காயல் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

ஆணவக் கொலையின், வேதனையை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் .

தமிழ் சினிமாவில் காதல் தோல்வி திரைப்படங்கள்: காதல் தோல்வி அடையும் போது ஏற்படும் வலியும் வேதனையும் தமிழ் சினிமாவில் பல படங்களில் காட்டி இருக்கிறது. இவ்வாறு காதல் தோல்வி மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் படங்கள் உணர்ச்சிகளைக் கொண்டு வைக்கின்றன. காதல் தோல்வியின் உணர்வுகளை எடுத்து, அவற்றை நேர்த்தியுடன் திரைக்கருவியாக மாற்றியுள்ள இந்த திரைப்படங்கள் நம் மனதுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
அப்படி இந்த வரிசையில் வெளிவந்த தரமான படம் “காயல்

ஆதியும் , தேன், இருவரும் காதலிக்கிறார்கள் நாயகியின் அப்பா அசிஸ்டன்ட் கமிஷனர் அவர் பெரியார் வாதி தன்மகள் எந்த ஜாதியில் காதலித்தாலும் அவள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஆனால் நாயகியின் அம்மா நம்ம ஜாதியில் தான் மாப்பிள்ளை வேண்டும் என்று இருவரின் காதலை பிரிக்கிறார்.

அதன் பிறகு நாயகி வேறொருவருக்கு திருமணம் செய்து தற்கொலை செய்து கொள்கிறார்

அதன் பிறகு குற்ற உணர்வில் தவிக்கும் நாயகியின் அம்மா, மனைவி செய்த சாதிக் கொடுமையை கண்டு உருகும் நாயகியின் அப்பா, தன் காதலி இழந்துவிட்டு கலங்கும் நாயகன், நாயகனை கைப்பிடிக்க நினைக்கும் இன்னொரு பெண் கதாபாத்திரம் இப்படி இவர்களை சுற்றி உருவாக்கி உள்ள இந்த படம் ஒரு தரமான பல நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு வாழும் அற்புதமான படைப்பாக தந்திருக்கிறார் இயக்குனர்.

“‘காயல்’ ஒரு ரொமான்டிக், ஃபேமிலி, டிராவல் ஸ்டோரியாக வந்துள்ளது. அதே சமயம் ஆணவக் கொலையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

அம்மா-மகள் இந்த இரண்டு உறவுகளுக்கு அவ்வளவு ஒரு அழகு இருக்கிறது.இந்த
இடைவெளியையும் ‘காயல்’ தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது” –

முத்திரை ”தற்கொலை வேண்டாம் என்று எல்லோருக்கும் சொன்ன பெண் அவளே தற்கொலை செய்து கொள்ளும் போது மனமுடைந்து போவது ஏன்? என்று பேசியிருக்கிறது.

அவளின் அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரம் போகிற பயணத்தில் நினைவுகளாய் காட்சிகள் விரிகின்றன.

அங்கு நடக்கும் கணவன் ,மனைவி பிறகு மகளை காதலித்த காதலன், இந்த மூவருக்குள் நடக்கும் பாச யுத்தம் மனதில் பச்சக்” கொன்று ஒற்றிக் கொள்கிறது.

ஆண் பெண் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று பேசுகிறது. ஒருவரைப் பார்த்தவுடன் அவர் பெயரைக் கேட்டு விட்டு கேட்கிற இரண்டாவது கேள்வி, ‘நீங்க என்ன ஆளுங்க?” என்பதுதான். இப்படிப்பட்ட ஆழ்மன சாதிய வேறுபாடுகளையும் ‘காயல்’ சுட்டிக்காட்டுகிறது.

அழகான காட்சி அமைப்போடு அருமையான வசன உரையோடு ,படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். வாழ்த்துக்கள் மேடம்

நாயகன்

”லிங்கேஷ் ‘கபாலி’யில் பார்த்த நல்ல தமிழ் முகம்.

நல்ல தேர்வு அலட்டல் இல்லாத நடிப்பு அமைதியான பார்வை காதலி தன்னை பிரிந்து விட்டு சென்ற போது மனம் உடைந்து வேறொரு பெண்ணை ஏற்க மறுக்கும் அந்த கதாபாத்திரம் அருமை அதே போல காதலி இறந்து விட்டால் என்று கேள்விப்பட்டு கலங்கி நிற்கும் அந்த சூழ்நிலையிலும் காதலிக்காக அஸ்தியை கொண்டு செல்ல சம்மதிக்கும் போது உயர்ந்து நிற்கிறது அந்த கதாபாத்திரம். வியந்து பார்க்கிறோம்

இப்படி எல்லாம் உறவுகள் ஒன்றோடு ஒன்று இணைய முடியுமா? என்று தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தில் நாயகனுக்கு கிடைத்த அற்புதமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகி காயத்ரி.

புன்னகையோடு இருந்தாலும் கண்ணில் ஒரு மெல்லிய சோகம் பிரமாதமான ரோலில் அவரும் நடித்திருக்கிறார்.

மற்றொரு பெண் தற்கொலை செய்து கொண்டால் என்று அப்பா, அம்மாவிடம் வாதாடும் போது எனக்கு ஒன்று அப்படி நடந்தால் தான் நீங்கள் அந்த அருமை உணர்வீர்கள் என்று சொல்லும் கட்டம் அதன் பிறகு அம்மாவின் வற்புறுத்தலுக்காக சாதிய வன்மத்துக்குள் மூழ்கி கரைந்து போகும் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் இதுவரை பார்க்காத காயத்ரியை நாம் பார்த்து பரவசமடைகிறோம் ஏன் இந்த நடிகைக்கு தமிழ் சினிமா வரவேற்பு கொடுக்கவில்லை என்ற கேள்வியும் நம் முன்னால் எழுதுகிறது.

மலையாளத்தின் அனுமோல், ‘ யமுனா என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக வாழ்ந்து இருக்கிறார் சாதிய திமிரில் தன் மகளுக்கு நடக்கவிருந்த நல்ல வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என்று படம் முழுக்க படபடப் போடும், பரிதவிப்போடும், மிரட்டி நடித்திருக்கிறார்.

அனுமோல் தவிர இந்த கதாபாத்திரத்துக்கு வேறு ஒரு நடிகையை, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவர்களின் நடிப்பு நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் கையில், காயத்ரியன் அஸ்தியை கொடுக்கும் பொழுது அவர் கதாபாத்திரம் இமயமலை அளவுக்கு உயர்ந்து விடுகிறது .

இவ்வளவுதான் வாழ்க்கை இதற்கு எதுக்குடா சாதி? என்று கேட்பது போல அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சைக்காரிஸ்ட் ஸ்ரீதர், என்ற கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் படம் முழுக்க வந்து படத்தில் நடித்த வர்களுக்கும், நமக்கும் ஆறுதல் தருகிறார். தன் காதல் மனைவி தன் குழந்தையை தன் கண்ணில் காட்டாமல் கேரளா சென்று விட்டாள், அதன் பிறகு அவள் ஒரு விபத்தில் சிக்கி பிரைன் டெத் ஆகப்போகிறாள் என்று கலங்கும் பொழுது சூப்பராக நடித்திருக்கிறார்.

ஸ்வாகதா, அமுதா என்ற கதாபாத்திரத்தில் துருதுருவென இவர் கலகலப்பையும், கமர்சியலையும், கொடுத்து ஒரு தலை காதலியாக மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்.

இப்ப திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு பாராட்டப்பட வேண்டிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐசக், அவர்களுக்கு ஒரு சல்யூட்,

காயத்ரி இழந்து, வாடும் ஒரு போலீஸ் அதிகாரியாக ,தன் மனைவியை ஒன்றும் சொல்ல முடியாமல் வெறித்து பார்வையால் என் மகளை கொன்று விட்டாயே ,என்று கலங்கும் அந்த நடிப்பு ஒரு அற்புதமான நடிப்பு , நான் பார்த்த தமிழ் சினிமாவில் ஒரு பெரியார் வாதியாக, நல்ல இதயம் கொண்ட அப்பாவாக தனக்கு வர வேண்டிய மருமகனை இழந்து விட்டோமே என்று லிங்கேசை கண்டு கலங்கும் பொழுதும் அடடா !என்ன அற்புதமான நடிப்பு” உருக வைக்கிறார் மனுஷன் அலட்டல் இல்லை. கத்தவில்லை, கூப்பாடு போடவில்லை, ஒவ்வொரு பார்வையும் அவரின் நடிப்புக்கு சபாஷ் போட வைக்கிறது

தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் இப்படி ஒரு படத்தை தயாரிப்பதற்கு முன் வந்ததற்காக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஸ்டின் கெனன்யா இசையில் படம் முழுக்க தேனாறுகள் ஓடுவது போல காதுக்குள் இனிய கானம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

காதலும், மெல்லிய இசையும் பாடல்களும் பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாடல்கள் ரமேஷ் வைத்யாவும், இயக்குனரும் ,எழுதி இருக்கிறார்கள் ஒவ்வொரு பாடலும் தேன் சுவை போல காதல் கானம் ரசிக்க வைக்கிறது.

கார்த்திக் சுப்பிரமணியன் கேமரா படத்தின் வெற்றிக்கும் அற்புதமான காட்சிகளுக்கும் கடற்கரையோர படப்பிடிப்புகளுக்கும் பிச்சாவரம், ராமேஸ்வரம், பாண்டிச்சேரி, என இதுவரை காணாத லொகேஷன்களில் அசத்தியிருக்கிறது. கேமராமேனுக்கு திருஷ்டி சுத்தி போடுங்கள் மத்திய அரசு நியாயமாக நடக்கிறது என்றால் இந்த கேமரா மேனனுக்கு தேசிய விருது கொடுக்கலாம்.

படத்தொகுப்பாளர் பிரவீன், அற்புதமான படத்தொகுப்பு ஒரு காட்சி சந்தோஷமாகவும், ஒரு காட்சி துக்கமாகவும், மாறி மாறி காட்டி நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் பட முழுக்க சோகமாக இருந்தாலும் இந்த சந்தோசமான காட்சிகளை அதற்குள் திணித்து நாம் எந்த இடத்திலும் சோர்ந்து போய் விடக்கூடாது என்பதை கவனமாக கையாண்டு இருக்கிறார் .
பட தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

பாராட்டு பெறுபவர்கள் தயாரிப்பு – ஜெ ஸ்டுடியோ, ஜேசு சுந்தரமாறன் . இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக்,

நடிகர்கள்,

அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக்,

எழுத்து இயக்கம், தமயந்தி.

இயக்குனர் நல்ல கதையை கவனமாக கையாண்டு இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

ஒரு ஆணவக் கொலை சம்பந்தமான கதையில் கத்தி, ரத்தம் ,எதுவும் இல்லாமல் கவனமாக கையாண்டு மக்களில் மனதில் உள்ள ஆழமான சாதிய எண்ணங்களை, வேறு அறுக்க சமத்துவமான படைப்பை கொடுத்திருக்கிறார். யார் மனதையும் கீராமல், யார் மனதையும் சங்கடப்படுத்தாமல், ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார். அவள் அப்படித்தான்” போன்ற படங்கள் வெளியாகும் போது பேசவில்லை காலம் கடந்தும் பேசப்படுகிறது. அது போன்று இந்த கலை படைப்பு காலம் கடந்தும் நின்று பேசும் ,வென்றே தீரும்.

இந்த படத்தை பாராட்டாமல் வேறு எந்த படத்தை பாராட்டுவது ஊடகங்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான கலை படைப்பு. இந்த படத்தில் பங்கு பெற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🙏

மக்கள் தொடர்பாளர் குணா அவர்கள் படத்தை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்