கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் “பேட் கேர்ள்”. அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ள
இப்படத்தின் விமர்சனம்
*கதைக்களம்*
ரம்யா படிப்பு வரவில்லை, பள்ளி பருவத்திலேயே தன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் காதல், ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும், இது பெற்றோர்களுக்கு தெரிந்து வழக்கம் போல் காதலுக்கு முட்டுக்கட்டை வருகிறது.
அம்மா, ரம்யாவை புதிய ஸ்கூலில் சேர்க்க, அங்கு அவர் முதல் நாள் செல்லும் போதே இந்த ஸ்கூல் வரைக்கு தான் உன் பேச்சை எல்லாம் கேட்பேன், கல்லூரியில் என் இஷ்டம் எனக்கு பிடித்ததை செய்வேன், உனக்கு பிடிக்காததையும் செய்வேன் என்று செல்கிறார்.
அதற்கு தகுந்தது போலவே அங்கு ஒரு பையனுடன் கட்டில் வரை அவர்கள் உறவு இருக்க அந்த பையனோ சீனியர், கல்லூரி முடிந்து ரம்யாவை கழட்டி விட பார்க்கிறான்.
இதை அறியாத ரம்யா அவனிடம் வழிந்து வழிந்து பேச ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலைக்கு செல்ல, பிறகு இருவருக்கும் கடும் மோதல் வர, ரம்யா தன் காதலை அதுவும் சரியான காதலை கண்டுப்பிடித்தாளா என்பதே மீதிக்கதை.
ஒரு பெண் சுந்ததிரமாக இந்த அடைப்பட்ட உலகத்தில் வாழ நினைக்கிறாள்,
அவளின் டீன் ஏஜ்
எண்ணம் அவளை எங்கெங்கு கொண்டு செல்கிறது,
என்பதை இயக்குனர் வர்ஷா எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் எடுத்துள்ளார்.
ஒரு கசப்பான மருந்து தேன் தடவி கொடுத்திருக்கிறார் இதில் நடித்திருக்கும் நாயகியின் துணிச்சல் பாராட்டத்தக்கது
அம்மாவாக நடித்திருக்கும் சாந்தி பிரியா பட்டையை கிளப்பி இருக்கிறார்
சரண்யா நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது
*இயக்குனர் வர்ஷா*
15 வயதில் காதலித்து அதை ஏற்காத பெற்றோர்கள், அதனால் அவள் எடுக்கும் முடிவு என்று தொடரும் படத்தில் இத்தகைய காலத்தில் பெண்கள் சுதந்திரத்திற்கு பெண்களே எப்படி தடையாக உள்ளார்கள் என பாட்டிகள், அம்மாக்கள் வழியாக இயக்குனர் காட்டியுள்ளார், சுதந்திரம் என்பது தலைமுறைக்கு தலைமுறை பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கிறது, பாட்டி வீட்டில் இருந்தார், அம்மா வேலைக்கு செல்கிறார் நான் இன்று சுந்திரமான முடிவை எடுக்கிறேன், என் அடுத்த தலைமுறை இதைவிட அனைத்து சுந்ததிதத்தையும் பெற்று தரவேண்டும் என்று கதாநாயகி ரம்யாவின் வழியே காட்டியுள்ளார் இயக்குனர் ஒரு பெண் இயக்குனர்கள் மட்டுமே இத்தகைய புரட்சிகரமான கதையை கொடுக்க முடியும் அதை வர்ஷா துணிந்து கொடுத்திருக்கிறார் துணிந்து செய்து இருக்கிறார் இயக்குனர் பாலசந்தர் வரிசையில், இன்னொரு பெண் இயக்குனர்
நாயகி
காதல், மோதல், பிரிவு, வலி இதெல்லாம் வரும் போகும் நாம் அடுத்தக்கட்டத்திற்கு நகந்துக்கொண்டே இருக்க வேண்டும், நமக்காக காலம் நிற்காது என்பதே ரம்யாவின் பயணம், பல காதல்களை கடக்கிறார், ஆனால், கடைசியாக அவருக்கான காதல் என்ன என்பதை கடைசியில் கொஞ்சம் உணர்கிறார்.
இப்படி பல முற்போக்கு விஷயங்களை ேசி இருக்கிறது
.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு மிக லைவ்-லியாக உள்ளது, அதோடு இசை அமித் திரிவேதி அவரும் சிறப்பாகசெய்துள்ளார்.
தைரியமாக இப்படி ஒரு களத்தை திரைப்படமாக காட்டிய விதம்.
ஹீரோயின் நடிப்பு.
நன்றாக இருக்கிறது
காஸ்ட்யூம் நன்றாக இருக்கிறது, ஆர்ட் டைரக்டர் அற்புதம், கல்லூரி, வீடு, என அசத்தி இருக்கிறார்
இசை பாராட்டத்தக்கது ,
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது ,
ஒப்பனையாளர்
பணி அந்த மரு. விஷயத்தில் இருந்து தத்துவமாக இருக்கிறது .
மொத்தத்தில் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புரட்சியான படம். புதுமையான படம். பெண்ணியம் சார்ந்த கதை என்பதால் பெண் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நிச்சயம் இந்த கேர்ள் குட் கேர்ள் தான்
