ஒரு வெற்றி படத்தின் முன்னோட்ட விழாவாக இருந்தது காந்தி கண்ணாடி பட பிரஸ்*மீட்

நடிகர் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின்பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்தும் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பாலாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்.

தற்போது, இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் . பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோரின் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த விழாவில் தொகுப்பாளினி கவிதா அவர்கள் வரவேற்க இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் ,

நடிகை அர்ச்சனா அவர்கள், இயக்குனர் பாலாஜி சக்திவேல், மதன் என பலரும் இப்படத்தை பற்றி பேசினார்கள்

இப் படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் இசை அமைத்துள்ளார்.

பாலா தனது நடிப்பு, நகைச்சுவை தன்மையுடன் அவரது திறமையை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வெளிக்காட்டி பிரபலமானவர் KPY பாலா. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார். தனக்கென ஒரு முக பாவனை, உடலமைப்பு , கவுண்டர் வசங்களை பேசினார்.

நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் இவரால் முடிந்த உதவியை பல மக்களுக்கு செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்சின் மாற்றம் அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தற்பொழுது பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை வைபவின், ரணம், அறம் தவறேல், திரைப்படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்கிஇருக்கிறார் படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு இந்த படத்தில் தனது பங்களிப்பை பற்றி பேசினார்

பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு காந்தி கண்ணாடி என தலைப்பு வைத்துள்ளனர். தன்னுடைய உருவத்தை வைத்து கேலி செய்தவர்களின் முன்னிலையில் பாலா கதாநாயகனாக நிற்கும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்று நல்ல வரவேற்பு பெற்றது

இந்த விழாவில் நடிகர் பாலா பேசும்பொழுது..

எல்லோருக்கும் வணக்கம் என்ன பேசறதுன்னு, தெரியல நம்ப படமா? நம்ம நடிச்ச படமா? என்று பயமா இருந்துச்சு நான் இங்கே நிக்க முதலில் முக்கியமான காரணம் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் தான் நாம் செய்யும் காரியத்தை கொண்டு போய் சேர்க்கிறது நீங்க தான், பாசிட்டிவான விஷயங்களா எழுதி என்ன கொண்டு போய் சேர்த்து இருக்கீங்க

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! கவிதாஅக்காவுக்கு நன்றி! காரைக்கால் என்கிற ஒரு ஊர்ல பிறந்து வந்திருக்கிறக்கேன். எங்க அப்பா அம்மாவுக்கு தான் நன்றி சொல்லணும்! அமுதவாணன் அண்ணனுக்கு நன்றி யார் என்னன்னு தெரியாத பையனை 12 வருஷமா ஆதரவு காட்டிட்டு இருக்காரு நான் இங்கே ஸ்டேஜ்ல நிக்கிறதுக்கு அவர்தான் முக்கிய காரணம். அவர் மனைவியான அண்ணிக்கும் நன்றி

கலக்கப்போவது யாரு பண்ணி இருக்கிறேன், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வந்து நிறைய படங்கள் பண்ணி இருக்கேன் 18 படங்கள் நடிச்சு இருக்கேன் .ஆனா படத்தில் வந்திருக்காது நடிக்கிறோம் ஒன்னுமே வரலையே
என்று மனசு வலிக்கும்

டைட்டில் கார்டில் பெயர் இருக்கும் படத்துல நாம் இல்லையேன்னு ரொம்ப யோசிச்சி இருக்கேன்

ஏழு எட்டு வருஷத்துக்கு முன்னால நான் சின்ன சின்ன வேடத்தில் நடிச்சிட்டு இருந்தேன் அப்போ இயக்குனர் ஷெரிங அண்ணன் உதவி இயக்குனராக இருந்தார்

ஒரு நாள் பைக்ல வரல, கேப்ல தான் வந்தேன் அப்ப அவர்கிட்ட கிண்டியில் என்னை இறக்கிவிட முடியுமா என்று கேட்டேன் ,லீ மெரிடியன் ஹோட்டல் முன்னால ஒரு டீக்கடையில் இரண்டு பேர் உக்காந்து பேசினோம்

அப்போ லைட்டா மழை தூரிட்டு இருக்கு அடுத்து என்னடா பண்ண போற என்று கேட்டார். பொது சேவைகள் தான் பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னேன்

சினிமாவில் என்ன பண்ண போற என்று கேட்டார் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்

நானும் கதை எழுதிட்டு இருக்கேன் என்று சொன்னார்

உடனே அவரிடம் நான் கேட்டேன் கேட்டேன் அஞ்சு சீன் 6 சீன் ஹீரோவோடு வர்ற மாதிரி லவ்வை சேர்த்து வைக்கிற மாதிரி எனக்கு கதைபண்ணுங்க ன்னு கேட்டேன் சரிடான்னு சொன்னாரு

நிறைய படங்களுக்கு என்னை ஹீரோ பிரண்ட்டா நடிக்க அனுப்பி வச்சாரு

இந்த பையனா இவன் எப்படி ஹீரோவா பிரெண்டா வருவான் ஹீரோ கொஞ்சம் அழகா இருக்காரு கொஞ்சம் கூட அழகா வேணாமா என்று சொண்ணாங்க

ஒரு நாள் போன் பண்ணாரு நான் ஒரு கதை சொல்லவா என்று கேட்டார் என்ன கேரக்டர் என்று கேட்டேன்

நீயே ஹீரோவா பண்ணலாம் என்றார் என்ன வச்சு ஹீரோவா பண்ணுவியாண்னே என்று கேட்டேன்

லாரன்ஸ் மாஸ்டர் கூட ஒரு ஷோ பண்ணிட்டு இருந்தேன் அப்போ அவர் உனக்கு என்ன ஆசை என்று கேட்டார் நடக்குமா நடக்காதுன்னு தெரியாது நான் ஹீரோவா ஆகணும்னு சொன்னேன்

அவர் நிச்சயம் நடக்கும் நானே ஹீரோ ஆயிட்டேன் நீயே ஆக முடியாது என்று
சொன்னாரு அந்த வார்த்தை எவ்வளவு பேர் அப்படி சொல்லுவாங்க தெரியாது. கேமராவை பார்த்து சொன்னாரு என் பிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க

ஹீரோவாஆக ஒரு விஷயம் முக்கியமா பண்ணனும்டா லுக்கெல்லாம் தாண்டி நீ நல்லா இருந்தா 30 40 குடும்பம் நல்லா இருக்குன்னு சொன்னாரு அதுக்கு பின்னால ஷெரீப் அண்ணா நீ ஹீரோவா நடிக்க ஒரு புரொடியூசர் ஒத்துட்டாரு அப்படின்னு சொன்னாரு நான் ஹீரோவா அவர் ஒத்துகிட்டாரா அப்படின்னு கேட்டேன்

ஒத்துக்கிட்டாரு தூக்கிட்டு வாங்க செல்லத்தை அப்படி சொன்னாரு
அப்படி வந்ததுதான் காந்தி கண்ணாடி படத்தின் வாய்ப்பு அவருக்கும் நன்றி

அப்பா அம்மாவே அஞ்சு லட்சம் கொடுக்க முடியாத என் ஃபேமிலி சுச்சுவேஷன் எப்படி ஒரு தயாரிப்பாளர் கோடிக்கணக்கான பணத்தை போடுறாரு அப்படி பட்ட தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது தேங்க்யூ சோ மச்

கத கேட்டு முடிச்ச பிறகு காந்தி கேரக்டர் சூப்பரா இருக்கு காந்தி கேரக்டர் பவர்ஃபுல்லா இருக்கு யாருன்னு பண்றாங்க என்று நான் கேட்டேன்

பாலாஜி சக்திவேல் சார்கிட்ட கேளுங்க கதை நல்லா இருக்கும் அவர்
வந்தார்னா படமே பெருசாயிடும் என்று சொன்னேன்

ஷெரீப் அண்ணா கதை சொன்னாரு பாலாஜி சக்திவேல் சார் கதையை கேட்டு நான் பண்றேன் ஹீரோ யார் என்று கேட்டார் பாலா என்று சொல்ல கதை சூப்பரா, இருக்கு பாலா என்றால் ஓகே என்று சொன்னார்

பாலாஜி சக்திவேல் மிகப்பெரிய லெஜெண்ட் அவர் பண்ணாத ஒரு படமே கிடையாது. சின்ன பையன் நம்பி பெரிய உதவி செஞ்சிருக்காரு தேங்க்யூ சார்
நீங்க செஞ்ச உதவி நான் மறக்க மாட்டேன் இந்த படத்தின் ஹீரோவே அவருதான் எனக்காக நடிச்சு கொடுத்ததற்கு நன்றி

அடுத்து கண்ணம்மா கேரக்டர் மெயின் கேரக்டர் அர்ச்சனா மேம் கதையை கேட்டவுடன் ஓகே சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும்
எவ்வளவு நன்றி சொல்றதுன்னு தெரியல ரெண்டு பேரும் படம் பார்த்துட்டு சொன்ன வார்த்தைகள் ரொம்ப நன்றி

அடுத்து ஹீரோயின் வேணும்னு சொல்லும்போது எல்லாரும் வந்து கதையை கேப்பாங்க டைரக்டர் சொல்லுவாரு வருவாங்க கதை சூப்பரா இருக்கு ஹீரோ யார் என்று கேட்பார்கள் பாலா என்று சொல்ல பாலாவா? சொல்றேன்னு சொல்லிட்டு போயிருவாங்க

50 பேர் ரிஜக்ட் பண்ணிட்டாங்க நம்ம அவ்வளவு பெரிய ஆள் இல்ல கடைசி யா வந்தவங்க தான் நமீதா கிருஷ்ணமூர்த்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கதையை கேட்டு , ஹீரோ பாலா என்று சொன்னவுடனே கண்டிப்பா பண்றேன்னு சொன்னாங்க மறக்க மாட்டேன்
ரொம்ப நன்றி

சக்தி பிலிம் பேட்டரி இந்த படத்தை வாங்கி வெளியிடுறாங்க

சக்தி வேல் சார் படம் பாக்குறாங்க என்று சொன்ன உடனே நம்பவே முடியல எல்லாரும் பாத்துட்டு சொல்றேன்னு போய்டுவாங்க இந்த படத்தை பற்றி 15 நிமிஷம் பாராட்டி பேசினாரு எதுவுமே இல்லாத ஒரு ஹீரோவுக்கு புது பையனுக்காக, ஒத்துக்கொள்ள வந்ததற்கு ரொம்ப நன்றி சார் !

எல்லோருக்கும் நன்றி கிஷோர், சதீஷ், மாரி, தமிழ் பிரதர் ,இசக்கி பிரதர், ல்லோருக்கும் நன்றி

உதய் சார்தான் அர்ச்சனாமேம், பண்ண நல்லா இருக்குன்னு சொல்லிகூட்டி கொண்டு வந்தார் அ வருக்கும் நன்றி

ரேகா மேடம் உங்களுக்கு ரொம்ப நன்றி ஒவ்வொரு இண்டர் வியூ நடக்கும் போதும் தரையில் உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தாங்க
இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு உங்களுக்கும் நன்றி

என் கூட இருந்த நாலு அஞ்சு ஃப்ரண்ட்ஸ் எல்லாம் நிறைய வேலை செஞ்சிருக்காங்க மணிகண்டன், விஷ்வா, அபி இப்படி எல்லோருக்கும் நன்றி என்றார்

மொத்தத்தில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. நிச்சயம் வெற்றி பட்டியலில் இப்படம் இடம் பிடிக்கும் படத்தின் டிரைலர், மற்றும் பாடல்கள், ரசிக்க வைத்தது உருக வைத்தது , தமிழ் சினிமாவில் ஹெல்ப்பிங் ஸ்டார்” பாலா இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய உயரம் தொட கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது .

:இயக்குனர் ஷெரீப் பேசும் போது “காந்தி கண்ணாடி படத்திற்காக பாலா தன்னுடைய உடல் எடையை அதிகரித்து நடித்திருக்கிறார். 50 கிலோ இருந்த அவர் இப்படத்திற்காக நான்கு மாதங்களில் 75 கிலோ வந்தார். இந்தப்படத்தின் கதையை ஏராளமான ஹீரோயின்களிடம் சொல்லி இருக்கிறேன். கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என சொல்வார்கள். ஹீரோ பாலா என்று சொன்னதும், எனக்கு டேட்ஸ் இல்லை, கொஞ்சம் டைம் வேணும் என பல்வேறு காரணங்களை சொல்லி நிராகரித்துவிடுவார்கள். சிலர் அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு, பின்னர் போன் போட்டால் எடுக்கவே மாட்டார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு லேட் ஆக தொடங்கப்பட்டதற்கு ஹீரோயின் கிடைக்காததும் ஒரு காரணம் தான். பாலாவுடன் நடிக்க மறுத்து 50 பேர் விலகிவிட்டார்கள். 51வது நபராக வந்த நமீதா கிருஷ்ணமூர்த்தி தான் இப்படத்தின் நாயகி ஆனார். நான் ஒரே நாளில் 12 ஹீரோயின்களுக்கெல்லாம் கதை சொல்லி இருக்கிறேன். அனைவரும் பாலா ஹீரோ என்று சொன்னதும் ரிஜெக்ட் பண்ணி இருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கூறி இருந்தார் இயக்குனர்

காந்தி கண்ணாடி மிகப் பெரிய வெற்றியடையும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🌷🙏