இயக்குனர் பாலாஜிசக்திவேல் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார் அவருக்கு , தனது காதல் மனைவி அர்ச்சனாவி டம் மனம் நிறைந்த காதல்
இதற்கிடையில் 60-ம் திருமணம் செய்துகொள்ள அர்ச்சனா ஆசைப்படுகிறார்.
இருவரும் அவ்வளவு மனம் ஒத்த தம்பதிகளாக இருக்கிறார்கள்
அதை நடத்தி வைக்க தங்களுக்கு பிள்ளைகள் இல்லையே என வருத்தமும் கொள்கிறார். மனைவியின் ஆசையை பூர்த்தி செய்தே தீருவது என்ற இலக்கில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பாலாவை சந்திக்கிறார் பாலாஜி சக்திவேல்.
இதை வைத்து கல்லா கட்ட நினைக்கும் பாலா, தொகையை ஜாஸ்தியாக சொல்கிறார். கோவையில் இருக்கும் நிலத்தை விற்று பணத்தை திரட்டுகிறார் பாலாஜி சக்திவேல். அங்குதான் படத்தின் டுவிஸ்ட் ஆரம்பம் ஆகிறது
இதற்கிடையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வர, பாலாஜி சக்திவேலிடம் இருக்கும் பணம் அனைத்தும் செல்லாமல் போய்விடுகிறது. மகிழ்ச்சி அடைகிறார் பாலாஜி சக்திவேல். அதன் பின்னர் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய துடிக்கும் பாலாஜி சக்திவேலின் ஆசை நிறைவேறியதா? அவரின் அறுபதாம் கல்யாணம் நடந்ததா? பாலாவின் பணத்தாசை என்ன ஆனது? பாலாஜி சக்திவேலுக்கு உதவி செய்தாரா இல்லையா?
அமுத வாணன் உதவி செய்தாரா ? அர்ச்சனாவின் ஏக்கம் தீர்ந்ததா? என்ற கேள்விகளுக்கு காந்தி கண்ணாடி சொல்லும் மீதி கதை.
பாலா, முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
நல்ல கதையை தேர்வு செய்துள்ளார் அவருக்கு நீ படிப்படியாக முன்னேற்றம் தான்
மனம் மாறி அவர் திருந்தும் காட்சிகளில் எதார்த்த நடிப்பை அள்ளி கொட்டியிருக்கிறார்.
பணத்துக்கு ஆசைப்படாதவர்கள் யார் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு தான்
கதாநாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி, அழகாலும், நடிப்பாலும் கவர்கிறார்.
துரு துருவென காதல் காட்சிகளிலும் பாலாவுக்கு ஆலோசனை சொல்லும் காட்சிகள் இன்று அசத்தி இருக்கிறார்
பாலாஜி சக்திவேலும், அர்ச்சனாவும் போட்டிபோட்டு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ‘அதான் நீ இருக்கேல…’ என்று பாலாஜி சக்திவேல் ஒவ்வொரு முறையும் அர்ச்சனாவிடம் சொல்வது அழகு.
பாலாஜி சக்தி வேலுக்கு அடிக்கடி குளோசப் பைட்டு அவர்களின் நடிப்பு பிறந்தது இன்னும் மெருகூட்டியிருக்கிறார்.
அர்ச்சனா தனது நடிப்பு திறமையை மேலும் மேலும் மெருகேற்றும் வண்ணம் செய்து கொண்டிருக்கிறார் இந்த படத்தில் இன்னும் பிரகாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
ஜீவா சுப்ரமணியம், ஆராத்யா, ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன்
என அனைவரும் தங்கள் பங்குக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்
பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகளும், விவேக்-மெர்வின் இசையில் பாடல்களும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. படத்தின் இறுதியில் ஒலிக்கும் யுவன் சங்கர் ராஜாவின் குரல் உள்ளத்தை வருடுகிறது. எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதை சீராக இருக்கிறது .
படத்தொகுப்பு ,ஆர்ட் டைரக்டர், ஒபபனையாளர், காஸ்டியூமர், எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்
பாலாஜி சக்திவேல் அர்ச்சனாவின் ஒவ்வொரு உணவையும் பாராட்டுவது இன்றைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். வயதான தம்பதியின் காதல் வாழ்க்கையை, அழகாக சொல்லி இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் பாடம் எடுத்திருக்கிறார்,
அன்பு ஒன்றுதான் இந்த உலகத்திற்கு சொந்தமானது கணவன் மனைவி இருவரும் அன்பாக இருந்தால் உலகத்தில் எதையும் வெல்லலாம் என்பதற்கு இந்த படம் உதாரணம்
இயக்குனர் ஷெரீப். நல்ல கதையை தேர்வு செய்து அதற்கான நடிகர்களை நடிக்க வைத்து படத்தை வெற்றி படமாக்கி இருக்கிறார் கிளைமேக்ஸ் காட்சி மனதை கனமாக்குகிறது.
மொத்தத்தில் இந்த காந்தி கண்ணாடி விலை உயர்ந்தது
