தணல் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் ‛தணல்’. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை பிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர் தயாரித்து இருக்கிறார்

‘வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘தணல்’. காப் த்ரில்லர் கதையாக வந்துள்ள’தணல்’ படத்தில் லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும் அஷ்வின் காக்குமானு எதிர்மறையான கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை களம்

படத்தின் ஆரம்பத்தில் வங்கியில் பணத்தை திருடி கொண்டு தப்பிக்க நினைத்த மூன்று இளைஞர்களை, போஸ் வெங்கட் தலைமையில் இயங்கும் காவல்துறை அதிகாரிகள் என்கவுண்டர் செய்கிறார்கள். அதன் பிறகு, அந்த காவலர்களை, பழிவாங்க அஸ்வின் கேங், ஏழு காவல்துறை அதிகாரிகளை ஜீப்புக்குள் வைத்து எரித்துக் கொள்கிறார்கள்.

ஆரம்பமே படம் ஜெட் வேகத்தில் வேகத்தில் ரெக்கை கட்டி பறக்கிறது.

போலீஸ் வேளையில் ஜாயின் பண்ண ஆர்டரோடு, காவல் நிலையம் வரும் ஆறு இளைஞர்களை அந்த ஏரியா காவல்துறை அதிகாரி காக்க வைத்து,இரவு ரவுண்ட்ஸ் அனுப்புகிறார்.

ஆறு பேரும் இரவில் ரவுண்ட் செல்லும் பொழுது, சுரங்கத்துக்குள் இருந்து மேலே வரும் ஒரு திருடனை துரத்தி செல்கிறார்கள்.

அந்த திருடன் ஸ்லம்பகுதியில் தணலில்ஓடி, ஒளிகிறான். அவனை தேடி ஆறு பேரும் உள்ளே நுழைந்ததும் இந்த ஆறு பேருக்கு செம அதிர்ச்சி, படம் பார்ப்பவர்களுக்கும், அந்த பகுதியில் இருக்கும் அஸ்வின் கேங்க், இரண்டுபேரை அதர்வா உடன் வந்த போலீஸை ,வெட்டி சாய்க்கிறது.

என்ன நடக்கிறது ஏன் இப்படி இதற்குள் வந்து சிக்கிக் கொண்டோம் என்று அதர்வா நண்பர்கள் திகைத்து நிற்க, யாரும் எதிர்பாராத வகையில் திரைக்கதை செல்கிறது. இப்படித்தான் நடக்கும் என்ற யாரும் யூகிக்க முடியாத திரில்லர் பாணியில் படம் விறுவிறுப்பாக பரபரப்பாக செல்கிறது.

அந்த ‘தணல்’பகுதியிலிருந்து அதர்வாவும், அவருடன் வந்த போலீஸ் நண்பர்களும் தப்பித்தார்களா?

அதர்வாவின் காதலி லாவண்யா திரிபாதி அங்கு எப்படி வந்தார்?

அஸ்வின் யார்? அதர்வாவுக்கு அவர் ஏன் செக் வைக்கிறார்?

ஆஸ்பத்திரியில் இருக்கும் அதர்வாவின் அம்மா உயிர் பிழைத்தாரா?

மிஞ்சி இருக்கும் போலீஸ் நண்பர்களை அதர்வா காப்பாற்றினாரா?

வங்கி கொள்ளைக்கும் அதர்வாவுக்கும் என்ன சம்பந்தம்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லி ஒவ்வொரு முடிச்சையும் இயக்குனர் அவிழ்க்கும் பொழுது சூப்பரான கதைக்களமாக ஆனால் நம் கண் முன் தானாக “செந்தணலாக கொழுந்து விட்டு எரிகிறது. பரபரப்புடன் விறுவிறுப்பாக திரில்லர் பாணியில் சொல்லி இருக்கும் படம் தணல்.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது மனிதம் மனதுக்குள் ஈரத்தை கசிய விடுகிறது. இதுதான் படத்துக்கு கிடைத்த வெற்ற

அதர்வா

த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘தணல்’ படத்தில் , ‘100’, ‘ட்ரிக்கர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.
டி .என். ஏ வெற்றி படத்தை அடுத்து இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமைந்திருக்கிறது.

லாவண்யா திரி பாதியை காதலிக்கும் காட்சிகள் இளமை ரசம் கொட்ட நடித்திருக்கிறார்.

அவர் நண்பரான ஷாரா ஐடி மணியாக, காதலியை கணக்கு பண்ண கொடுக்கும் ஐடியா எல்லாம் சொதப்புவது செம காமெடி, தணல் பகுதியில் நுழைந்த பிறகு அதிலிருந்து வெளியே வர முடியாமல் வில்லன் கேங் உடன் மோதும் சண்டை காட்சிகளில் அணல் பறக்கிறது.

தன்னால்தான் அம்மாவுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்று கலங்கும் போது எமோஷனில் கொடி கட்டி பறக்கிறார்.

தன் கண் முன்னால் ஒவ்வொரு போலீஸ் நண்பர்களும் எதிரிகளின் கத்திக்கு பலியாகி தலை சாயும் பொழுது கலங்கும் இடம் நடிப்பு சூப்பர்.

கிளைமாக்ஸ் காட்சியில் பல போலீஸ் உயிர்களை காப்பாற்ற அதர்வா எடுக்கும் முடிவு சூப்பர்.

கிளைமாக்ஸ் காட்சியில் உயிரோடு இருக்கும் என்ன ஹீரோவாக்கி அவர்களை மறந்து விடாதீர்கள் என்று காவல்துறை அதிகாரியிடம் அதர்வா சொல்லும் அந்த ஒத்தை வசனம் படத்தை தூக்கி நிறுத்தி விடுகிறது

நாயகி: லாவண்யா திரிபாதி

காதல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார் அதன் பிறகு வில்லனிடம்சிக்கி கொண்டு தப்பிக்க முடியாமல் அவதிப்படுகிறார்.மற்றும் : அதர்வா நண்பர்களாக வரும் ஷா ரா, செல்வா, பரணி, , பாரத், அதர்வா அப்பாவாக வரும் அழகம் பெருமாள் , காவல்துறை அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், மற்றும் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் லட்சுமி பிரியா ,எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

தொழில் நுட்ப கலைஞர்கள்

சக்தி சரவணன் ஒளிப்பதிவை அற்புதமாக கையாண்டு உள்ளார்.

சிலம்’ பகுதியில் இரவு நேர காட்சிகளில் துல்லியமான ஒளிப்பதிவு படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. சுரங்கத்துக்குள் போலீஸ் அதிகாரிகள் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் ஆகட்டும், சிலம் பகுதியில் சண்டை காட்சிகள் ஆகட்டும், ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார். படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு தான்.

கலைவாணன் படத்தொகுப்பை செய்துள்ளார் கச்சிதமான படத்தொகுப்பு படம் விறுவிறுப்பாக பரபரப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளர் பங்கு மகத்தானது

இயக்குனர் ரவீந்திர மாதவா

ஒரு வித்யாசமான கதைக்குள் சந்தர்ப்ப சூழ்நிலைதான் நம்மை எதிரிகள் ஆக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு இயக்கி இருக்கிறார். ஒவ்வொருவரும் பார்வையிலும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது என்பதை திரைக்கதை ஆக்கி, படத்தை தந்திருக்கிறார்.
காதல் ,காமெடி, திரில்லர் ,என கலந்த கட்டி ஒரு வெற்றி படத்துக்கு என்னென்ன தேவையோ அதை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.

படத்தில் இற்றை சூழலுக்கு ஏற்றவாறு தேவையான விஷயங்களையும் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆர்ட் டைரக்டர் ஐயப்பன்,

அவர் இந்த படத்திற்காக உழைத்த உழைப்பு பாராட்டத்தக்கது. இந்த ஸ்லம் ஏரியாவை வடிவமைத்தது, சுரங்க பாதை மற்றும் காவல் நிலையம் ,அதர்வா வீடு என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டரின் பணி அற்புதமாக இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்

அதிக பாடல்கள் இல்லாவிட்டாலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

சண்டை பயிற்சியாளர்

சக்தி சரவணன் கடும் உழைப்பு, அதர்வாவும் வில்லனும், மோதும் இடங்களில் அனல் தெரிக்கிறது .ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மிகவும் பலமாக அமைந்திருக்கிறது.

ஹரிகிரன் நடனப் பயிற்சி ரசிக்க வைக்கிறது .

மற்றும் படத்தில் பணி புரிந்த ஒப்பனையாளர், டி .ஐ, செய்தவர்கள் கலர் கரெக்ஷன், செய்தவர்கள். அனைவரின் பங்கும் படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது .

மக்கள் தொடர்பாளர்கள்:

திரு. சுரேஷ் சந்த்ரா அவர்கள் திரு. அப்துல் நாசர் அவர்கள்

மொத்தத்தில் இந்த “தணல்” விவசாயிகளின் வேதனையை பேசியிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளின் கடுமையான உழைப்பு பேசியிருக்கிறது. காவல்துறையில் அனைவரும் ஊழல்வாதிகள் அல்ல, கடமையை செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை பேசியிருக்கிறது. வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்த “தணல்”