் அந்த வசனங்கள் வரும்போது தியேட்டரில் கைதட்டலும் விசிலும் பறக்கிறது.

அழகான தோற்றம், சிவந்த நிறம், ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளோடு இருக்கிறது. முகத்தில் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார். கொலை செய்ததையே ஒரு குழந்தையை போல் ஒப்புக்கொள்ளும் காட்சியில் கைதேர்ந்த நடிகராக பளிச்சிடுகிறார். நடனம், ஆக்‌ஷன், நடிப்பு, செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும், அறிமுகப்படத்திலேயே சிக்சர் அடித்திருக்கும் தருண் விஜய், நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார் .
என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்திருக்கிறார்.

அவரே படத்தை தயாரித்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் ஒரு காமெடி படம், அல்லது காதல் சார்ந்த படமாகவோ, தனக்கு ஈசியாக எது வருமோ அதை தேர்வு செய்து நடித்திருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்க வேண்டும் .என்று நடிப்புக்கு நல்ல தீனி வேண்டும் என்று இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்

ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக, அவரை பாராட்டலாம்

நாயகி சேஷ்விதா கனிமொழி,

துருதுருப்பான நடிப்பின் மூலம் நம்மை கவர்கிறார் அவரின் அறிவுக்கூர்மை படத்திற்கு மிகவும் ப்ளஸ் ஆக இருக்கிறது. கண்கள் மூலமாகவே பலவித உணர்வுகளை ரசிகர்களிடத்தில் எளிதில் கடத்தி விடுகிறார். அவர் நடிக்கும் அத்தனை படங்களிலும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்களை மிரள வைத்தவர், இந்த படத்திலும் யூகிக்க முடியாத வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

அப்பாவுடன் செய்யும் குறும்பு ,அம்மா மகள் பாசம், என கலந்து கட்டி, கொடுத்திருக்கும் சேஸ்விதா, தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகளை பெறுவார் நல்ல நல்ல வேடங்கள் அவருக்கு காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.

மதுசூதன ராவ்

மதுசூதனன் ராவ், காவல்துறை அதிகாரியாக அற்புதமாக பொருந்தி இருக்கிறார் .ஒரு அப்பாவாக, மகள் மீது பாசம் கொண்டு துப்புத் துலக்கும் பாணியில், சபாஷ் பெறுகிறார் இவரின் தேர்வு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது

தன் மனைவி வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது இப்படி மகளை தொலைத்து விட்டோமே !என்ற குற்ற உணர்வு மனைவியை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழும் அந்த காட்சி படம் பார்ப்பவர்களை உருக வைக்கும் மிரள வைக்கும் நடிப்பு.

ராமச்சந்திரன்

சில காட்சிகளே வந்தாலும் நினைவில் நிற்கும் கதாபாத்திரம். நடிப்பில் மிரட்டி விடுகிறார் அவருடைய உருவமும் பெண் பித்தனாக ,அவரைக் காட்டி இருக்கும். இயக்குனரின் புத்திசாலித்தனமும் படத்திற்கு வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. படம் முடியும் பொழுது கூட அவரை காட்டி டிவிஸ்ட்வைத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர்.

மற்றும் நாயகன் அப்பாவாக ,நிழல்கள் ரவி, அவர் வரும் காட்சிகள் மகனுக்காக கண்ணீர் விடும் காட்சிகள் உருக்கமாக இருக்கிறது.

கொலையை துப்புதுலுக்கும் மேல்மட்ட காவல் துறை அதிகாரியாக பாய்ஸ் ராஜன், ஆகியோர் நடிப்பு மற்றும் கொலை வழக்கில் துப்பு துலக்கும் அதிகாரிகளாக நடித்திருபவர்கள். அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மற்றும் சாந்தி டீச்சராக வருபவர், ப்ரீத்தி வேலை செய்யும் அலுவலகத்தைச் சார்ந்தவர்கள், என எல்லோரும் தங்கள் அனுபவம் நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலு செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் கரண் பி.க்ருபா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இவர் கன்னடத்தில் ஐந்து வெற்றி படங்களை கொடுத்தவர் படத்தில் பாடல்கள் உருக வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல் ஆக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இசை ஒரு பக்க பலம் என்றால் அது மிகையாகாது.

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸின் கேமரா, சிறிய அறையில் நிகழும் கொடூரமான காட்சிகள் மூலம் பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது,

ஒவ்வொரு காட்சிக்கும் அவர் வைத்திருக்கும் கேமரா கோணம் மிரள வைக்கிறது சஸ்பென்ஸ், திரில்லர் ,படத்துக்கு ஒளிப்பதிவு எவ்வளவு முக்கியம் என்பதை ஒளிப்பதிவாளர் உணர்ந்து படமாக்கி இருக்கிறார் .இரவு நேர காட்சிகளை திகில் ஊட்டும் வண்ணம் படமாக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

இயக்குனர்

ஒரு சஸ்பென்ஸ், திரில்லர், படத்தை எப்படி மக்களுக்கு கொடுத்தால் மக்கள் ரசிப்பார்களோ , அதை அற்புதமாக கொடுத்திருக்கிறார் அவர் கதை சொன்ன விதமும், நாயகனை கையாண்ட விதமும், தமிழ் சினிமாவுக்கு புதிய தோற்றத்தை தருகிறது.

அடுத்து என்ன நடக்கும்? என்கிற பாணியில் அவர் திரைக்கதையில் மாயாஜாலம் செய்திருக்கிறார்.

ஒரு புது நடிகரை எப்படி கையாண்டால் மக்கள் ரசிப்பார்களோ? அதை திறமையாக செய்திருக்கிறார். கிரைம், திரில்லர் ஜானராக, இருந்தாலும், திரைக்கதையில் குற்றத்தை புதுவிதமாக சொல்லி இருக்கும் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங் எவ்வளவு பாராட்டினாலும் தகும்

படத்தொகுப்பாளர் எஸ்.கமலக்கண்ணன், யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்து படத்தை சுவாரஸ்யமாக , விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார். இவரின் படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியை திறம்பட செதுக்கியிருக்கிறார். பெண் காணாமல் போகும் சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு மாறுபட்ட கோணத்தில் நகரும் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்காக, படத்தொகுப்பு பாராட்ட வேண்டும்

மற்றும் படத்தின் வெற்றிக்காக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள். கெவியாவின் காஸ்டியூம், தயாரிப்பு நிர்வாகி ஹாசினி பவித்ரா , ஒப்பனையாளர் ஏர்போர்ட் ராஜா, பாடல்கள் எழுதியுள்ள நோவா ஆம்ஸ்ட்ராங், மற்றும் கிரீஸ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

நடன அமைப்பாளர் வர்தா என எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான பணியை செய்து ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர்கள் திரு. சுரேஷ் சந்திரா அவர்கள், திரு . அப்துல் நாசர் அவர்கள், மக்களிடம் நல்ல முறையில் படத்தை கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த படம் தமிழ் சினிமாவில் தற்போது கிரைம், திரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில்

குற்றம் புதிது ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது .

வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷