*மதராஸி* திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ஸ்ரீ.லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , விக்ராந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் மதராஸி. படத்திற்கு என்ன விமர்சனம்

: *கதை களம்*

தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னை நகருக்குள் வரும் துப்பாக்கிகள், ஒரு கேஸ் தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜு மேனன் தலைமையிலான குழு, தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவற்றை அழிக்க முடிவெடுக்கிறது. உள்ளே சென்று, அவற்றை வெடிக்க ‘சூசைட் ஆபரேஷனுக்கு’ ஏற்ற ஆளைத் தேடுகிறார் பிஜு மேனன்.
இந்நிலையில், காதலி மாலதியின் (ருக்மினி வசந்த்) பிரிவால் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளிலிருக்கும் சாமானியரான ரகுராமை (சிவகார்த்திகேயன்) இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்த முடிவெடுக்கிறார் பிஜு மேனன். சாவதற்கு மகிழ்ச்சியாக ரகுவும் சம்மதிக்கிறார். இதன் பிறகு அவர் எடுக்கும் ஆக்ஷன், காதல் அவதாரங்களே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘மதராஸி’ திரைப்படத்தின் கதை.

சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் சிவகார்த்திகேயன் கலக்கி இருக்கிறார். காதல், ஆக்சன் என்று எல்லா காட்சிகளிலும் நடித்திருந்தாலும் நகைச்சுவைக்கு ஆட்கள் இல்லையே என்ற குறையும் சிவகார்த்திகேயன் நீக்கி இருக்கிறார். படத்தில் கதாநாயகியாக
ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன்களாக வரும் வித்யுத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் ஆகியோர் சிறப்பாக தங்களுடைய நடிப்பால் மிரள வைத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தன்னுடைய இசையின் மூலம் அனிருத் ஆட்டம் போட வைத்திருக்கிறார். ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவில் இருந்தாலும் இயக்குனர் அதை பரபரப்பாக கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர்
ஏ. ஆர். முருகதாஸிற்கு ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. ஆக்சன், சோசியல் மெசேஜ் என அனைத்தும் கலந்து கலவையாக தான் படத்தை எடுத்திருக்கிறார்
இந்த படம்.ஆக்ஷன் அட்டகாசம். மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளது